புதன், நவம்பர் 09, 2011

மக்கடோனிய மரகதம்

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 
க்கடோனிய மண், ஸ்கோப்யத்தில், மலர்ந்த
மரகதம், அக்னெஸ், பன்னிரு வயதில்
பரவசம் இறையழைப்பு என்றுணர்ந்தார்.
சரணமான தேவ அன்பைப் பரப்பினார்.
துள்ளும் இளமைப் பதின்ம வயதிலவர்
தௌ;ளிய அமுதம் இறையருள் வயமானார்.
உள்ளுறை இன்ப இளமையுணர்வைக்
கொள்ளியிட்டு அருட் கொடியேற்றினார்.
தினெட்டில் பிறந்தகம் விலகிய சேவகியார்
பதியாம் கல்கத்தா கன்னிமாடத்தில் பயின்றார்.
புதிதாய்ப் பயில டப்ளின் பறந்தார்.
நிதியாய்; இந்தியாவில் கன்னியாஸ்த்திரி பிரதிக்ஞை.
பதினேழு வருடம் சென்மேரீஸ் ஆசிரியை.
பதவியைத் துறந்தார் சேரிக் குழந்தைகளுக்காய்.
படிப்பிற்குத் திறந்த வெளிப்பாடசாலை திறந்தார்.
பரிசுத்த அவதாரமானார் இருபதாம் நூற்றாண்டில்.
துயரில் பிறருக்காய் உருகிய தூயவர்
அயர்லாந்தில் பயின்ற அன்னை திரேசா,
அயர்வற்ற சேவையில் அட்சயபாத்திரமானார்.
ஆதரவற்றோருக்கு அபயக்கரமீந்த அன்பரசி.
ஆதரவின் இலக்கணம், அறநெறியாளி திரேசா.
பசிக்கு உணவீந்த அன்புக் கங்கை திரேசா.
காசம், பால்வினை பாரிசவாதம், குஷ்டரோகிகளையும்
நேசமாய்த் தொட்டார்,  பல பரிசுகளும் பெற்றார்.
ன்னை திரேசாவின்...:
தோற்றம்: 27 ஆவணி, 1910.
மறைவு: 5 புரட்டாதி, 1997.
சமாதானப் பரிசு (போப்): 1971.
நேருவின் பரிசு: 1972.
நோபல் பரிசு: 1979 லும்                                                                                                                                                               இன்னும் ரெம்பிளெட்டோன்                                                                                                                          மக்செய்;செய;பரிசுகளையும்; பெற்றார்.)
( ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மக்கடோனிய மரகதம் - இதை அந்திமாலையில் பீரசுரித்தமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். இறை அருள் கிட்டட்டும்.

கே.சரவணன் சொன்னது…

நன்றி வேதா மேடம். ரொம்ப அருமை உங்க ஆக்கம்.

Vetha. Elangathilakam. சொன்னது…

அன்பான அன்புள்ளங்களே கருத்திடும் போது இடம் நகரப் பெயர் போட்டால் உங்களை எம்மால் இனம் காண முடியுமல்லவா?.டென்மார்க் அருள், தேவன் என்றால் பலர் உள்ளனரே! நகரப் பெயர் கூறினால் சுலபம் அல்லவா இனம் காண. எங்களுக்கும் ஆர்வம் தானே இது யாரென அறிய. நன்றி. அனைவருக்கும் இறை அருள் கிட்டட்டும்.

Seelan germany சொன்னது…

Very good Vetha thanks.

vinothiny pathmanathan dk சொன்னது…

nalla pathivu.thanks

கருத்துரையிடுக