புதன், ஜூலை 06, 2011

என்னையே நானறியேன் - 3ஆக்கம்: கௌசி, ஜேர்மனி

 உள்ளுரமொடு உற்றறிவது பெருத்தது
     கண்ணுறக்கமும் உடலயர்ச்சியும் வெறுத்தது
     பல்கலைகளும் பயில்பயிற்சியும் வளர்ந்தது
     நல்மதியுடன் மாணவர்களும் மகிழ்ந்தனர்
     நல்லறிஞர்கள் நாட்டுயர்வினர் நாடவே 
     பற்கலையுடன் விழாவொன்று நடந்தது
     விளையாட்டுடன் விருதுகளும் கிடைத்தன.


பிரமாண்டமான இவ்விழாக்களும் விளையாட்டுப் போட்டிகளும்
 நடந்தேறி சூழல் சுற்றங்களின் கண்களும் இக்கல்விச்சாலையிலே மொய்த்தன. அக்கல்விச்சாலையைத் தம்பக்கம் அபகரிக்கத் தமிழ்க்கல்வி நிறுவனம் போட்டா போட்டி போட்டது. மாணவர்களைத் தம் பக்கம் இழுக்கவும், அவர் மனதை மாற்றவும், தம் கல்விச்சாலையுடன் வரதேவி வளர்த்தெடுத்த கல்விக்கோயிலை வலுக்கட்டாயமாக இணைக்கவும் பல கஷ்டங்களைக் கொடுத்தது. வரதேவி ஆத்மதொழிலுக்கு அடிக்கடி இடையூறுகள் தலையெடுக்கத் தொடங்க, ஆண்டுகள் கடந்தன. அன்புமகன் அடியெடுத்தான், எழுதுகோல் பிடித்தான், வரி தொடுத்தான். பாலர்பாடசாலை நோக்கி அவனது தினசரி வாழ்வு திருப்பம் கண்டது. அவள் தேடலறிவின் பார்வை, ஆணிவேராய் நம்பியிருந்த தன் குடும்பத்தலைவன் குணங்களின் குழறுபடியில் நோட்டம் கண்டது.

நண்பர்கள் வருகையின் போது மாத்திரம் ஏதாவது சிற்றுணவாய்க் கடிக்கவும், குடிக்கவும் பயன்பட்ட பழக்கம் நாளுக்குநாள் உற்ற தோழனாய், உற்சாக பானமாய் உடலுள் சென்று தீவிர உணர்வுடன் தீவிரமாய்த் தொழிற்பட்டு அன்புக்கு விரோதியானது. நீரோடும் உடல் வேண்டும். நீரோடு வாழ வேண்டும். அந்நீரோடு மது சேர்ந்தோடினால், உளவோட்டம் நெருங்கிவிடும், உளநெருக்கடி கண்டுவிடும். 

அன்று அளவுக்கு மீறிய குடிபோதையில் கத்தி எடுத்தான். கத்தி என்றால், வெட்டும் என்று அறிந்திருந்தும் தீட்டிய கத்தியில் கூர்பரிசோதனை செய்யத் துணிந்தான். 'விடுங்கோ! உங்களுக்கென்ன விசரே பிடிச்சிருக்கு. விடுங்கோ கத்தியை விடுங்கோ''. வரதேவி போராட்டமானது புனிதம் இழந்த அவன் போக்கால் தோல்வி கண்டது. தனது கையைக் கத்தியால் சீவி எடுத்தான். கையிலிருந்த வடிந்த இரத்தத்தைப் பார்த்து ஒரு கோரச்சிரிப்பு சிரித்தான்.  
5 விரல்களால் குருதியை அள்ளி எடுத்தான். வீட்டுச்சுவரிலே அச்சடித்தான். 

விரல் ஓவியங்கள் குருதிக்கலவையில் விசித்திரமாய்த் தோன்றின. அவள் அசையவில்லை, கண்கள் இமைக்கவில்லை, விறைத்த பார்வையில் விடுபடவில்லை. முதலுதவி செய்ய முன்வரவில்லை. அவள் இரக்கமுள்ளவள், ஆனால்,  இரக்கமற்ற விலங்குகளிடம் அவ் இரக்கம் துடிப்படைய மாட்டாது. அவள் பாசமுள்ளவள். ஆனால், பண்பில்லாதவர்களிடம் அது அடிபணிய மாட்டாது. வெட்டியவனே கட்டுப் போட்டான். எப்படிப்பட்டவனானாலும் காயம் மாற்ற மருத்துவர்கள் தயங்காது தொழிற்படல் மருத்துவதர்மம் அல்லவா. அதனால், பிழைத்துப் போனான். நாளுக்குநாள் வீட்டில் பேயாட்டம். அடித்து நொறுக்கும் கண்ணாடிப் பாத்திரங்களே, நாளும் அவ்வீட்டில் ஒலிக்கும் இசைக்கச்சேரி. குருதிவாடையே அவ்வீட்டின சாம்பிராணி வாசனை. நான்கு சுவருக்குள்ளே
 4 வயதுக் குழந்தையின் இதயம் உடைந்த போனது.  பயங்கர மிருகங்களிடையே அகப்பட்ட சின்னப் பூனை போல் உடல் நெளிந்து நெளிந்து ஒளிந்து வாழ்ந்தான் சின்னவன்.

கணவன் மிருகமானால், ஒதுங்கிப்பதுங்கி வாழும் ஒரு அப்பாவியாய் ஒரு பெண் வாழ வேண்டும். தீமையைத் தட்டிக் கேட்கும் தீவிரவாதியாகவோ அதட்டலுக்கோ மிரட்டலுக்கோ அடிபணியாத மனத் தைரியம் மிக்கவளாகவோ வாழ்ந்தால் அவள் வாழ்வு "குரங்கின் கைப்பூமாலையே''  

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றது என்பார்களே. சொர்க்கம் கண்மூடிக் கொண்டு தான் மானுக்கு மதயானையை நிச்சயிக்குமோ.                  அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து அக்கினி வலம் வந்து மாங்கல்யம் அணிவிக்கின்றார்களே அது ஏன்? அம்மி போல் கல் மனம் கொண்ட ஆண்மகனும் உண்டு என்பதற்காகவோ! அருந்ததி காட்டகின்றார்களே, கற்புக்கரசியாய் கணவன் தவறுகளைக் கண்டு கொள்ளாதே என்பதற்காகவோ. 
அக்கினி வலம் வருகின்றார்களே, அது ஏன்? வாழ்க்கை என்னும் தீக்கு அருகே வந்துவிட்டாய். எட்டி அவதானமாய் நில். உன் வாழ்வை எரித்துவிடும் வல் அரக்கர்களும் இருக்கின்றார்கள் என்று அச்சுறுத்துவதற்காகவோ!இத்தனை சடங்குகளும் செய்து பத்துப் பொருத்தம் பார்த்து குடும்பமாய் இனமாய் நண்பர்களாய் சேர்ந்து குதூகலமாய் ஒரு கொடுமைக்குள் அல்லவா வரதேவி வாழ்க்கையைத் தள்ளிவிட்டார்கள். இந்த சாத்திர சம்பிரதாயங்கள் சொன்ன நற்பலன்கள் இங்கு எப்படித் தீப்பலன்கள் ஆயிற்று. இன்னும் உண்டு இதைவிட மேலும் உண்டு. பெண்களே கண்களைத் திறவுங்கள். வரதேவி வாழ்க்கைச் சரிதம் தரும் பாடம் அதுவரை இன்று நிறுத்தி அடுத்த அங்கத்தில் தொடர இருக்கின்றேன்.

தொடரும் 

11 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

It's very sad

seetha சொன்னது…

நமது பெறோர்கள் சாத்திரம் பார்பார்கள் சாதி பார்பார்கள் ஆனால் வாழ்க்கைக்கு ஏற்ற மணமகனை அல்லது மணமகளை தெரிவு செய்து மணமுடித்து வைக்க மாட்டார்கள்

Sakthy, DK சொன்னது…

Totally agree with you, Seetha. If parents are focused on love instead of horoscope and caste system, there would be more happy marriages. If you are unhappy in marriage,so it's better to be divorced, but many don't understand. They would rather have the husband banks wife and kids are growing up in this home. Before the two young people learn each other, the family presses them to have children very fast. There are many people who doesn't understand the meaning of Marriage. It's one of our dark side.
I think it's wrong to bring children into the world before knowing whether they are made ​​for each other

seelan சொன்னது…

வாழ்க்கை என்பது கோவில் அதை நல்லா கொண்டு போக வாழ்வில் தொடங்கிய இரண்டு பேரும் யோசிக்க வேண்டும்
தாடோம் வாழ்வு என்று இளம் பெண் தன மொழி இல்லாத , தன பெற்றோர் இல்லாத வெளிநாட்டுக்கு தன தன கணவரோடு கடைசி வரை வாழவரும் பெண் வாழ்வு வீணாவது பெற்றோர்களால்தான்

kumar சொன்னது…

young people are life, not in perans are life from perans are forsed to tham children, who are we found you have to go marry to them . they are do not know before marryed,they are thinking how am live with this person, first perans are must to our children life we have to good thinking pls dont play to with them life, life is only one time if they are got love marry mostly people are happy and togethar, we are born only one time in the world,,,,,,,,,,,,,

வினோதினி பத்மநாதன். சொன்னது…

வரதேவியின் வாழ்விலே நடந்தது ஒரு வேதனையான விடயம் தான் ,தன் வாழ்வே அஸ்தமித்து போனது போல இருக்காமல்
தன் கணவனை திருத்த முயல வேண்டும் . முடியாவிட்டால் தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக
பெற்றோர் மீது பழியை சுமத்த முற்படுவது உகந்ததல்ல .எந்த ஒரு பெற்றோரும் தீய பழக்கங்கள் கொண்ட மணமகனை தேர்ந்தெடுத்துத் தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முயல மாட்டார்கள் . வரதேவியின் வாழ்க்கையை ஒரு தீய பழக்கங்களைக் கொண்டமணமகனை தேர்ந்தெடுத்து கெடுத்துவிட்டார்களே என்ற ஆசிரியரின் எண்ணத்துடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை .எந்த ஒரு பெற்றோரும் அறிந்தே தன் பிள்ளையை கொடுமையான ஒரு வாழ்க்கைக்குள் தள்ள மாட்டார்கள் .சில வேளைகளில் சூழ்நிலைகள் தான் அப்படி மாறி விடுகின்றன.

பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தால் தான் வரதேவி வாழ்க்கை பிரச்சனைக்குள்ளானதா?
அப்படியானால் தாங்களே காதலித்து திருமணம் முடித்த எந்த தம்பதிகளும் முரண்பாடுகளை
சந்தித்ததில்லையா ?எங்கள் தாத்தா பாட்டி ,இல்லை அம்மா அப்பா இவர்களில் அநேகர்
பெற்றோரின் தெரிவுக்கேற்ப தங்கள் வாழ்க்கை துணையை அமைத்துக்கொண்டவர்கள் .ஆனால் இப்போதுள்ள எம் தலைமுறையில்
50 %-- 75 % மேற்பட்டோர் தம் வாழ்க்கைத்துணையை தாமே தெரிவு செய்கின்றனர் .இவர்களில் எந்த தலைமுறையை
சேர்ந்தவர்கள் மனமொத்த தம்பதிகளாக நீண்டகாலம் தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார்கள் ?.ஆகவே
இரு மனங்களும் இணைந்து ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பெற்றோர் நிச்சயித்த திருமணம் ,அல்லது
காதல் திருமணம் என்ற பேதம் தேவையில்லை . புரிந்துணர்வும் ,விட்டுகொடுப்புமே தேவை. அதனைப் புரிந்து கொண்டு
நடப்பது தான் சிறந்த தம்பதியர்க்கான எடுத்துக்காட்டு .

seetha சொன்னது…

hallo
vinothini i am telling you in europa life நாம் தேடிய வாழ்க்கை சில வேளை பிரச்சனை வந்தாலும்,, பெற்றோர் தேடிய வாழ்வு பெரும்பலகவே
கவலையோடு தான் வாழ்கிறார்கள் நீங்கள் வரதேவி போல எத்தனை பெண்கள் மனித மிருகங்களோடு தான் பெற்ற பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கழிக்கிறார்கள். உண்மையாகவே
காதலித்தவன் முன்பு தனை விரும்பும்போது அந்த நேரம் அவளின் தாய தந்தை
எவளவு அடி வேண்டி என்னை மணந்தாலே என்பதை
ஒரு நிமிடம் நினைத்து பார்பான் , பெற்றோர்கள் குற்றவாளிகள் (வரதேவி தேனோடும் வாழ்வு என்று

நினைத்து வந்தாள் கண்ணில் நீரோடும் என்று நினத்தளோ )

uthayan சொன்னது…

womens are going to divorsed or seperate liveing not eacy from our culture

karan சொன்னது…

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயப்படுத்தப் படுகிறது என்பார்கள் ஆனால் சிலபேரின் வாழ்க்கை என்ன நரகம்
ஆகிறது என்னை பொறுத்த மட்டில் காதல் திருமணத்திலும் பேச்சு திருமணமே, நல்லை அமைவதில்லை

kowsy சொன்னது…

என்னைப் பொருத்தவரை சாத்திரம் சம்பிரதாயங்கள் வெறும் சடங்குகளே வாழ்க்கை இல்லை. பெற்றோர் தவறான கணவனை தமது வாரிசுகளுக்குத் தேடுவதற்குத் துளியும் மனம் தரார். ஆனாலும். வாழ்க்கை என்பது மனிதனுக்கு ஒரு தடவையே வருகின்றது. அதனை மிருகத்துடன் வாழ்ந்து தொலைப்பது நியாயம் என்று நினைக்கின்றீர்களா? திருந்தாத மனிதர்களைத் திருத்திப் பார்க்க வேண்டும் இல்லையென்றால், நிம்மதியான வாழ்வு நோக்கிச் செல்லவேண்டும். அப்படிச் செய்யவில்லையானால், பலரும் பழிக்கும் பயித்தியமாக மனநோயாளியாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான். பொறுமையை மனிதன் பெண்ணுக்கு மட்டும் படைத்திருக்கின்றான்?

kowsy சொன்னது…

கரண் அவர்களே! சொர்க்கம் நரகம் எல்லாம் நாம் வாழுகின்ற வாழ்க்கையே. வாழும் போதுதான் இவற்றை நாம் காணுகின்றோம். நல்ல பொருத்தம் கிடைத்துவிட்டால், சொர்க்கம். இல்லையென்றால், நரகம். சந்தர்ப்பம் சூழ்நிலையே திருமணத்தை நிச்சயிக்கின்றது. காதலையும் தீர்மானிக்கின்றது. எந்தவித தொடர்பும் இல்லாத ஒருவரைக் காதலிக்க முடியுமா? எனவே எல்லாம் சந்தர்ப்பசூழ்நிலைதான். ஒருமுறை இந்த விவாதத்தை விட்டுவிடுவோமா? சொர்க்கம் நரம் என்பது என்ன?

கருத்துரையிடுக