திங்கள், நவம்பர் 28, 2011

வாழ்வியல் குறள் - 17


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்

புகழ்

ல்ல வாழ்வு, நடத்தை, செயல்களே
ஒருவனிற்குப் புகழ் தருபவை.

குதியானவரைப் பற்றி உண்மையாய், இனிமையாய்
உரைத்தல் புகழ் ஆகும்.

கெட்ட செயல் செய்து  ஒருவன்
எட்டும் பெயர் புகழல்ல.

கேட்டுப் பெறுவதல்ல புகழ், தானாக
நாட்டுவதே புகழெனும் பெருமை.

சாதனையாளரைப் பலர் மத்தியில் புகழ்!
வேதனையதை மனதில் அடக்குதல்.

ளி கொண்ட கைதட்டல், சபையில்
மொழியற்ற புகழ் அங்கீகாரம்.

புகழ்வதில் கஞ்சம் தேவையில்லை. ஒருவனை
இகழ்வதில்  வெகு கஞ்சத்தனமாகு!

புகழை இன்று பணத்திற்கு வாங்குவது
இகழ்வான செயலாகிப் போச்சு.

புகழ் ஒரு போதை. அதை 
அகழ்ந்து புதைப்பதும் வாதை.

புகழோடு பிறப்பவனும் உண்டு. முனைந்து
புகழைத் தேடுபவனும் உண்டு.


4 கருத்துகள்:

M. Harish, Kuwait சொன்னது…

அருமை அருமை...

Sakthy, DK சொன்னது…

Like it very much... very good

Vetha. Elangathilakam. சொன்னது…

மிக்க நன்றி சகோதரர்களே. இறை அருள் கிட்டட்டும்.

Iniya சொன்னது…

அனைத்தும் உண்மையே அருமை அருமை ....!

கருத்துரையிடுக