ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக்கிய கவனத்திற்கு:
பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை,
தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு
வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர்(நர்ஸ்) அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிற கு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல் ) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய் ய வேண்டும். வயிறுவலி, கல்லீரல் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்ற பிரச்சனைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும், அழுத்தியும், தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.
இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்கவோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்.
புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் 'தவறான தொடுதல்' முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச்சங்கத்தின் தமிழக தலைவர் தெரிவித்தார்.

நன்றி:kirukkal.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக