நாட்டின் பெயர்:
டொமினிக்கன் குடியரசு (Dominican Republic)
அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம் / கரீபியன் கடல்
எல்லைகள்:
மூன்று பக்கமும் நீராற் சூழப்பட்ட தீபகற்பம் என்பதால் வடக்கிலும்,கிழக்கிலும் வட அத்திலாந்திக் சமுத்திரமும், தெற்கில் கரீபியன் கடலும் என கடலாற் சூழப்பட்டு
மேற்கில் மட்டும் 'ஹெயிட்டி' எனும் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ளது.
கடலுக்கு அப்பால் உள்ள அயல் நாடுகள்:
கியூபா, ஜமைக்கா, போர்ட்டோ ரிக்கோ.
தலைநகரம்:
சான்ரோ டொமிங்கோ (Santo Domingo)
அலுவலக மொழி:
ஸ்பானிஷ்
இனங்கள்:
பல இனங்களின் கலப்பு இனத்தவர் 73%
வெள்ளையர் 16%
கறுப்பர் 11%
சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 68,9%
இவாஞ்சலிக்கல் 18,2%
சமயம் சாராதோர் 10,6%
ஏனையோர்(புத்த சமயம், இஸ்லாம், பஹாய் உட்பட) 2,3%
கல்வியறிவு:
87%
ஆயுட்காலம்:
ஆண்கள் 75 வருடங்கள்
பெண்கள் 79 வருடங்கள்
ஆட்சி முறை:
ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசு
ஜனாதிபதி:
லயனல் பெர்னாண்டஸ் (Leonel Fernandez)*இது 22.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
ஹெயிட்டியிடமிருந்து விடுதலை:
27.02.1844
ஸ்பெயினிடமிருந்து விடுதலை:
16.08.1865
பரப்பளவு:
48,442 சதுர கிலோ மீட்டர்கள் (பரப்பளவில் டென்மார்க் நாட்டை விடப் பெரியது ஆனால் இலங்கையை விடச் சிறியது)
சனத்தொகை:
9,378, 818 (2010 மதிப்பீடு)
நாணயம்:
பெசோ (Peso / DOP)
*ஸ்பெயின் மற்றும் ஸ்பெயின் நாட்டினால் ஆளப்பட்ட நாடுகளில் முன்னாள் நாணயமாகவும், சில நாடுகளில் இந்நாள் நாணயமாகவும் 'பெசோ' உள்ளமை குறிப்பிடத் தக்கது.
இணையத் தளக் குறியீடு:
.do
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+1-809 அல்லது 00+1-829 அல்லது 00+1-849
*உலகில் இந்நாட்டிற்கு மட்டும் மூன்று சர்வதேசத் தொலைபேசிக் குறியீடுகள் உள்ளமை குறிப்பிடத் தக்கது.
விவசாய உற்பத்திகள்:
கரும்பு, காப்பி, பருத்தி, கொக்கோ, புகையிலை, அரிசி, அவரை, உருளைக் கிழங்கு, சோளம், வாழைப் பழம், கால்நடைகள், பன்றி, கோழி இறைச்சி, முட்டை, மாட்டிறைச்சி.
வருமானம் தரும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
சுற்றுலா, சீனி தயாரிப்பு, நிக்கல், தங்கம், துணிவகைகள், சீமெந்து, புகையிலை.
ஏற்றுமதிகள்:
தங்கம், வெள்ளி, நிக்கல், காப்பி, கொக்கோ, புகையிலை, இறைச்சி வகைகள், நாளாந்தப் பாவனைப் பொருட்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

- கிறிஸ்தோபர் கொலம்பஸின் இந்தியா நோக்கிய பயணத்தில் இந்நாட்டில் முதன் முதலில் தரை இறங்கினார் என்று கருதப் படுகிறது. மாறாக அண்டை நாடாகிய ஹெயிட்டியில் தரை இறங்கினார் என்று ஒரு சாராரும், இந்நாட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஜமைக்காவில் தரை இறங்கினார் என்று மற்றொரு சாராரும் வாதிடுகின்றனர்.
- உலகில் சுற்றுப் புறச் சூழல் மிகவும் பாதிப்படைந்து உள்ள முதல் பத்து நகரங்களில் இந்நாட்டின் Bajos de Haina நகரமும் ஒன்றாகும். இப்பாதிப்பினால் இந்நகரத்தில் வருடம் தோறும் பல ஆயிரக் கணக்கான குழந்தைகள் கல்வி கற்றலில் மந்தம்(குறைபாடு), சிறு நீராகப் பாதிப்பு ஆகிய குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
- தென் அமெரிக்காவின் போதைப் பொருட் கடத்தல் கும்பல்கள் இந்நாட்டையும் ஒரு முக்கிய தளமாகப் பயன்படுத்தி வருவதாகக் கருதப் படுகிறது.
- நாட்டு மக்களில் 42% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
- கடைசியாக இந்நாட்டில் 2009 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீடுகளின்படி இந்நாட்டில் 57,000 எயிட்ஸ் நோயாளிகள் வாழ்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
- அண்டை நாடாகிய ஹெயிட்டி 'எதிரி நாடாக' இருந்த போதிலும் அந்நாடு கடந்த 2010 ஆம் ஆண்டில் பூகம்பத்தினால்(நில நடுக்கம்) அழிவுக்கு உள்ளானபோது அந்நாட்டிற்கு உடனடியாகவே 'மனிதாபிமான உதவிக்கரம்' நீட்டியதோடல்லாமல் சர்வதேச நாடுகள் ஹெயிட்டிக்கு அவசர நிவாரணப் பொருட்களை (உணவு,மருந்து) தங்களது விமான நிலையத்தினூடாக(Santo Domingo) எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியதால் டொமினிக்கன் குடியரசானது உலக நாடுகளின் நன் மதிப்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது. 2010 ஆண்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஹெயிட்டியில் 300,000 இற்கும் அதிகமான மக்கள் பலியானதும், 1600,000 மக்கள் வீடு வாசல்களை இழந்து நிர்க்கதி ஆனதும், ஹெயிட்டியின் விமான நிலையம், துறைமுகம் ஆகியன பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதமடைந்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
- கரீபியன் கடலில் உள்ள நாடுகளில் இலங்கை இந்தியாவை ஒத்த காலநிலை நிலவும் நாடுகளுள் ஒன்று. ஆதலால் இலங்கை இந்தியாவில் விளையும் பெரும்பாலான காய்கறிகள் இங்கு விளைகின்றன.
- புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் கடைகளுக்கு 'டொமினிக்கன் குடியரசிலிருந்தும்' கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய், புடலங்காய், போன்ற காய்கறிகள் இறக்குமதி செய்யப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக