சனி, ஜூலை 09, 2011

எண்ணம் போல் வாழ்க்கை

ஆக்கம்: வினோதினி பத்மநாதன், டென்மார்க்.

நாம் நினைத்தால் நம் எண்ணம் மூலம் எந்த ஒரு விடயத்தையும் நம் பக்கம் ஈர்க்க முடியும். 
நாம் நல்லதை நினைக்கிறோமோ அல்லது கெட்டதை நினைக்கிறோமோ என்பது நமது மனதுக்கு தெரியாது. ஆனால் எதை நினைத்தாலும் அந்த நினைப்பையே நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் மனதுக்கு உண்டு.
நம் எண்ணங்கள் தான் நம் மனதை மேம்படுத்துகின்றன.

அதாவது சிலரை பார்க்கும் போது இவன் மிகவும் அதிஸ்டசாலி, நம்மை விட  எல்லாவகையிலும் உயர்ந்தவன் என்று பிறரோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து, நாமே நம்மை தாழ்ந்தவர்களாக கருதிக்கொள்கிறோம். அதாவது நாம் பணக்காரராய் இருப்பதும், ஏழையாய் இருப்பதும், வல்லவராக இருப்பதும், வலிமை அற்றவராக இருப்பதும், அடுத்தவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏற்படும் தோற்றங்களே தவிர உண்மையானவை இல்லை.

பெருமை - சிறுமை
செல்வம் - வறுமை
அறிவுடைமை - அறிவின்மை
அழகு - அழகின்மை
வலிமை - பலவீனம்

இவைகள் எல்லாமே நாமே நம்மை அளந்து கொள்ளும் அளவுகோல்கள். இவற்றை அடிப்படையாக வைத்தே இந்த உலகில் ஒருவர் மதிக்கப்படுகிறார், அல்லது அவமதிக்கப்படுகிறார். ஒரு சிலரிடம் உள்ள சில தகுதிகள் மற்றவர்களிடம் இருப்பதில்லை, அவன் தகுதிகளை பொறுத்தவரை அவன் உயர்ந்தவன் என்றால், என் தகுதிகளைப் பொறுத்தவரை நானும் உயர்ந்தவன். ஆகவே யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களோ, உயர்ந்தவர்களோஇல்லை. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பது எல்லோருக்குமே இயல்பாக உள்ள ஒரு ஆசை தான். உங்கள் எண்ணங்களால் நீங்கள் ஒரு தாழ்வு மனப்பான்மை உடையவராக ஆகிவிட்டால் வாழ்வில் முன்னேறவே முடியாது .ஏனெனில் முன்னேறுவதற்கான ஊக்கம் உங்களின் மனதிலிருந்து நீங்கியிருக்கும் அல்லது தோல்வியையே எதிர் நோக்கிக் கொண்டிருக்கும்.


வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இயல்பான விடயங்கள். அறிவுடையவன் இவை இரண்டையும் சமனாகக் கருதுவான். சரி அந்த அளவுக்கு நம்மிடம் பக்குவம் இல்லாவிட்டாலும் தோல்வி வரும் போது துவண்டு போய் விடாமல் இருக்கவாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்விக்கு பயந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் ஒதுங்கத் தொடக்கி விட்டால் வாழ்வில் நாம் முன்னேற முடியாமலே போய் விடும்.

எனவே நாம் எண்ணுகின்ற உயர்ந்த எண்ணங்கள் தான் மனதிற்கும் உள்ளத்திற்கும் செழிப்பை தருகின்றன. ஆகவே தாழ்வு மனப்பான்மை என்ற எதிரியை நம் உள்ளத்திலிருந்து அகற்றி, மனதிலே நல்ல எண்ணங்களை நினைந்து, எண்ணத்தால் உயர்ந்து வாழ்வோம், நம் வாழ்வை
வளமுறச் செய்வோம்.

13 கருத்துகள்:

kowsy சொன்னது…

உண்மைதான் வினோதினி. எண்ணம் போல் தான் வாழ்வு. ஒரு மனிதனின் எண்ணம் அவன் உருவத்தையே மாற்றிவிடுகின்றது.

seetha சொன்னது…

நாம் ஒரு நல்ல மனிதனாக vaala முயலும் போது விதி வந்து இடையில் நின்று இடையுறு செய்யும் கடவுள் சோதனை என்பார்கள், அனாலும் நம் மனதுக்கு தெரியும் நாம் செய்து கொண்டு இருப்பது நல்லதா? அல்லது கெட்டாத? என்று அதனால் நாம் நல்லதே செய்வோம் நாம் இப்பூமியில் வாழ கிடைத்த சந்தர்ப்பத்தில்
தான் அதை செய்யமுடியும், நாம் எத்தனை தோல்வி வந்தாலும் எதிர்நிச்சல் போடுவோம் வாழ்வை வெல்வோம் நன்றி vinothini

Mathavan Sweden சொன்னது…

Excellent.

Malar Denmark சொன்னது…

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை நினைத் தால் கெட்டது நடக்கும் .

Rogni Denmark சொன்னது…

இறைவன் எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதில்லை .

Uthayan சொன்னது…

yes you are right Rogini some time from god make plaing with people

Nagulan Finland சொன்னது…

தூய சிந்தனைகள் துன்பத்தை தராது .

ரத்னவேல் Norway சொன்னது…

முயற்சி உள்ள மனிதனை முன்னேற்றம் தடுக்காது .

Vathani DK சொன்னது…

Paraddukkal. keep et up.

Vetha.Elangathilakam. சொன்னது…

மொத்தத்தில் மனம் போல வாழ்வு என்பார்களே! இது தான். ரெம்ப மெலிந்தவரைக் கண்டு அவ்வளவும் வினை என்பார்களே ஊரில் நினைவிருக்கா. நான் அதிகம் கூறவில்லை. ஆக்கத்திற்கு வாழ்த்துகள் விநோ. மேலும் முன்னேறுங்கள். இறை ஆசி கிட்டட்டும்.

vinothiny pathmanathan dk சொன்னது…

கருத்துக்கள் தெரிவித்த எல்லா உள்ளங்களுக்கும் எனது அன்பான நன்றி. மீண்டும் சந்திப்போம்.

bamini சொன்னது…

you are naratology we have to telling to you thanks this is from our ought, following like this think more,,,,,vonothini

kumar சொன்னது…

work is worship

கருத்துரையிடுக