புதன், பிப்ரவரி 06, 2013

மனத்தை அடக்குதல்!

மூச்சைக் கட்டுப்படுத்தி வலிமையற்ற மனத்தை அடக்க வேண்டும். பின் அது கட்டப்பட்ட மிருகத்தைப் போல அலையாது நிற்கும்.

மூச்சின் ஓட்டத்தை மனத்தால் உற்று நோக்கினால், அதுவே மனத்தின் கட்டுப்பாடாம். அவ்வாறு நிலைத்த கண்காணிப்பு மூச்சை உறுதிப்படுத்தும்.

ஒரு மடங்கு வெளி விடுதல், ஒரு மடங்கு உள்ளிழுத்தல், நான்கு மடங்கு உள்ளடக்குதல் என்ற நெறியில் செல்லும் போது மூச்சுக் காற்று செல்லும் நாடிகள் தூய்மை அடைகின்றன.

மந்திரங்களைச் சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு எல்லாம் ஒன்றாகிப் போகும்.

எண்ணங்களை அடக்கும் போது விழிப்புணர்வு தேவை. இல்லையேல் தூக்கம் உண்டாகும்.
தியானம்!

தியானத்தில் ஆன்ம தியானமே சிறந்தது. அது சித்தியானால் மற்றவை தேவையில்லை. மனப்பக்குவத்துக்கேற்ற தியான முறையைக் கைக்கொள்ளலாம்.

தியானத்தின் இடையே ஒளி காணலாம். நாதம் கேட்கலாம். மனதை மயக்கும் காட்சிகள் பல காணலாம். ஆனால் அவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடக் கூடாது.

ஆத்ம விசாரமே ஜபம், மந்திரம், யோகம், தவம் எல்லாம். 


நன்றி: tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக