செவ்வாய், அக்டோபர் 28, 2014

காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . . .

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர் கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறை ந்து வருகிறது. 
அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன் னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. 
 
அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளை ந்து கொடுத்து வாழ்வார்கள் என் று சொல்லப்பட்டது. கணவரை விட மனைவி வயது குறைந்தவ ராக இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதி ல் ஒரு விஷயத்தை ஆழ்ந்து கவ னிக்கவேண்டும். 
 
பக்குவமான பருவத்திற்குமுன்பே செய்யப்படும் பால்ய விவாகமும் தவறானது. காலங்கடந்து செய் யப்படும் முதிர் திருமணமும் பிரச்சினைக்குரியது. `பருவத்தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல திருமணத்திற்கு ம் பொருந்தும். 
 
காலங்கடந்த நாற்று கழனிக்கு உதவாது என்பதுபோல், காலங் கடந்த திருமணமும் வாழ்க்கைக்கு உதவாது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப்படுகி றார்கள். அது நல்ல விஷயம் தான். 
 
அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டு க்கொண்டிருக்கிறார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள் ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார் ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீத முள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டு கிறார்கள். 
 
இருவரும் தங்களுடைய... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக