"பணம் பத்தும் செய்யும்". பணத்தை சேமிக்க விரும்பினால் நீங்களும் சில காரியங்கள் செய்ய வேண்டும்.
இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். வயதாகி ஓய்ந்து போகும் வேளையில் வயிற்றுபாட்டைத் தள்ளக்கூட வழியில்லாமல் போகிறார்கள் பலர். காரணம் எங்கேயோ செல்வத்தை கோட்டை விட்டிருக்கிறோம் என்பதுதான். குருவி சேர்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக சேமித்தாலும், அவ்வப்போது வாழ்வில் வரும் காலச் சுனாமி அத்தனையையும் கரைத்து காலியாக்கி விட்டுச் செல்கிறது. எஞ்சியதில் கூழோ, கஞ்சியோ பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. இந்த வேதனையை தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாமே…! சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.
முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது `சிறுதுளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.
சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் நோக்கம் எளிமையாக நிறைவேறும். அது மேலும் சேமிக்கும் ஆவலைத் தூண்டும். முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பிங்கள். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.
பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு முலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதிடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்த இன்றிலிருந்தாவது வரவு செலவை குறிக்க பழகுங்கள். வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கபடும்.
வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் உங்களை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும். மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.
கவர்ச்சிகரமான... மேலும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக