வியாழன், நவம்பர் 17, 2011

இசைமகன்

ஆக்கம் வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
சைமகன் இசை கேட்டு
அசையாத உள்ளமுண்டோ!…
விசையாக ஆடினான் – வெகு
விநோதமாய் ஆடினான் – விழித்து
அசைபோட்ட இளையவர்
அசைந்தனர், நகலாக ஆடினார். 

        
வன் நிலவு நடையை
பிரதி பண்ணாதார் யார்!
டேஞ்சரஸ், திரில்லர், கிஸ்ரறியென
அறுபது பாடல்களைப் பாடியுள்ளாராம்!
கோடிக் கணக்கில் தானம் செய்தார்!
ஆடம்பர விரும்பியின் நெவலாண்ட் பண்ணை 2600 ஏக்கராம்.

        
கலைவன் அவனெனக் கொண்டு
எழுந்தவர் பலர் கலங்குகிறார்.
நாகரீகம், போதையில் மயங்கி
சாகசம் செய்வதாய்த் தன்
தேகாரோக்கியமிழந்த இசையரசன்
மெழுகுவர்த்தியாய் உருகினான்.

        
பாலபருவப் பாசக் குழப்பத்தால்
நாசம் செய்தான் தன் தோலை.
காசும், வாலிபமும் அழியாப்
பசையென்று,  நிறம் மாற்றும்
வேள்வியால் சிறுகச்சிறுக உயிருக்குக் 
கொள்ளியிட்ட இசைச் சக்கரவர்த்தி.
ற்புத இசைக்கோலம் உலகுக்கு.
நற்தவமாய்த் தன் வாழ்வையாக்காது
போதை நுரையுள்ளே வாழ்வின்
வாதையை மறைக்க முயன்றவன்.
ஐம்பது வயது வரை மில்லியன்களோடு விளையாட்டு.
நல்லபடி அவன் ஆத்மா சாந்தியடையட்டும்.


( 25-6-2009 மறைவு.)
ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் வாசித்தேன்.)

2 கருத்துகள்:

Suthan frans சொன்னது…

Thanks vetha

Arul, DK சொன்னது…

Well done

கருத்துரையிடுக