வியாழன், மே 16, 2013

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு
வளைந்து கொடுக்காத மனிதன் வாழ்வில் நிமிர்ந்து நிற்க முடியாது.
காலியாக இருப்பது நிரம்பியே தீரும்.
கந்தலாக இருப்பது புதிதாக மாறும்.
மூடியே கிடக்கும் கதவு தாழ்ப்பாளைப் பயன்படுத்துவதில்லை.
மென்மைதான் வன்மையை வெல்கிறது.
அதிகமாகக் கொடுப்பன் அதிகம் பெறுகிறான்.
அதிகமாகச் சேகரிப்பவன் அதிகம் இழக்கிறான்.
ஒன்றும் செய்யாமல் இருக்க எவனால் முடிகிறதோ அவனாலேயே எல்லாம் செய்யவும் முடியும்.
தன்னை வெளிப்படுத்துகிறவன் உலகின் கண்களுக்குத் தெளிவாகத் தெரியப் படுவதில்லை.
"தான் அறிந்தவனில்லை" என்று அறிகிறவனே உயர்ந்த அறிஞன்.

என் போதனைகள் மடமை போல் தோன்றுகிறது என்று உலகமெல்லாம் சொல்லுகிறது. என் போதனை உயர்ந்ததாக இருப்பதால்தான் இப்படித் தோன்றுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக