செவ்வாய், நவம்பர் 08, 2011

நாடுகாண் பயணம் - டிஜிபூட்டி

நாட்டின் பெயர்:
டிஜிபூட்டி (Djibouti)

வேறு பெயர்கள்:
டிஜிபூட்டி குடியரசு (Republic of Djibouti) அல்லது சிபூட்டி குடியரசு அல்லது ஜிபூட்டி, 'டிஜிபோத்தி' எனத் தமிழில் உச்சரிப்போரும் உள்ளனர்.

தலைநகரம்:
டிஜிபூட்டி (Djibouti) *நாட்டின் பெயரும் தலைநகரத்தின் பெயரும் ஒன்றே.

அலுவலக மொழிகள்:
பிரெஞ்சு மற்றும் அரபு மொழி.


இனங்கள்:
சோமாலி 60%, அவ்பார் 35%, ஏனையோர் 5%(பிரெஞ்சு, அரபு, எத்தியோப்பியர், இத்தாலியர்)

சமயங்கள்:
முஸ்லீம்கள் 94% 
கிறீஸ்தவர் 6%

ஆயுட்காலம்:
ஆண்கள் 58,6 வருடங்கள் 
பெண்கள் 63,6 வருடங்கள் 

கல்வியறிவு:
68 %


அமைவிடம்:
கிழக்கு ஆபிரிக்கா 


எல்லைகள்:
வடக்கு - எரித்திரியா 
தெற்கு, கிழக்கு - எத்தியோப்பியா 
தென்கிழக்கு - சோமாலியா 
கிழக்கு - செங்கடல்/ஏடன் வளைகுடா 


ஆட்சிமுறை:
பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முழு அதிகாரமுள்ள ஜனநாயகக் குடியரசு.


ஜனாதிபதி:
இஸ்மாயில் உமர் குலே (Ismail Omar guelleh) *இது 08.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரதமர்:
டிலிட்டா முகமத் டிலிட்டா (Dileita Mohamad Dileita) *இது 08.11.2011 அன்று உள்ள நிலவரமாகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
27.06.1977

பரப்பளவு:
23,200 சதுர கிலோ மீட்டர்கள் (ஏனைய ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய நாடு)

சனத்தொகை:
864,000 (2009 மதிப்பீடு)


நாணயம்:
பிராங் (DJF)

இணையத் தளக் குறியீடு:
.dj

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 253


விவசாய உற்பத்திகள்:
பழங்கள், காய்கறிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள், மிருகங்களின் தோல்கள்.

ஏற்றுமதிகள்:
மறு ஏற்றுமதிகள், காப்பி, மிருகங்களின் தோல்.

நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • பிரான்ஸ் நாட்டினால் ஆளப்பட்டதால் இன்றுவரை பிரான்ஸ் நாட்டிடமிருந்து பாதுகாப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்று வருகிறது.தற்போதும் ஒரு தொகுதிப் பிரெஞ்சுப் படையினர் இந்நாட்டில் நிலைகொண்டுள்ளனர்.
  • அண்டை நாடுகளைப் போலவே இதுவும் ஒரு இஸ்லாமிய நாடு.'அரபு லீக்கின்' ஒரு உறுப்பு நாடு.
  • வறுமை, வரட்சி, வேலையின்மை நிலவும் ஆபிரிக்க நாடுகளில் இந்நாடும் ஒன்று ஆகும்.
  • நாட்டு மக்களில் 42% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • நாட்டில் 50% வரை வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது.
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நாட்டில் முதலீடு செய்யத் தயங்குவதால் நாட்டின் வறுமை அதிகரித்துச் செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக