திங்கள், செப்டம்பர் 24, 2012

கல்சியம் மாத்திரைகள் யாருக்கு? எவ்வளவு? எப்படி? எந்த நேரத்தில்?


“நீங்கள் கல்சியம் குளிசை ஒவ்வொரு நாளும் போட வேண்டும்” என மருத்துவர்கள் ஆலோசனை கூறினால், “நான் ஏற்கனவோ தினமும் போடுகிறேன்” என்றுஅல்லது, “மேலதிக கல்சியம் சேர்க்கப்பட்ட பால்மா குடிக்கிறேன்” என்ற மறுமொழிதான் இப்பொழுது கிடைக்கிறது.ஆம்! இன்று நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான்.தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள். ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்.
  • எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும் ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில் சந்தேகம் இல்லை.எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ் நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு.கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200 மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.எடுப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும்.
  • கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு. ஆனால் சற்று விலை கூடியது.கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம் தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக