நாட்டின் பெயர்:

வேறு பெயர்கள்:
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (Democratic People's Republic of Korea)
அமைவிடம்:
கிழக்கு ஆசியா / கொரிய தீபகற்பம்

எல்லைகள்:
வடக்கு - சீனா மற்றும் ரஷ்யா
தெற்கு - தென் கொரியாவின் சூனியப் பிரதேசம் *(சூனியப் பிரதேசம் என்பது இரண்டு நாடுகளுக்கிடையில் எழுத்து மூலமோ அல்லது எழுதப் படாமலோ ஒரு உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட, மனித நடமாட்டம் அற்ற, இராணுவக் காவலரண்கள், படையினர் இல்லாத பிரதேசம் ஆகும். இவ் எல்லை மீறப்பட்டால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் என்பது நீங்கள் அறிந்ததே.
மேற்கு - மஞ்சட் கடல் மற்றும் கொரிய நீரிணை.
கிழக்கு - ஜப்பானியக் கடல்
தலைநகரம்:

இனங்கள்:
கொரிய இனம் எனும் ஒரே ஒரு இனம் மட்டுமே.
மொழிகள்:
கொரிய மொழி எனும் ஒரே ஒரு மொழி மட்டுமே.
சமயங்கள்:
புத்த சமயம் மற்றும் சிறிய அளவில் கிறீஸ்தவம். அரசு எந்த மதத்தையும் ஆதரிக்காததாலும், சமய நடவடிக்கைகளில் மக்கள் ஆர்வம் காட்டாததாலும் நாட்டு மக்களில் பெரும் பகுதியினரை 'நாத்திகர்' என கூற முடியும்.
கல்வியறிவு:

ஆயுட்காலம்:
ஆண்கள் 65 வருடங்கள்
பெண்கள் 72 வருடங்கள்
ஆட்சி முறை:
ஒற்றை ஆட்சி மற்றும் ஒரு கட்சி ஆட்சி முறை.

நிரந்தர ஜனாதிபதி:
இரண்டாவது கிம் சுங் (Kim II Sung)
தேசியத் தலைவர்:
கிம் ஜொங் இல் (Kim Jong il)
பிரதமர்:
சோ ஜொங் ரிம் (Cho yong-rim)*இது 29.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.

ஜப்பானிடமிருந்து விடுதலை:
09.09.1948
பரப்பளவு:
120,540 சதுர கிலோ மீட்டர்கள்
சனத்தொகை:
24,051,218 (2009 மதிப்பீடு)
நாணயம்:

இணையத் தளக் குறியீடு:
.kp
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 850
விவசாய உற்பத்திகள்:
அரிசி, சோளம், உருளைக் கிழங்கு, சோயா அவரை, தானியங்கள், பன்றி இறைச்சி, முட்டை.
தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை உற்பத்திகள்:
இராணுவத் தளபாடங்கள் உற்பத்தி, இயந்திரங்கள், மின்சார உற்பத்தி, இரசாயனப் பொருட்கள், சுரங்கத் தொழில்கள்(நிலக்கரி, இரும்பு, ஈயம்,சுண்ணாம்புக்கல், கிராபைட், செப்பு, ஸின்க், உருக்கு, மற்றும் மதிப்பு வாய்ந்த உலோகங்கள்), துணிகள், உணவு உற்பத்தி.

ஏற்றுமதிகள்:
கனிய வளங்கள், உலோகங்கள், ஆயுதங்கள், இராணுவத் தளபாடங்கள், துணிகள், விவசாய உற்பத்திகள், மீன்பிடி உற்பத்திகள்.
ஒவ்வொரு வாசகரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய வட கொரியா பற்றிய சில குறிப்புகள்:
- உலக நாடுகளின் தொடர்புகளில் இருந்து மிகப்பெரும் அளவில் தன்னைத் துண்டித்துக் கொண்டு / தனிமைப்பட்டு இருக்கும் நாடு இது.
- உலக நாடுகளில் வட கொரியர்களை சுற்றுலாப் பயணிகளாக காண்பது அரிது.
- வட கொரியாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கடிதங்களோ, தொலைபேசி அழைப்புகளோ வருவது அபூர்வம். அண்மைக் காலம்வரை கைத் தொலைபேசி இந்நாட்டில் தடை செய்யப் பட்டிருந்தது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அது தளர்த்தப் பட்டது.
- இந்நாட்டில் 12 பத்திரிகைகளும், 20 சஞ்சிகைகளும் வெளியாகின்றன ஆனால் அனைத்தும் அரசின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றன. இங்கு ஊடகச் சுதந்திரம் என்பது கிடையாது. வேறு நாடுகளின் வானொலியைக் கேட்டல், வேறு நாட்டுப் பத்திரிகையை வாசித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். மேற்படி தவறைச் செய்தமைக்காக சுமார் 50,000 பொதுமக்கள் வரையானோர் சிறையில் தள்ளப் பட்டுள்ளனர்.
- அரசின் சட்டங்களை மீறியமைக்காக சுமார் 200,000 பேர் வரையானோர் சிறையில் வாடுகின்றனர்.
- வட கொரியாவிற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவது மிகவும் குறைவு. அவ்வாறு வந்தாலும் ஒவ்வொரு பயணியும் ஒரு 'வழிகாட்டியுடன்' சேர்ந்தே நாட்டைச் சுற்றி பார்க்க அனுமதிக்கப் படுவார்.அவ் 'வழிகாட்டி' ஒரு இராணுவ வீரராக இருப்பார்.
- வட கொரியாவிற்கு என்று ஒரு நாணயம் இருந்தாலும் அதனை வெளி உலகில் காணபது அரிதாகும்.
- இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் நமது வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் பணம் இல்லை என்றோ, வசதிக் குறைவு என்றோ நாம் வருந்த மாட்டோம்.
- அரசு உலக நாடுகளுக்குப் போட்டியாக 'அணு ஆயுதம்' தயாரித்தபடி இருக்க மக்கள் வறுமை, நோய்கள், போஷாக்குக் குறைவு போன்றவற்றால் துன்பப் படுகின்றனர்.
- பல்லாயிரக் கணக்கான மக்கள் மலேரியா, காசநோய், மஞ்சட் காமலை போன்ற நோய்களால் அவதியுறுகின்றனர்.
- நாட்டிலுள்ள குழந்தைகளில் 60% பேர் போஷாக்குக் குறைவால் துன்புறுவதாக தொண்டு நிறுவனமொன்றின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
- கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இந்நாடு கடைப் பிடிப்பதால் எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கை கடைப் பிடிக்கப் படுகிறது. இதில் உள்ள சிக்கல் யாதெனில் நாட்டின் குடிமகன் ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்க வேண்டும். ஆனால் அவருக்கு சம்பளம் கிடையாது. பணம் என்றால் என்னவென்றே தெரியாத மக்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர். மக்களின் உணவு, உடை, உறையுள்(வீடு) தேவையை அரசு பூர்த்தி செய்கிறது.
- குடி மகன் குடியிருக்கும் வீடு அவருக்குச் சொந்தமானது அல்ல, அவர் வீட்டு வாடகையும் செலுத்தத் தேவை இல்லை. வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் அவர் கண்டிப்பாக உழைக்கக் வேண்டும். விதை, உரம் போன்றவற்றை அரசு கொடுத்து உதவும். அதே போல் அறுவடையில் கிடைக்கும் விளைச்சலையும் அரசு எடுத்துச் செல்லும். இந்நாட்டின் ஒரு சராசரிக் குடிமகனின் மாதாந்த வருமானம் வெறும் 2 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
- இந்நாட்டிற்கான வெளிநாடுகளின் தூதரகங்களில் பெரும்பாலானவை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இயங்குகின்றன.
- உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு.நாட்டின் மொத்தப் படைபலம் 12 லட்சம் படைவீரர்கள் எனக் கருதப் படுகிறது.
- ஒவ்வொரு 25 பொதுமகனுக்கும் ஒரு இராணுவ வீரர் எனும் அடிப்படையில் இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு.
- இந்நாட்டிடம் சுமாராக இரண்டாயிரம் குண்டு வீச்சு விமானங்களும், ஆயிரத்திற்கு மேற்பட்ட போர்க் கப்பல்களும் உள்ளதாக உறுதிப் படுத்த முடியாத மதிப்பீடுகள் தெரிவிகின்றன.
- உலகின் பெரும்பாலான நாடுகள் வட கொரியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. சீனா, ரஷ்யா போன்ற ஒரு சில நாடுகளே வர்த்தகத் தொடர்புகளைப் பேணி வருகின்றன.
- வருடத்தில் சுமாராக 37 நாட்கள் ஐரோப்பாவைப் போல பனிப் பொழிவும், கடும் குளிரும் நிலவும் இந்நாட்டில் குளிரைப் போக்குவதற்கு ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகளைப் போல் வீட்டைச் சூடாக்கும் 'பொறிமுறை' இல்லாத காரணத்தால் மக்கள் வருடத்தில் 37 நாட்கள் கடும் குளிரில் வாடுகின்றனர்.
1 கருத்து:
கொரிய இனம் எனும் ஒரே ஒரு இனம் மட்டுமே.
ஆச்சரியம் தான்.
மேலும் பல ஆச்சரியங்கள்.
நன்றி.
vetha.Elangathilakam.
கருத்துரையிடுக