புதன், செப்டம்பர் 26, 2012

எழுத்தாளர் அகிலுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது-2012

Ahil.jpgதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்நியூசெஞ்சரி புத்தக நிறுவனமும்இணைந்து ஆண்டு தோறும் சிறந்த படைப்புக்களை தேர்வுசெய்து விருதுவழங்கிவருகிறதுசென்ற ஆண்டு வெளியான பதின்னான்கு நூல்கள் இவ்விருதுக்குதகுதியானவையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனஅவற்றுள் கனடாவாழ் எழுத்தாளர்அகிலின் 'கூடுகள் சிதைந்தபோதுசிறுகதைத் தொகுப்பிற்கு சிறந்த சிறுகதைத்தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளதுஅகிலின்இச்சிறுகதைத் தொகுப்பிற்கு ஏற்கனவே பல விருதுகள் கிடைத்துள்ளனமணிவாசகர்பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர்விருதுகவிதை உறவு சஞ்சிகையின்சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருதுபுதுவை நண்பர்கள்தோட்டத்தின் இலக்கியவிருதுகவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்தநூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் திகதிகு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கியவிருது கிடைக்கவுள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தகநிறுவனமும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி - 2012 இல் இந்நூலுக்கு சிறந்தசிறுகதைத் தொகுப்பிற்கான எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிவிருது கிடைத்துள்ளது.பெருமைக்குரிய இப்படைப்பாளிகள் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றகலைவிழாவில் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுபெறும் படைப்பாளி அகிலுக்கு அந்திமாலை இணையம் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக