வியாழன், நவம்பர் 03, 2011

விவசாய வாத்தியார்

ஆக்கம்: மனுவேல் மகன்,  பிரான்ஸ் 

"விவசாய வாத்தியார்" 
என எங்களால் செல்லமாக அழைக்கப் பட்ட 'திரு. இலட்சுமிகாந்தன்'ஆசிரியர் அவர்கள் எங்களுடன் மிக்கத் தோழமையுடன் பழகி வந்தவர்.எட்டாம் வகுப்பிற்குப் பின் விடலைகளாய் இருக்கும் மாணவர்கள் மட்டுமே கொண்ட விவசாய பாட வேளை, எங்களுக்குப் பலதையும் கற்றுக் கொடுத்தது. படக் கதைகள் சொல்லியிருக்கிறார்.பாடுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. நன்றாகப் பாடும் அவரை அடிக்கடி பாடச் சொல்லி கெஞ்சுவோம்.எப்போதாவது அருமையாய்ப் பாடுவார். அவர் பாடும்  மாசில் வீணையும் தேவாரம் வழமையான இராகத்தில் இல்லாமல் வேறு விதமாய் இருக்கும். இன்றுவரை நான் அவரின் பாணியிலேதான்  அந்தத் தேவாரத்தைப் பாடுகிறேன்.  தடுப்புக்கள் இல்லாத நான்கு வகுப்பறைகள் கொண்ட மிகநீண்ட மண்டபத்தில் அவர் ஒருமுறை, எமது வகுப்பில் இத்தேவாரம் பாடியபோது முழு மண்டபமுமே  நிசப்தத்தில் இருந்ததை மறக்கமுடியாது.(பரீட்சை வேளையில் கூட நாம் அப்படி அமைதி காத்ததில்லை.)

பருவ வயதில் புரியாத, புரியவேண்டிய பல கேள்விகளுக்குப் பட்டும் படாமலும் பதில் அளித்து,எங்களைக் கெட்டுபோகாமல் காக்க முயன்றிருக்கிறார். விவசாயம் என்றில்லாமல் எங்களுக்கு ஆசிரியர் வராத பாடவேளையில் அவருக்கு வகுப்பில்லாவிட்டால் தானாகவே முன்வந்து சமயம், தமிழ், சமூகவியல் எனத் தன்பாணியில் பாடம் எடுப்பார்.
இப்படி அவரிடம் படித்த கம்பராமாயணச் செய்யுள்களை இன்றுவரை மறக்கமுடியவில்லை.அவ்வளவு சுவையாக நடத்துவார்.

என்மேல் மிகுந்த அக்கறையும், தனிக்கவனமும் கொண்டிருந்த அவருடன் ஒரு நண்பன் போல பழக முடிந்தது. அதுவே பத்தாம் வகுப்பின் தொடக்கத்தில் எங்களுக்குள் முறுகல் நிலையை கொண்டுவந்தது. நான் விவசாயம் படிப்பதை நிறுத்திவிட்டு இறுதிதேர்வுக்கு சங்கீத ஆசிரியை இல்லாத போதும், சங்கீதபாடம் எடுக்கமுடிவுசெய்தேன்.

"ஆசிரியர் இல்லை மாணவன் சித்தி"  என ஈழநாட்டில் என் பெயர் வர அவரே காரணமுமாய் இருந்தார். பரீட்சை முடிவு வந்த நாளில், எங்கள் முறுகல் நிலை தழர, தானே சித்தி அடைந்ததுபோல் மகிழ்ந்து என்னைப்  பாராட்டி இருக்கிறார்.
இதுபோல அவரிடம் நட்பு, அன்பு,அறிவு, கோபம்,எனக் கற்றதும் பெற்றதும் அதிகம்.

  கூடிய விரைவில் ஊருக்குப் போகவேணும்.நிறையப் பேரைச் சந்திக்கவேண்டும் என்று ஒரு அட்டவணை தயாரித்திருந்தேன்.
 அதில் முதல் பத்து இடங்களுக்குள் அவர் பெயரும் இருந்தது.
 காலம் என்னை விட வேகமாய் ஓடக் கூடியது.
 என் அட்டவணையில் மீண்டும் ஒரு பேரை அழிக்கச் செய்துள்ளது.
நன்றி:manuvelmahan.blogspot.com


7 கருத்துகள்:

manuvel mahan சொன்னது…

thanx thasan

Sakthy, DK சொன்னது…

Very good

vinothiny pathmanathan dk சொன்னது…

nice

Antony J, U.K சொன்னது…

Good.Keep it up.

Suthan சொன்னது…

Very good, following

Seelan சொன்னது…

All the best*** from your vacation, i think you do not wait, now is time in srilanka very good. and guite,,,,,

manuvel mahan சொன்னது…

உற்சாகம் தரும் அனைவருக்கும் நன்றி.

கருத்துரையிடுக