வெள்ளி, நவம்பர் 04, 2011

குடிப்பழக்கம்

ஆக்கம்: வினோதினி பத்மநாதன், ஸ்கெயான், டென்மார்க்.


சமீப காலமாக குடி அல்லது மது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது. குடிப்பதை ஒரு பெரும் குற்றமாக பார்த்த தமிழ்சமூகம் இப்போது பெண்கள் பீர் அல்லது வையின் குடிப்பதையே தவறில்லை என்று கூறும் கருத்துக்களும் வர ஆரம்பித்திருப்பது வேதனையளிக்கிறது.
அத்துடன் குடிப்பது ஒன்றும் பெரிய தவறே  இல்லை என்பது போன்று நமது சமூகத்தின்   மனநிலையும் பார்வையும்மாறிக்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த எண்ணம் ஆரோக்கியமானதா என்றால் நிச்சயம் இல்லை என்பதுவே உண்மை..
இப்படி குடிப்பவர்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் .ஒன்று அவ்வப்போது குடிப்பவர் ,மற்றவர் குடிக்கே அடிமையாகிப் போன குடி நோயாளி .
முதலில் அவ்வப்போது குடிப்பவர் பற்றி பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட நேர மகிழ்ச்சிக்காக மட்டுமே போதையைப் பயன்படுத்திகொள்கிறார்.இரண்டாமவர் முதலிலே குடிக்கப் பழகும்  போது ஜாலிக்காக தான் என்று ஆரம்பிக்கிறார். முதலில் மாதம் ஒருமுறை என்று ஆரம்பித்து பின்பு கிழமைக்கு ஒரு முறை என்று அதிகமாகி பின்னர் குடிநோயாளி  ஆகிறார் .
ஒரு முக்கியமான வேலை இருக்கிறது    நண்பர்களோ குடிக்க வருமாறு அழைக்கின்றனர் .வேலை தான் முக்கியம் என்று அந்த அழைப்பினை ஏறக மறுத்தால் அவர் குடிக்கு அடிமையாகதவர் என்று புரிந்து கொள்ளலாம். வேலையை அப்புறம் பார்க்கலாம் என்று முதலில் நண்பர்களுடன் குடிக்கக் கிளம்பினால் அவர்தான் நான் குறிப்பிடும் அந்த குடிநோயாளி..முதலிலே நண்பர்களுடன் சிறிய அளவில் குடிக்க தொடங்குபவர் பின்னர் தனியாகவே வீட்டிலேயே பெற்றோர் மனைவி பிள்ளைகளுக்கு முன்பே  மது அருந்தத் தொடக்கி விடுவார்.


அவரே படிக்காத உழைப்பாளியாக இருந்தால் உடல்வலி அதற்காகத் தான் குடிக்கிறேன் என்பார் ,குடிச்சால் வலி போய் விடுகிறது என்றும் சொல்வார். உண்மையிலேயே  மது நரம்புகளை மரத்துப் போக செய்கிறதுஅதனால் தான் என்னவோ உடல்வலி தெரியாமல் போய்விடுகிறது. .அதன் பின் உடலின்பாகங்கள் கெட்டுப்போகிற வரை மது ஒருவரை மயக்கத்திலே வைத்திருக்கிறது .குடி .       உடலை கெடுப்பது மட்டுமல்ல மக்களை சூடு சொரணை அற்றவர்களாகவும் ஆக்குகிறது ..உதாரணமாக எங்கள் ஊர்களையே எடுத்துப்பாருங்கள் .இந்தக் குடிப் பழக்கத்தினால் நொந்து போன குடும்பங்கள் எத்தனை. வாழ வேண்டிய வயதிலே வாழ்வை முடித்து குடும்பத்தை தவிக்க விட்டு சென்றவர்கள் எத்தனை பேர்.வேலை செய்து மனைவி கொண்டு வந்த பணத்தை கூட குழந்தைகளுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் தன் குடிக்காக பறித்துக் கொண்டு போனவர்கள் எத்தனைபேர்
இந்த கட்டுரையை வாசிக்கும் போது உங்களில் பலபேரின் எண்ணங்கள் கடந்த காலங்களை ஒரு தடவை நினைவு கூரும் கல்யாண நாள்பிறந்தநாள்வேலை கிடைத்த மகிழ்ச்சி ,பதவி உயர்வு இப்படி எந்த விடயமாக இருந்தாலும் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பது இன்று எழுதப்படாத ஒரு சட்டமாகவே இருந்து வருகிறது   அதைவிட இளைஞர்களோ வார இறுதி நாட்களை  இதற்காகவே எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கிறார்கள் நாங்கள் உழைத்துக் களைத்துப் போய் இந்த நாட்களில் மகிழ்ச்சியாக இருக்க பயன்படுத்துகிறோம் என்கின்றனர் சிலர்.சரி சில விடயங்களை சரி தவறு என்று விவாதித்துக்கொண்டிருக்க முடியாது தான் ,அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும். குடியும் கூட அப்படித்தான் மாறிக்கொண்டு வருகிறது என்று பட்டும்படாமலும் கருத்துச் சொல்பவர்களும் உண்டு.

 குடிப்பதற்கு முன் சில குற்றங்களை செய்ய பயப்பிடுபவர்கள் கூட குடித்த பின்  தைரியசாலி ஆகி விடுகின்றனர். குடி செய்கிற மிகப்பெரிய கொடுமையே மனிதர்களை வெட்கம் கெட்டவர்களாக மாற்றுவது தான்..   
குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டேன்அல்லது தெரியாமல் பேசி விட்டேன் என்று ஒளிந்து  கொள்ளும் வசதியும் நிறையவே இருக்கிறது .ஏமாற்றுவதோடு குடிப்பவர்கள் பிறரைமட்டுமல்லாமல் தாமே தங்களை ஏமாற்றிக்கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதுவே மறைக்க முடியாத உண்மை  

இந்தக் கட்டுரை யாரின்  மனத்தையாவது புண்படுத்தினால் வருந்துகிறேன்.

9 கருத்துகள்:

Uma ,Trivandrum சொன்னது…

alcohol can corrupt a person's mind .Alchohol abuse and alcohol addiction can result in lots of social problems and unable to subdue his mind, thus cause great harm to others. Among the 5 precepts in Buddhism no to alcohol is the one and Buddhism views "drinking" is the most serious 'offense' .had Buddhism adopted by the Indians there would be no alcohol in our society.The society is now rotten and beyond controllable stage.
Uma ,Trivandrum

Seetha சொன்னது…

நாம் வெளிநாடுகளில் தான் கேள்விபட்டோம், குடிப்பது பெரியபிரச்சனை இல்லை என்று ஆனால், எத்தனை குடும்பம் பிரிந்து பிள்ளைகள், படிப்பில்லாமல் (பணம் இல்லாமல் அல்ல) தகப்பனின் குடியால் மனவேதனை
பயம் ஏதாவது, கேட்டால் அடிப்பதே தவிர அன்பான வார்த்தையை கேட்க, தவம் இருக்கும் தாய் இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். கடவுள்தான் குடிப்பது தவறு வாழ்வை அழிக்கும். என்று
ஆண்களுக்கு அறிய வைக்க வேண்டும்.

B.Lavanya, Ranchi, West Bengal. India. சொன்னது…

"குடி செய்கிற மிகப்பெரிய கொடுமையே மனிதர்களை வெட்கம் கெட்டவர்களாக மாற்றுவது தான்..
குடிபோதையில் தெரியாமல் செய்து விட்டேன், அல்லது தெரியாமல் பேசி விட்டேன் என்று ஒளிந்து கொள்ளும் வசதியும் நிறையவே இருக்கிறது"
சபாஷ் சகோதரி சரியான சம்மட்டி அடி கொடுத்திருக்கீங்க. நம்மவங்க திருந்துவாங்களா
எனக்கென்னமோ நம்பிக்கையில்ல. Anyway உங்களுக்குப் பாராட்டுக்கள்.

vetha (kovaikkavi) சொன்னது…

காலம் மாறுகிறது. எல்லாம் மாறுகிறது. சொந்த மனக் கட்டுப்பாடு தான் தேவை. சுய கட்டுப்பாடு இருந்தால் ஆயிரம் பேருக்குள்ளும் அருமையாகக் குடிக்காது சென்று வர முடியும். நற் பழக்கமும் சுய கட்டுப்பாடும் தான் குடியை நிறுத்த முடியும். விநோ வாழ்த்துகள். தொடரட்டும் பணி.
வேதா. இலங்காதிலகம்.

manuvel mahan சொன்னது…

உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. இதைப் பார்த்து ஒருவராவது திருந்தினால் சந்தோசம் தான். எனினும் இக் கட்டுரை பத்து வருடங்களுக்கு முந்தய நிலைமையையே விவரிக்கிறது.இன்றைக்கு மது பற்றிய சிந்தனை வேறு இடத்துக்குச் சென்று விட்டது. இன்னும் விரிவாக இக்காலச் சூழலை உள்வாங்கி எழுதுவது சிறப்பாக இருக்கும்.

Seelan சொன்னது…

Very good article thanks for Vino

K.Sathasivam, Oman சொன்னது…

Your article is good. Did you know, wine is healthy if you only drink in moderation? There's also alcohol in wine, but not so many percentages as in whiskey and other spirits.I heard that in India & Sri Lanka gives the women who've had alcohol.
Good attempted!

vinothiny pathmanathan dk சொன்னது…

கருத்துரைத்தஅன்புள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

Malar சொன்னது…

Thanks Vino

கருத்துரையிடுக