வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு அடுத்தவர்களிடம் நம் குழந்தைகளை நாமே அவமானப்படுத்துவதை பற்றிய ஓர் விரிவான அலசல்.குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் அடுத்தவர்களிடம், அவர்களைப் பற்றி சொல்லுகின்ற குறைகள் அந்த குழந்தைகள் மனதில் சொல்ல முடியாத சோகங்களை பதிவு செய்துவிடுகிறது.கண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் தன்குழந்தையைப் பற்றிய குறைகளை சொல்லிச் சொல்லி தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கிவிடுவார்கள் பெற்றோர்கள்.மாறாக குழந்தைகள் மனதில் பாரத்தை ஏற்றிவிடுவார்கள்.
அதிலும் குழந்தை யாரிடம் பிரியமாக இருக்கிறதோ அவர்களிடம்தான் நடந்த அனைத்தையும் சொல்வார்கள். குழந்தை மாமாவிடம் பிரியமாக இருக்கிறது என்றால், மாமா வீட்டிற்குள் நுழையும்போது "உன் மருமகன் இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா? என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். மாமா ஏதாவது விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் "நீதான் உன் மருமகனை மெச்சிக்கணும்" என்று ஆரம்பித்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி அவர்களையும் சீக்கிரமே குழந்தையை வெறுக்க வைக்கும் எல்லா முயற்சிகளையும் தொடங்கிவிடுவார்கள்.
உறவுக்காரர்களின் முன் இப்படி அவமானப்படும் குழந்தைகள் அவர்களிடம் எப்படி பழகும்? யாரோடும் சரியாக பழகுவதில்லை என்று பிறகு குறையும் பட்டுக் கொள்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதுதான் என்றில்லை உடன் பிறந்தவர்களிடம் சொல்வதும் அவர்களோடு
ஒப்பிட்டு பேசுவதும் கூட அவமானப்படுத்துவதுதான். சிறுவயதிலிருந்தே "மாமாவுக்கு டான்ஸ் ஆடிக் காமி".. "ரைம்ஸ் சொல்லிக்காமி".. என்று பல பெற்றோர்களுக்கு குழந்தைகள் பெருமையடைவதற்கான வழிமுறைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.வளர்ந்த பிறகு குழந்தைகளை காட்டி பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில் இல்லாமல் வேறு ஏதாவது விஷயங்களில் குழந்தைகள் ஈடுபாடு காட்டினால் அவர்களை துவம்சம் செய்து விடுகிறார்கள்.
ஒப்பிட்டு பேசுவதும் கூட அவமானப்படுத்துவதுதான். சிறுவயதிலிருந்தே "மாமாவுக்கு டான்ஸ் ஆடிக் காமி".. "ரைம்ஸ் சொல்லிக்காமி".. என்று பல பெற்றோர்களுக்கு குழந்தைகள் பெருமையடைவதற்கான வழிமுறைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.வளர்ந்த பிறகு குழந்தைகளை காட்டி பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில் இல்லாமல் வேறு ஏதாவது விஷயங்களில் குழந்தைகள் ஈடுபாடு காட்டினால் அவர்களை துவம்சம் செய்து விடுகிறார்கள்.
“குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள்” என்று ஹோட்டலுக்கு ஹோட்டல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று,குழந்தைகளின் குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை. இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது.
இதனால் ஏற்பட்ட இடைவெளியால் உங்களைப்பற்றிய குறையோடு வளர்வார்கள்.பிற்காலத்தில் உங்கள் குறைகளை உங்களிடமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். குறை சொல்வதை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்வர்கள்.நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்கிற விஷயங்கள் எல்லாம் மனம் விட்டு பேசினால் நீங்களே சரி செய்து
விடுகிற விஷயங்கள்தான். பல நேரங்களில் குழந்தைகளுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று
பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் மனதில்
இருக்கும் காயங்கள் அவர்களை செய்ய விடுவதில்லை.
உண்மையிலேயே
உங்கள் குழந்தைகளின்மேல் அளவற்ற
பிரியமும்,அக்கறையும் இருந்தால்
தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் நன்மை
கருதி அவர்கள் முன்னிலையில் குறைகளை அடுத்தவர்களிடம் எக்காரணம் கொண்டும்
பகிர்ந்துவிடாதீர்கள்.
நன்றி:tamilparents.com
2 கருத்துகள்:
very good point. nice
Good
கருத்துரையிடுக