வியாழன், ஜூலை 14, 2011

வாழ்வியல் குறள் - 3

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 


இல்லறம்
ணும் பெண்ணும் மனமொத்து இணைந்து (இணைக்கப்பட்டு)
வாழும் வாழ்வு இல்லறம்

ல்லறம்’ பெயரில் பல இணைகள் 
பொல்லா வாழ்வு அமைக்கிறார்கள்.

ல்ல மனைவி (கணவன்) குழந்தை கொண்டவர்
நல்லறமாக வாழ்வைச் செலுத்தலாம்.

பெயரிற்குச் சோடியாகவும் இல்லத்தில் மிக
துயருடன் வாழ்வது இல்லறமல்ல.

ணவனும், மனைவியும் ஒத்த ஒழுக்கம்
அமைந்தவரானால் இல்லம் சிறக்கும்.

ல்லறத்தில் நல்ல குழந்தைகள் வாழ்வில்
மாபெரும் செல்வம் ஆகும்.

ல்லத்தில் பெற்றவர் முன் மாதரியானால்
பிள்ளைகள் அவ்வழி தொடர்வர்.

ற் குடும்பம் அமைப்போர் வாழ்வு
வெற்றியுடைய இல்லறம் ஆகும்.

ணவனோ, மனைவியோ கெட்ட வழி 
சென்றால் இல்லறம் பாழாகும்.

ல்ல இல்லறம் தலை நிமிர்ந்து
வாழும் தகுதி தரும்.

8 கருத்துகள்:

Abi, Norway சொன்னது…

உங்கள் வாழ்வியல் குறள் மிகவும் நன்றாக உள்ளது

Arun Denmark சொன்னது…

Fantastik.

பெயரில்லா சொன்னது…

Abi, Arun and anthimaalai.. Thank you so much...

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் வாழ்வியல் குறள் இன்றைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .குடும்பத்தில் கணவனோ மனைவியோ
தங்கள் தனிப்பட்ட ஆளுமையை /அதிகாரத்தை செலுத்த முற்பட்டால் அது நல்லறமாக இருக்க முடியாது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பினை பழகிக் கொண்டு வாழ்தலே நம் பிள்ளைகளுக்கும் நாளைய அவர்களின் எதிர்காலத்துக்கும் சிறப்பாக இருக்கும் .உங்களைப் பார்த்து தான் நாளை உங்கள் பிள்ளைகள் வாழக் கற்றுக் கொள்வார்கள் என்பதனை நினைவில் கொண்டு இல்லத்தை நல்லறமாக மாற்றி வாழ முயலுவோம் . நன்று

Ramanan DK சொன்னது…

நல்லது.

Yoga Denmark சொன்னது…

விட்டு குடுத்து வாழ்ந்தால் வாழ்கை சிறப்பு.

uthayan சொன்னது…

A rolling stone gathers no moss'' thanks vetha,,, continue your work

sarvan sigapor சொன்னது…

if feel others pain, you will be the poet of pain

கருத்துரையிடுக