திங்கள், செப்டம்பர் 03, 2012

மரண அறிவித்தல்

இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம்,
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த
திருமதி பத்மநாதன் செல்வநாயகி (செல்வி) அவர்கள் 
இன்று (03.09.2012) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். 
தோற்றம்: 11.11.1948
மறைவு: 03.09.2012 

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி கனகசபை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி.தில்லைநாதன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு.பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பரிமளகாந்தி (கனடா),  திருமாறன் (பிரான்ஸ்), மணிமாறன் (இலங்கை), தமிழ்மாறன் (இலங்கை), தமிழினி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், ஸ்ரீதரன் (கனடா),  அனுராதா (பிரான்ஸ்), டயானி (இலங்கை),
பமீலா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருமதி.பூபதியம்மா தருமலிங்கம், திருமதி.சிவனேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரு. தி.பரிமளகாந்தன் (கனடா), திரு. தி.பரஞ்சோதிநாதன் (டென்மார்க்),  காலஞ்சென்ற பஞ்சலட்சுமி, திரு. தி.பாக்கியசீலன் (கனடா), திரு. தி.பற்குணன் (இங்கிலாந்து),  காலஞ்சென்ற பரிமேலழகன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும், சுஜா (கனடா), சுஜன் (கனடா), துதிகரன் (பிரான்ஸ்), விஷால் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக் கிரியைகள் நாளை (04.09.2012) முற்பகல் 9.00 மணியளவில் அல்லைப்பிட்டியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் நண்பகல் 11.30 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: தி.பரஞ்சோதிநாதன் (மைத்துனர்), டென்மார்க்: 0045 97361435

மேலதிக தொடர்புகளுக்கு:

பத்மநாதன் (கணவர்): 0094 213206024

திருமாறன் (மகன்): 0033 143887810

மணிமாறன் (மகன்): 0094 772840436

தமிழ்மாறன் (மகன்): 0094 775174829

11 கருத்துகள்:

vinothiny pathmanathan dk சொன்னது…

திருமதி செல்வநாயகிஅம்மா அவர்களை நாங்கள் ஒருதடவை அவர்களின் இல்லத்தில் சந்தித்த போதே அவரின் உயரிய பண்புகளைப் பற்றி அறிந்து கொண்டோம். மிகவும் அமைதியான அன்புள்ளம் கொண்டவர் .அன்னார் அவர்களின் பிரிவினால் துயறுரும் அவரின் அன்புக்கணவர் ,பிள்ளைகள் ,மைத்துணர்கள் மற்றும் உறவினர் ,நண்பர்கள் அனைவருடனும் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம் .பத்மநாதன் குடும்பம் .டென்மார்க்

vetha (kovaikkavi) சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
உறவுகளிற்கு மன அமைதியை இறைவன் தரட்டும்
எமது ஆழ்ந்த அஞ்சலி.

Moorthy Aruchunan, Germany சொன்னது…

உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கின்றேன்.
(என்னால் இதனை நம்பமுடியவில்லை நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பது
இவருக்கே பொருந்தக்கூடியதாக உள்ளது.) உங்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்.

Amalathas Francis, France சொன்னது…

அவர் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Hari Karan, Germany சொன்னது…

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Velanaiyoor Ponnanna ponnaiah சொன்னது…

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Eswary Benjamin, Denmark. சொன்னது…

அவர் பிரிவால் வாடும் உறவுகளுக்கு அனுதாபங்கள்.

Melinchi Muthan, Canada சொன்னது…

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே.

Vino Rooby, Chennai, India. சொன்னது…

அவர் பிரிவால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இராஜகோபாலன் சின்னத்தம்பி சொன்னது…

அன்னாரின் பிரிவால் வாடும் அன்புள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Selvaratnam Selvakumar சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
எமது ஆழ்ந்த அஞ்சலி

கருத்துரையிடுக