வியாழன், ஜூலை 07, 2011

வாழ்வியல் குறள் - 2

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 

இறை சிந்தனை

மைதியான இடத்தில் அமர்ந்து இறைவன்
அருகே செல்ல முயல்.
ண்டவன் சந்நிதியின் அமைதி ஒருவன்
மீண்டெழுந்திடும் மனவியல் வழி.
தெய்வ வழிபாடின்றேல் உலகில் மனிதன்
உய்வது, உயர்வது எங்ஙனம்!

துர்க்குணங்களை அழிக்க இறை சிந்தனை
துப்பாக்கியாகும், வாழ்வு ஒளிரும்.
குறைகளை மானசீகமாக இறையிடம் கொட்டு
கறைகள் காணாமற் போகும்.
ரவும் பகலும் இறையை நினை.
வரமாகும் நிறை நிம்மதி.
நெஞ்சுரம், நீதி, இறை சிந்தனையால்
வஞ்சமில்லா வாழ்வு பெறலாம்.
ஞ்சமா பாதகங்களை இறை சிந்தனை
அஞ்சி ஓடச் செய்யும்.
தவன் கண்ட பனி நீர் தான்
மாதவன் நினைவில் துன்பம்.
தும்பிக்கையானைத்  துதித்தால் தினமும் நம்பிக்கை
நல்ல எண்ணம்  பெருகும்.

7 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

Good

seetha சொன்னது…

கடவுள் தான் எந்த நேரத்திலும் மனிதருக்கு கை கொடுப்பான் அவன் என்றி அணுவும் அசையாது
நன்றிகள் vetha excellent

vinothiny pathmanathan dk சொன்னது…

I agree with you seetha .
அவன் இன்றி அணுவும் அசையாது .great job vetha aunty

Arul, DK சொன்னது…

Well done

Thavapalan DK சொன்னது…

அழுக்கற்ற மனதில் ஆண்டவன் எப்பவும் கூடவே இருப்பார்.

seetha சொன்னது…

thanks a lot vinothiny pathmanathan

பெயரில்லா சொன்னது…

god is great people are never help

கருத்துரையிடுக