
'அந்திமாலை' என்பது உங்களுக்கான ஒரு 'மேடை' என்பதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வு எய்துகிறோம். இந்த மேடையில் முதலிடம் உங்கள் திறமைகளுக்குத்தான் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இனிவரும் வாரங்களில் வாசகர்களுடைய ஆக்கங்களுக்கு 'அந்திமாலை' முன்னுரிமை அளிக்கவுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
"ஒவ்வொரு மனிதனும் ஓர்கலையில் வித்தகன், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான்" என்ற ஆங்கில அறிஞன் 'பெர்னாட் ஷாவின்' பெருமைவாய்ந்த பொன்மொழிக்கேற்ப செயற்படுவதற்கு 'அந்திமாலை' முடிவு செய்துள்ளது. ஆகவே எமது வாசக உள்ளங்கள் தங்கள் திறமைக்குக் களம் ஒன்று கிடைக்கும் இந்த அரிய நல்வாய்ப்பைப் பயன்படுத்துவீர்கள் என்று 'அந்திமாலை' உறுதிபட நம்புகிறது. "எழுத்துத் துறையில் அனுபவமும் திறமையும் உள்ளவர்கள் மட்டுமே எழுதமுடியும்" என்று எந்தவிதமான சட்டதிட்டமோ, விதிமுறையோ இவ்வுலகில் கிடையாது. நமக்குத் தேவையானதெல்லாம் 'ஆர்வமும், ஊக்கமும்,விடாமுயற்சியும் மட்டுமே. கவிதை, கட்டுரை, கதை எழுத ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் முயற்சிக்கலாம்.

ஆசிரிய பீடம்
அந்திமாலை
1 கருத்து:
godt arbejder...
http://tamilonlinebox.blogspot.com/
கருத்துரையிடுக