திங்கள், ஜூலை 18, 2011

ஒட்டகத்தைக் கட்டிக்கோ.., பகுதி 1.1

நேற்றைய தினம் வெளியாகியதன் தொடர்ச்சி...

டேனிஷ் மொழியில்: Johan Joelsson மற்றும் Jonathan Jacobson

தமிழில்: இ.சொ.லிங்கதாசன்

வெகு விரைவில் ஐரோப்பியக் கடைகளில் ஒட்டகப் பால் !
தற்போது அராபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒட்டகப் பாலானது பல்வேறு சுவைகளில், பல வடிவங்களில் விற்பனை செய்யப் படுகின்றது. உதாரணமாக இயற்கையான பால், புளிக்க வைக்கப்பட நிலையில்(மோர் அல்லது தயிர் போன்ற சுவையுடன்) உள்ள பால், புளிக்க வைக்கப்பட்ட ஒட்டகப் பாலில் பேரிச்சம்பழம் சேர்க்கப் பட்ட பால், சாக்லேட் சுவை சேர்க்கப்பட்ட பால், குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பால், ஸ்ட்ராபெரி(Strawberry) பழம் சேர்க்கப்பட்ட பால் போன்ற வகைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் ஐக்கிய அரபுக் குடியரசின்(U.A.E) விவசாயத் துறை அமைச்சு பெல்ஜியத்தின் தலைநகராகிய பிரசெல்சிற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடாக ஒட்டகப் பாலை ஏற்றுமதி செய்யும் முகமாக ஒரு கேள்விப் பத்திரமொன்றை(ஏற்றுமதி விண்ணப்பம்) அனுப்பியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியமானது 'உணவு மற்றும் கால்நடைத்துறை' சார்ந்த அதிகாரிகள் சிலர் அடங்கிய ஐரோப்பியத் தூதுக்குழு ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசிற்கு அனுப்பி ஒட்டகங்கள் வளர்க்கப்படும் பண்ணைகளின் 'தரத்தைப் பற்றி' ஆய்வு செய்தது. இது எதிர்காலத்தில் ஐரோப்பியச் சந்தையில் ஒட்டகப் பால் விற்பனை செய்வதற்கு 'அனுமதிப் பத்திரம்' வழங்குவதற்கான முதலாவது கட்ட நகர்வு ஆகும்.

நன்றி: Samvirke juli 2011

(தொடரும்)

1 கருத்து:

Rogni Denmark சொன்னது…

சுவைத்துதான் பார்ப்போம் ?

கருத்துரையிடுக