சனி, ஜூலை 02, 2011

பெண்களின் வாழ்க்கையில் நாற்பது

ஆக்கம்: வினோதினி பத்மநாதன், டென்மார்க்   


வாழ்க்கையின் படிநிலைகள் வயதின் அடிப்படையில் பார்த்தால், எப்போதுமே இனிமை தரும். இருபது வயதினிலே காலத்தைக் கழிக்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது.

அந்த வகையில்
40 வயது என்பது பெண்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு காலம்.

பாடசாலை,  மேற்படிப்பு, காதல், கல்யாணம், குழந்தைகள் எனப் பல கட்டங்களை தாண்டி ஒரு பக்குவத்திற்கு வந்து விடும் பருவம் எனச் சொல்லலாம். அத்துடன் உடல், மனம், நிதிப் பிரச்சனைகள் போன்ற வேறு பல பிரச்சனைகளும் ஆரம்பிக்கும் காலம் இது. இவற்றினை எப்படி எதிர்கொண்டு இந்தக் காலத்தைக் கடப்பது
???


இதோ நான் அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்:

1)

உடலிலே கல்சியம் குறைய ஆரம்பிக்கும் காலம் இது. ஆகவே கல்சிய சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2)உணவிலே அசைவ உணவுகள், உறைப்பு/காரம், உப்பு இவற்றைக் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். 

3)

நேரத்திற்கு உணவை உண்ண வேண்டும்.

4)

இதய நோய்களைத் தடுக்கக் கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5)

அத்துடன் வாழைப்பழம், பேரீச்சம்பழம் கீரை வகைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் .

6)

அடிக்கடி தேநீர், கோப்பி(காபி) குடிக்கும் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளுக்கு இரண்டு லீட்டர் தண்ணீர் குடிப்பதை கட்டாயம் கடைப்பிடியுங்கள் .

7)

நார்ச்சத்து நிறைந்த உணவுகளான தக்காளி ,கொய்யாப்பழம் ஆகியவற்றை உணவிலே சேர்த்துக் கொள்ளுங்கள்.

8)

Sugar(Diabetes) எனப்படும் நீரிழிவு நோயின் ஆரம்பமே இந்த 40 களில் தான். ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறந்த உடல் பயிற்சி ஆகும். அதன் மூலம் பல பிரச்சனைகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கலாம் .

9)

நாற்பது வயதை தொடுபவர்களின் இன்னொரு முக்கிய பிரச்சனை கண்பார்வை. இதற்கு அதிகாலையில் எழுந்து வெறும் கண்களால் சூரியனைப் பார்ப்பது கண் குறைபாட்டை குறைக்க உதவும். (மேற்கத்திய நாடுகளில் இது கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் ட்ரை பண்ணுங்க) உணவில் கீரை, கரட் போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.

10)
நிறைய காய்கறிகள் ,பழங்கள்,தண்ணீர், உடல் பயிற்சி, இவையே மிகச்சிறந்த ஆயுதங்கள், நோயை விரட்டுவதற்கு.

11)

வீட்டில் உள்ளவர்களுடன் எந்த விடயத்தினை எடுத்துக் கொண்டாலும் விவாதம் புரிவதை விடுத்து, பிரச்சனைகள் குறித்து தனிமையில் சிறிது நேரம்  சிந்தியுங்கள். கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் உகந்ததல்ல.

12)

நிதியைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்து வாழும் நம் போன்றவர்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சனை இல்லாமல் இருந்தாலும், சிக்கனம், சேமிப்பு இவை இரண்டும் எப்போதுமே வாழ்வில் இருந்தால் வாழ்வு இன்பமயமாகவே தோன்றும்.

இறுதியாக எனக்கு
40 வயசு ஆகிறது, வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் நமக்கு எதற்கு இத்தனை அலங்காரம், ஆடம்பரம் என்று நினைத்து உங்களைப் பற்றியும்,  உங்கள் உடல்நலனைப் பற்றியும் கவலைபடாமல் குடும்பம் பிள்ளைகள் என்று சிந்தித்து நம்மை நாமே நோயாளி ஆக்காமல், குடும்பத்தினரையும், அதே நேரம் உங்கள் உடல் நலத்திலும் அக்கறையுடன் செயற்படுங்கள். நமக்கு வயதிற்கு ஏற்ற உணவுப் பழக்கங்களையும், நமக்குப் பொருத்தமாகவும், அழகாகவும் உடுத்திக்கொள்ளவும், உடல் அமைப்பிற்கும் உயரத்திற்கும் நிறத்திற்கும் ஏற்ற ஆடைகளை இனம் கண்டு கொள்ளவும் பழகிக்கொள்ளுங்கள். ஆள்பாதி
ஆடைபாதி என்று சும்மாவா சொன்னார்கள் ,எனவே அன்பான சகோதரிகளே
! மாறிவரும் கால சுழலுக்கு ஏற்றபடி பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொண்டு இந்த நாகரிக உலகில் நாமும் வாழப் பழகிக் கொள்வோமே! பொறுப்புக்கள் சூழ்ந்த, கடமைகள் நிறைந்த இந்த பருவத்தை பக்குவமாக மாற்றி இந்த வயதையும், வாழ்க்கையையும் கொண்டாடுங்கள்!


9 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

Very good. I like your article. Keep it up Vinothini.

Vetha.Elangathilakam. சொன்னது…

good vino! vaalthukal! go ahead!....

kowsy சொன்னது…

மொத்தத்தில் கட்டுப்பாடு அவசியம் என்கின்றீர்கள். வாழ்ந்துதான் பார்க்க வேண்டும். வாழ்த்துகள்.

Mohan, Denmark சொன்னது…

Very good. You have a talent.. Keep it, sister.

பரஞ்சோதிநாதன், டென்மார்க் சொன்னது…

நன்றாக உள்ளது உங்கள் ஆக்கம். பாராட்டுக்கள்

வினோதினி பத்மநாதன். சொன்னது…

எனது ஆக்கத்திற்கு கருத்துத் தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனு,வேதா ,கௌரி,மோகன் , மற்றும் பரஞ்சோதிநாதன்
எல்லோருக்கும் நன்றிகள் .

kumar சொன்னது…

a limitted food giving good for health

வினோதினி பத்மநாதன். சொன்னது…

yes. you are right kumar.

vinothiny pathmanathan dk சொன்னது…

yes .you are right kumar.

கருத்துரையிடுக