காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில்
வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம்.
ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை.
நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த
காய்கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது.
ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு
வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில்
கால்சியம், ரிபோபிளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம்,
பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள்
பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் வைததிருந்தும்
பயன்படுத்தலாம்.
வெங்காயத்தைக் கடியுங்கள் வெங்காயத்தில் உள்ள வாசனை
கந்தகப் பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப்
பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாசனை மறைய நீண்ட நேரம் ஆவதற்கு
இதுதான் காரணம் இப்படிக் கடித்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி,
முதலியன குணமாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரிபோபிளவின்
என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகிறது.
சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என்றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள்தான் உள்ளன.
தரம் மாறலாமா? வெங்காயத்தை வதக்கியோ வேகவைத்தோ
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ,
குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்துவிடாமல் அப்படியே கிடைக்கும்.
உறைப்பு அதிகமுள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமுங்கூட அழிந்துவிடாமல்
அப்படியே கிடைக்கும்.
உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறுநீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச்
சிவக்கவைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். கபத்தை வெளிக் கொண்டுவரப்
பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங்காயம் சிறந்த உணவு மருந்தாகத்
திகழ்கிறது.
இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.
காய்ச்சல், சிறு நீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய
வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம்
உடலுக்குக் கிளர்ச்சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறாகச்
சாப்பிடுகிறவர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.
உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காயத்தை மட்டும் இரண்டு
வேளை அல்லது மூன்று வேளைக்கு எனப் பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள்
உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குளிர்காய்ச்சல் குணமாக வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்! இதயப் பையின்
சுவர்தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாளங்களில் இரத்த உறைவு
ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால்
உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத்துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக
இரத்தம் செல்லும், நெஞ்சு வலியும் குணமாகும். இதனால்தான் இயற்கை
மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.
இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல்...
மேலும்