ஞாயிறு, செப்டம்பர் 28, 2014

உயிருக்கு உயிரான கிட்னியை (சிறுநீரகங்களை) பாதுகாப்பது எப்படி?

இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டுக்கு இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக் காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டுஅங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.
அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரகவியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும்தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகமாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரகவியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.
ஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.
நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.

காரணங்கள்:
  • சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்,
•வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
•சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
 
அறிகுறிகள்:

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன:

•உடல் எடை இழப்பு
•குமுட்டல் வாந்தி
•பொதுவான உடல்நலக்குறைவு
•சோர்வு
•தலைவலி
•அடிக்கடி ஏற்படும் விக்கல்
•உடல் முழுக்க ஏற்படும் அறிப்பு (ப்ரூரைட்டிஸ்)


பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன:

வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
•இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
•சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
•வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
•மந்தமான துாங்கிவிழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை , நினைவற்ற நிலை
•தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
•தோலில் வெள்ளைநிற படிகங்கள்
•கைகள் பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல் நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன
•அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
•அதிக தாகம் ஏற்படுதல்
•தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
•நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
•சுவாசம் நாற்றம் எடுத்தல்
•உயர் இரத்த அழுத்தம்
•பசியின்மை


எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?

தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலே மருத்துவரை அணுகலாம்.

தடுப்புமுறை:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்’க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்துவிலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது முதுகுத் தண்டின் இருபுறமும் விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் பாதி மூடப்பட்டுள்ள அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் ஒன்று சிறுநீரகம். மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது. இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப் பிரித்தெடுத்து சிறுநீராக வெளியேற்றும் இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப்பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்யிறமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் மூலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்துகொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன.

சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில் சில சிறப்பான பணிகளை செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து சிறுநீரை வடிகுழாய்கள் மூலம் துளித்துளியாக சிறுநீர்ப் பைக்குக் கொண்டு வந்து சேர்க்க உத்தரவளிப்பது, சிறுநீர்ப்பையை விரிவடையச் செய்து சிறுநீரைத் தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை ஓரளவு நிரம்பியதும் மூளைக்கு தெரிவிப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது. திடீரென்று இரவில் மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறியாகும்.

இதுதவிர சிறுநீர் பாதையில் கிருமிகளின் தாக்கம் ஏற்படுவதனாலும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயினாலும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சுக்கிலன் பெருத்துப் போவதாலும் இந்நிலை ஏற்படலாம். சிறுநீர் இறங்காமையும் ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு மணி நேரம் சிறுநீர் பிரியாமல் இருந்தால் அது மிகவும் பயப்படத்தக்க நிலையாகும். சிறுநீரகம் கழிவுப் பொருள்களைவெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது எதனால் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இக்கற்கள் பெரும்பாலும் கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம் விலா எலும்புகள் முடியும் இடத்தில் ஏற்படும். கற்கள் சிறுநீர்க் குழாயில் இருந்தால் வலிமேலிருந்து கிழாக விட்டுவிட்டுத் தொடரும். பொதுவாக இதுபோன்ற சிறுநீரகக் கல்லடைப்பு நோய் ஏற்படாமல் தடுக்க மிக அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில் கற்களுக்கான கரு தோன்றும்போதே அதை அடித்து செல்லும் அளவுக்கு தண்ணீர் குடிப்பது நல்லது. பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற்றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம். கற்களின் இராசயன குணத்திற்கு தக்கவாறு உணவு உட்கொள்வதை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணமாக கந்தகச் சத்து அதிகம் உள்ள நீர் பருகக் கூடாது இறைச்சி, மீன், முட்டை ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது. மனித உடலின் ஆதார சுருதியான சிறுநீரகம் பல்வேறு நோய்கள் உருவாவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே சித்தர்கள் சிறுநீரகச் செயல்திறனை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் யோக மார்க்கங்களையும் சித்த மூலிகை ரகசியங்களையும் கண்டறிந்து உலகிற்குப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.


"அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை".
பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில் ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம் வெளிப்படுகிறது.


இது உண்மைதானா?
நிச்சயமாக இல்லை என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுப்பதற்கும், உருவான பின்னர் கரைப்பதற்கும் எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இந்த நோய் எந்த அளவிற்கு பரவலான நோயாக மாறி இருக்கிறதோ அந்த அளவிற்கு எளிதில் குணப் படுத்தக்கூடிய நோயாகவும் உள்ளது.

நன்றி:சி .ஆர்.இப்ராகீம் மற்றும் 'சிந்திக்கவும்' நெட் 

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…



சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

கருத்துரையிடுக