ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
நட்பு
நட்பு விலை மதிப்பற்றது. நல்ல
நட்பாக இருக்கும் வரையில்.
நட்பாக இருக்கும் வரையில்.
நல்ல நட்பு கெட்டவனையும் திருத்தி
நல்லவனாக்கும் திறன் உடைத்து.
நல்லவனாக்கும் திறன் உடைத்து.
நிறை குறைகளை எடுத்துக் கூறுதலை
கறையாக எண்ணுவோன் நண்பனாகான்.
கறையாக எண்ணுவோன் நண்பனாகான்.
இன்ப துன்பங்களைப் பரிமாறும் நட்பிதயத்தை
எண்ணுதல் இன்பம் உடைத்து.
எண்ணுதல் இன்பம் உடைத்து.
திறவாத நல்ல புத்தகம் போன்று
உறவாடா நட்பு ஆகும்.
உறவாடா நட்பு ஆகும்.
நீருயர தாமரைத் தண்டு உயர்வதாக
அறிவுடையார் நட்பால் நாமுயர்வோம்.
அறிவுடையார் நட்பால் நாமுயர்வோம்.
பேச்சிலும், செயலிலும், மாறுபடுவோர் நட்பைத்
துறத்தல் நல்ல செயல்.
துறத்தல் நல்ல செயல்.
வேறுபாடின்றி உறவாடும் நட்பு யார்
கூறு போட்டாலும் விலகாதது.
கூறு போட்டாலும் விலகாதது.
தேவைக்கு நெருங்கியும், அல்லாவிடில் தூரவாகும்
நட்பு விலக்குதற்கு உரியது.
நட்பு விலக்குதற்கு உரியது.
4 கருத்துகள்:
நன்றாக இருக்கிறது. என்ன இந்தக் காலத்தில் நம்பிக்கைக்குரிய நல்ல நட்பு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது .அதையும் மீறி அப்படி ஒரு நட்பு அமைந்து விட்டால் அந்த நபர் நிச்சயம் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவரே .நன்றி
மிகவும் அழகாக உள்ளது உங்கள் வாழ்வியல் குறள்.
திருவள்ளுவரின் குறளை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உங்க வாழ்வியல் குறள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும். ரொம்பவே நல்லா இருக்குதுங்க.
நட்பு உலகில் சிறப்பாக இல்லை என்பது உங்கள் கருத்துகளிலிருந்து புரிகிறது. உங்கள் கருத்துகளிற்கு மிக்க நன்றி. அனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
கருத்துரையிடுக