இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (25.10.2014)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பியக் கண்டத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு) நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்படும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர் அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.
ஆசிரிய பீடம்
அந்திமாலை
www.anthimaalai.dk
1 கருத்து:
எதற்காக இப்படி மாற்றம் செய்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தால் என்னைப்போன்ற படித்தும் அறிவற்ற தற்குறிகளுக்கு உபயோகமாகுமே.
கருத்துரையிடுக