சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 13.10.2010 தேதியில் 'அந்திமாலையில்' வெளியாகிய செய்தி மீண்டும் வாசகர்களின் பார்வைக்கு.
இன்றைய தினம் உலகின் அத்தனை ஊடகங்களும் சிலியின் 'சன் ஜோச' நகரத்தின் மீது தங்கள் பார்வையைத் திருப்பி விட்டுள்ளன. 2001 செப்டம்பர் நியூயோர்க்கில் நடைபெற்ற இரட்டைக் கோபுரங்களின்மீதான தாக்குதல், 2004 டிசம்பரில் தென்கிழக்காசிய வட்டகையில் பல லட்சம் உயிர்களைக் காவுகொண்ட 'சுனாமி' அனர்த்தங்களிற்குப் பின்னர் இன்றைய தினம் உலகின் அத்தனை ஊடகங்களும் 'சிலியில் கடந்த 69 நாட்களாக சுரங்கமொன்றில் சிக்கித்தவித்த' 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2000 ஊடகவியலாளர்கள் 'நேரடிச்செய்திகளை' வழங்குவதற்காக சிலியின் 'சன்ஜோச' நகரத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், சிலி, பொலிவியா நாட்டுத் தலைவர்களும் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சன்ஜோச நகரத்திற்கு அருகிலுள்ள 'கொபியாப்போ' சதுக்கத்தில் ஆடிப்பாடி, தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டிருப்பதாகவும், நகரமே விழாக்கோலம் பூண்டிருப்பதாகவும் அந்த நகரத்திலுள்ள டென்மார்க்கின் TV2 செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
தகவல்களுக்கு நன்றி B.T.
1 கருத்து:
செய்திக்கு நன்றி.
கருத்துரையிடுக