ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

1 கருத்து:

Thamizhan சொன்னது…


அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று !


அண்ணாவும் - காமராசரும்!

எழுத்துரு அளவு
தி.மு.க. பெரிய வெற்றியடையும் செய்தி மகிழ்ச்சியுடன் வந்து கொண்டுள்ளது. பெருந் தலைவர் காமராசர் தோற்று விட்டார் என்று தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கூறுகின் றனர். அறிஞர் அண்ணா அனைவரையும் அமைதி காக்கச் சொல்லி மிகவும் வருத்தப் பட்டாராம். காமராசர் வெற்றி பெற்று புது டில்லி சென்றால் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்வார்.நம்மால் அவ்வளவு செய்ய முடியுமா என்றாராம். உலகத் தமிழ் மாநாடு மிகச் சிறப்பாகச் சென்னையில் நடக்கின்றது. முதல்வர் அறிஞர் அண்ணா காமராசரை அழைத்துச் சிறப்பிக்கின்றார். சிலர் கிண்டல் செய்கின்றார்கள். காமராசர் என்ன தமிழறிஞரா என்று அறிஞர் அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுச் சென்னை அரசு மருத்துவமனையிலே இருக்கின்றார். பார்க்க வந்த காம ராசர் மருத்துவர்களிடம் கேட்கின்றார். சரியான பதிலை அளிக்காமல் திணறுகின்றனர். உடனே காமராசர் அமெரிக்கா கொண்டு சென்று மருத்துவம் பார்க்க உடனே ஆவன செய்யுங்கள் ஆம்! என்று ஆணையிடுகின்றார் !

மும்பை விமான நிலையத்திலே நள்ளிரவு நேரத்திலே மாநில ஆளுநர் வந்திருக்கின்றார். அண்ணா அவர்கள் நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அவர் பெருந்தலைவர் காமராசரின் ஆணை! உங்களை இங்கு பார்த்து அனுப்பிவைக்கச் சொன்னார் என்றாராம் .
அது தமிழகம். இன்று நீங்களே சொல்லுங்கள்.

கருத்துரையிடுக