சனி, பிப்ரவரி 23, 2013

இன்றைய சிந்தனைக்கு

மகாகவி பாரதியார் 

ஊருக்கு உழைத்திடல் யோகம்
பிறர் நலம் ஓங்கிடுமாறு தன்னை 
வருத்துதல் யாகம்;
போருக்கு நின்றிடும் போதும் - உள்ளம் 
பொங்குதல் இல்லாத அமைதி மெய்ஞானம்(வீரம் ).

பொருள்: யோகம் எனப்படுவது யாதெனில் ஊருக்காக உழைப்பது ஆகும். யாகம் எனப்படுவது யாதெனில் அடுத்தவர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை வருத்திக் கொள்வது ஆகும். உண்மையான வீரனும் மெய்ஞானம் பொருந்தியவனும் யார் எனக் கேட்டால் போர்க்களத்தில் நின்றபோதும் தனது கோபத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்பையும் கட்டிக் காத்து, அமைதியாக இருப்பவனே உண்மையான வீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக