சனி, ஜூலை 02, 2011

அந்திமாலையில் அறிமுகம்

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

அந்திமாலையின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுள்ள உங்களில் ஒருவர் இன்று தொடக்கம் ஒரு படைப்பாளியாகவும் அறிமுகமாகிறார். அவர் உங்கள் அனைவர்க்கும் வாசகர் கருத்துரைப் பகுதியில் ஏற்கனவே நன்கு அறிமுகமான திருமதி.வினோதினி பத்மநாதன் ஆவார். இவர் இலங்கையில் யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர், பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். டென்மார்க் நாட்டில் 'ஸ்கெயான்' எனும் நகரத்தில் தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகள் சகிதம் வாழ்ந்து வரும் இவர் மிகுந்த தமிழார்வமும், கலை, இலக்கிய ஆர்வமும் மிக்கவர். இவர் வாசகர் கருத்துரைப் பகுதியில் எழுதிய கருத்துக்களை வைத்து அவரிடமிருக்கும் சமூக அக்கறை, எழுத்தாற்றல் போன்றவற்றைக் கண்டு கொண்டோம். அவ்வகையில் அவரிடமிருந்தும் ஆக்கங்களைக் கோரியிருந்தோம். எமது வேண்டுகோளுக்கு இணங்கித் தனது முதலாவது ஆக்கத்தை உங்களுக்காக அனுப்பி வைத்துள்ளார். இன்று அந்திமாலையில் அவர் எழுதிய 'பெண்களின் வாழ்க்கையில் நாற்பது' எனும் தலைப்பிலான ஆக்கமொன்று வெளியாகின்றது. படித்துப் பயன்பெறுங்கள். அந்திமாலையின் தளத்தில் புதிய படைப்பாளியாக வருகை தந்திருக்கும் திருமதி.வினோதினி பத்மநாதனை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமையடைகிறோம்.


இவ்வண்ணம் 
ஆசிரியபீடம் 
அந்திமாலை  

14 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

This is really good news. I look forward to reading your articles, Vinothini :-D

vetha-Århus சொன்னது…

Yes! good news! and goodluck Vinothini! Today we should be in skjern,But we are sending our son. one engement guess..Best wishes.

kowsy சொன்னது…

வினோதனியை அன்புடன் அழைப்போம். அவர் ஆக்கங்களுக்கும் ஊக்கம் கொடுப்போம்.

Mohan, Denmark சொன்னது…

Welcome..

seelan சொன்னது…

i wish to you all tha best

MAHA DENMARK சொன்னது…

உங்கள் வருகைககு நன்றி .

ELENA DENMARK சொன்னது…

உங்களுக்கு வாழ்த்துக்கள் .

RAMYA DK சொன்னது…

உங்கள் ஆக்கம் பயன் உள்ளது .

Nadanagopal Italy சொன்னது…

mjatche paradukkutjathu.

பரஞ்சோதிநாதன், சந்திரவதனா, டென்மார்க் சொன்னது…

வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.

Vathani DK சொன்னது…

THAT IS A GOOD NEWS.

Thavapalan DK சொன்னது…

ungal puthya mujatce vetiperra kadavul arulputivarrka. manmalum palla akkangalai ather parkerom.

Ravi Skjern Denmark சொன்னது…

Ravi சொன்னது… det er en meget flot historie!

வினோதினி பத்மநாதன். சொன்னது…

அந்திமாலை ஆசிரியருக்கு ,என்னைப் பற்றி ஒரு அழகான அறிமுகத்தினை அந்திமாலை வாசகர்களுக்கு முன்வைத்தமைக்காக எனது நன்றி .
என்னால் முடிந்த வரை வாசகர்களுக்கு பயனுள்ள ,சுவாரஸ்யமான தகவல்களை இணைக்க முயற்சிக்கிறேன் .அன்புடன் என்னை வாழ்த்தி வரவேற்ற அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் . உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் என்னை ஊக்குவிக்கும் .என்றென்றும் அன்புடன் வினோதினி பத்மநாதன்.

கருத்துரையிடுக