செவ்வாய், நவம்பர் 15, 2011

நாடுகாண் பயணம் - டொமினிக்கா

நாட்டின் பெயர்:
டொமினிக்கா (Dominica)
*உலகில் டொமினிக்கா எனும் ஒரு தீவும், டொமினிக்கன் குடியரசு என ஒரு நாடும் இருப்பதால் அடுத்த வார நாடுகாண் பயணத்தில் 'டொமினிக்கன் குடியரசு' இடம்பெறவுள்ளது. நாடுகாண் பயணத்தில் திரும்பத் திரும்ப ஒரே நாடு இடம்பெறுகிறது எனக் குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

வேறு பெயர்கள்:
டொமினிக்காவின் பொதுநலவாயம் (Commonwealth of Dominica)


அமைவிடம்:
வட அத்திலாந்திக் சமுத்திரம் / கரீபியன் கடல் 


எல்லைகள்:
தீவு என்பதால் நான்கு பக்கமும் கரீபியன் கடல், 
இருப்பினும் வடக்கில் குவாட்டலூப்(Guadeloupe) எனும் நாடும், தெற்கில் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள மார்ட்டினிக்கூ(Martinique) எனும் நாடும்(தீவும்) உள்ளன.


தலைநகரம்:
ரோசோ (Roseau)


அலுவலக மொழி:
ஆங்கிலம் 


அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மொழிகள்:
டொமினிக்கன் கிரியோலி மற்றும் பிரெஞ்சு 


இனங்கள்:
கறுப்பர் 86,8 %
கலப்பு இனத்தவர் 8,9 % 
கரீபியர்கள் 2,9 %
வெள்ளையர் 0,8%
ஏனையோர் 0,9% 



சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 80% 
சிறிய அளவில் புரட்டஸ்தாந்துகள்,
முஸ்லீம்கள்.


கல்வியறிவு:
94%


ஆயுட்காலம்:
ஆண்கள் 73 வருடங்கள் 
பெண்கள் 79 வருடங்கள் 


அரசாங்க முறை:
பாராளுமன்றக் குடியரசு 


ஜனாதிபதி:
நிக்கலஸ் லிவர்பூல்(Nicholas Liverpool) *இது 15.11.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

பிரதமர்:
ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்(Roosevelt Skerrit) *இது 15.11.2011 அன்று உள்ள நிலவரம் ஆகும்.


ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
03.11.1978


பரப்பளவு:
750 சதுர கிலோ மீட்டர்கள்.


சனத்தொகை:
72,660 (2009 மதிப்பீடு)


நாணயம்:
கிழக்குக் கரீபியன் டாலர் (XCD)


இணையத் தளக் குறியீடு:
.dm


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 1-767


விவசாய உற்பத்திகள்:
வாழை, புளிப்பான பழங்கள், மாம்பழம், கிழங்குகள், தேங்காய், கொக்கோ.


பிரதான வருமானம் தரும் தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
சுற்றுலா, சோப்(சவர்க்காரம்), தேங்காய் எண்ணெய், கொப்பரை, மரத்தளபாடங்கள், சீமெந்துக் கற்கள்(கான்கிரீட்)தயாரிப்பு, சப்பாத்துக்கள் தயாரித்தல்.


ஏற்றுமதிகள்:
வாழைப்பழம், சோப்(சவர்க்காரம்), வாசனைத் தைலம், காய்கறிகள், தோடம்பழம்(ஆரஞ்சு), எலுமிச்சை வகைகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:

  • 'டொமினிக்கா' என்பது லத்தீன் மொழியில் 'ஞாயிற்றுக் கிழமை' என்று பொருள்படும். கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது கடற் பயணத்தின்போது  ஒரு ஞாயிற்றுக் கிழமை இத்தீவைக் கண்டு பிடித்ததன் காரணமாக இத்தீவுக்கு இப்பெயர் ஏற்பட்டது.
  • 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே இத்தீவில் மனிதக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் பட்டதால் இப்பகுதியில் உள்ள 'வயது குறைந்த தீவு' என அழைக்கப் படுகிறது.
  • நாட்டின் பிரதான வருமானம் வாழைப்பழ ஏற்றுமதியால் கிடைக்கிறது.
  • நாட்டு மக்களில் 30% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • சுமார் எழுபதினாயிரம் பேரைக் கொண்ட நாடாக இருப்பினும் இந்நாட்டிற்கு இராணுவம் கிடையாது.
  • சிறிய நாடாக இருப்பினும் இந்நாட்டில் மூன்று ஆங்கிலப் பத்திரிகைகள் வெளியாகின்றன, இரண்டு தொலைக்காட்சிச் சேவைகள் இயங்குகின்றன, ஐந்திற்கும் மேற்பட்ட வானொலிச் சேவைகள் இயங்குகின்றன்.இரண்டு விமான நிலையங்கள் இயங்குகின்றன.
  • 2000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை காணப்படுகிறது.

1 கருத்து:

Seetha சொன்னது…

எங்களுக்கு நிறைய நாடுகlai பற்றி அறிய தந்த அந்திமாலையே நீ நீடுழி காலம் வாழ்க........

கருத்துரையிடுக