ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்


” எண்ணம் போல் வாழ்வு”
” மனம் போல் வாழ்வு ”
என மொழி வழக்குகள் கூறவார்கள். ஆச்சிமார், பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஒரு வகையில் இதுவும் சரி தானோ என்று கேள்வி எழுப்புவது கூடாது. மிக மிகச் சரியான கூற்று இது.
மனதில் எந்த நேரமும் துன்ப நினைவில் மூழ்கும் ஒருவர், பிரச்சனையைப் பிசையும் ஒருவர், பேசும் வார்த்தையிலும், அவர் குரலிலும் பிரச்சனை, துன்ப வாடையே வீசும். அவரது மகிழ்வுக் குரல் கூட அழுகுரலாகப் பிரதிபலிக்கும். அவர் பார்வையில் சோகம் வழியும்.
மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார்.  இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உதாரணமாக -   காலையில் முதன் முதலாக ஒருவரைக் காணும் போது அவர் மலர்ந்த முகமாக இருந்தால் நாமும் மகிழ்கிறோம். அவர் உம்மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு போனால் பார்க்கும் எமக்கும் ஏதோ போன்று இருக்குமல்லவா!
பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது. 
கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான்.
இந்தத் துன்பங்களிற்கு நாமே துன்பம் உண்டாக்கி விரட்ட வேண்டும் அல்லவா?
எமது மனம் பிரச்சனையை  உள் வாங்கும் தன்மைப் படியே வெளியே பிரதிபலிக்கின்றது. சோகத்தில் நீந்துபவனுக்குச் சோகம் ஒரு பொருட்டல்ல. அதனுள்ளே ஊறி ஊறி அதுவாகவே அவன் ஆகிறான்.
இதை விட்டு மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.
உங்கள் சோகத்தை வெளியே விசிறி பிறருக்கும் தொற்ற வைத்துச் சூழலையே சோக மயமாக ஆக்குவதை நீங்கள் உணருங்கள்.  இப்படி ஆக்குவதிலும் பார்க்க
பிறரது மகிழ்வில் கலந்து நீங்களும் மகிழ்வேந்துபவராக ஆகுங்களேன்!…….இங்கு சிறிது உற்சாகமும், மாற்றுச் சிந்தனை ஓட்டமுமே தேவைப் படுகிறது….. இதை உங்கள் கைப்பையில் எடுத்துக் கொள்கிறீர்களா?…..
துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா?  கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…
எந்த நேரமும் கண் கலங்கிப் புலம்பி…….சிச்சிச்சீ!…
இந்தாங்கோ!….கைக்குட்டை!……துடையுங்கோ!….
பிள்ளைகளுக்குமெல்லே…தொத்தப் போகிறது!………
உன் பங்கைத் தரமாய் எடு
என்பதில் உறுதிப்படு!
இன்பத்தைப் பண்பாயத் தொடு!
துன்பத்திற்குத் துன்பங் கொடு!


(யேர்மனி இந்து மகேஷ்ன் – பூவரசு சஞ்சிகைக்காக எழுதியது.)

10 கருத்துகள்:

Kanthan, Denmark சொன்னது…

Great.

Suthan France சொன்னது…

Following like this article, Thanks for you

Seetha சொன்னது…

நாம் எத்தனை துன்பத்தை தாண்டி, வாழ்கிறோம் ஆனால் மற்றவர்களுக்கு கட்டாமல் வாழலாம்.

மற்றவர்களுடன் சிரித்து வாழமுடியாது. நமக்கு வந்த துன்பத்திக்கு எப்படி போராடமுடியும் என்று

சிந்தித்து வெல்ல, வழி தேடலாம் அந்த நேரத்தில் எம் உறவோ, உடன்பெறப்போ உதவி செய்ய மாட்டார்கள்

அந்த ஆண்டவன் மட்டும் தான் உதவி செய்வான், நிச்சயம் வெல்லலாம்.


Thanks Vetha. God ples you




vetha (kovaikkavi) சொன்னது…

ஓ! அந்திமாலை!..திடீர் திடீரென அதிர்ச்சிச் சந்தோசம் தந்து மகிழ்வில் ஆழத்துகிறிர்களே!!!!....
ஒரு மனிதனின் ஆக்கம் மதிக்கப் பட்டுப் பிரசுரமாகிறது எவ்வளவு ஆனந்தம்! .மிக்க நன்றி!...நன்றி!.... இறையாசி நிறையட்டும்

Paransothinathan சொன்னது…

அருமையான கட்டுரை.

G. Yalini, Denmark சொன்னது…

Good one... I like your articles, poems, travelstory.. You're so good. Keep it up.

Malar சொன்னது…

Very good article.

vetha (kovaikkavi) சொன்னது…

காந்தன் மிக்க நன்றி கருத்திடலிற்கு.
சுதன் மிக்க நன்றி. நல்லவைகளாகத் தர ஆசைப்படுகிறேன்.
சீதா. மிக்க நன்றி.மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டாம். எமது சுயநம்பிக்கை, இறைவன் துணையென வெல்லலாம்.
திருவாளர் பரம்சோதிநாதன் அவர்களிற்கு மிக்க நன்றி.
யாழினி தாங்கள் என்ஆக்கங்களை வாசிப்பதானால் வலையில் கருத்திடலாமே.என் மனம் மகிழுமே!. ஆரம்பத்தில் கருத்திடக் கஷ்டமானாலும்போகப் போக சரியாகிவிடும்.
மலர் மிக்க நன்றி.எல்லோருக்கும் இறையாசி நிறையட்டும்.
இனி கருத்திடுவோருக்கும் மிக்க நன்றியும், இறையாசிகளும்.

Kumar சொன்னது…

A wondarfull story, organized very well i am happy.

Balan சொன்னது…

Very tactille sensation story All the best.

கருத்துரையிடுக