வெள்ளி, நவம்பர் 11, 2011

வாழ்வியல் குறள் - 16


ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க் 

பொறுமை.

கழ்வாரைப் பொறுத்தலும் ஓரளவோடு உனை
அகழ்ந்து புதைக்காமற் பார்.
பொறுமையெனும் பண்பு  மனித வாழ்வில் 
பெருடையுடைய ஒரு திறவுகோல்.
ணவம், அகங்காரத்தை பொறுமையால் கொல்பவன்
நாணவும் தேவையில்லை எதற்கும்.
வாயாடியுடன் சொற்களால் பேயாடுவதிலும் பொறுமையுடன்
போராடுதல் வெகு சிறப்பு.
பொறுமையெனும் கனி பழுத்திட கடுமையாக
வறுமைப் படுகிறார் பலர்.
கெட்டவனைத் தன் பொறுமையால் சாதுரியமாய்க்
குட்டுதல் நற் பண்பு.
(மேலேயுள்ள பன்னிரண்டு வரிகளும் வழமை போல நானாக எழுதியது. மகளிடம் போயிருந்த போது பெரிய பிரித்தானியாவில்  இருக்கையறையில் இருந்து இதை எழுதியபடி கதைத்தேன். ”அம்மா என்ன பரீட்சைக்குப் படிப்புது போல செய்கிறா´´  என்று கூறினா. ” ஓன்றுமில்லை மகள்! பொறுமை பற்றி எழுதுகிறேன். பொறுமை பற்றி உன் எண்ணத்தை கூறேன்” என்றேன். கீழ் வரும் எட்டு அடிகளும் அவரின் கருத்துகளே. இவர் மனோ தத்துவத்தில் டிப்ளோமா முடித்தவர்.              இதை ஏன் கூறுகிறேன் என்றால் கீழே வரிகள் முழுவதும் உணர்வு சம்பந்தமாகவே உள்ளது. இது தவிர டென்மார்க்கிலிருக்கும் போது தமிழ் சஞ்சிகைகட்கு கதைகள் எழுதினார். இலண்டனில் தனது வைத்தியசாலைச் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறு கதைகள் எழுதியவர். சிறந்த பாடகி. ஓவியக்காரி. இனி படியுங்கள்!)
க்கம் லாவண்யா. கிறே.(Graham) U.K:
பொறுமை பொறுமையென்று மனித உணர்வுகளைக் 
குறுகிடச் செய்தல் சரியல்ல.
னக்கு ஆபத்து என்றால் பொறுமை
விலக்கு! துணிந்து எழு!
பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
பொறுத்து என்ன பயன்!
கேடு செய்வோரை உணரவிடாது பொறுமையென்று
பாடு படுத்தல் வீண்.

15 கருத்துகள்:

V.Gobalsamy, Kampala, Uganda. சொன்னது…

Very Very Very Nice.I expect much more like this from you.
God Bless You.

Vetha.Elangathilakam. சொன்னது…

I am continueing write like this. almost I am writting now 20 .Thank you for all support. God bless you.

Sinthu, Canada சொன்னது…

Really good... Lawenya is 100% correct.

நிஷா விஜய், தமிழ் நாடு சொன்னது…

ரொம்பவும் நல்லாக இருக்கு...

K. Arul, Waldgirmes (Germany) சொன்னது…

Great

வேணுகோபால், தஞ்சாவூர். சொன்னது…

அட, அம்மாவும் மகளுமா? சபாஷ்! சரியான போட்டி. வேதா மேடம் வெரி சாரி. நான் உங்க பக்கம் இல்ல. உங்க பொண்ணு பக்கம் தானுங்கோ. பாராட்டுக்கள் இருவருக்கும்.

Antony J, U.K சொன்னது…

It seems there is a debate between patience and and impatience. I think Lavanya is very practical. She is right. I could not say it will be 100% or something like that.Vetha aunty 'Patience' is valuable manner. Not in our 21st century. nice job.

Vetha. Elangathilakam. சொன்னது…

சகோதரர் அந்தோனி ! நான் பழமையைக் காக்கவேண்டும் என்பதற்காக இதை எழுதினேன். வாழ்நிலை முறைப்படி மகளின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன் அவ கடந்த ஆடியில் தான் psycho dynamic counsiling/theraphy படிப்பை இலண்டனில் முடித்தார். கிளினிக் திறந்து கவுன்சிலிங் செய்யப் போகிறா. செய்து கொண்டும் இருக்கிறா. அனைத்து அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி உங்கள் அன்பான கருத்துகளிற்கு.God bless you all.

Theepan, Luzern (CH) சொன்னது…

Well done!

Uthayan, Germany சொன்னது…

I like your "Valviyal kural" so much Vedha Madame.

கிருஷ்ணன், சிங்கப்பூர் சொன்னது…

அருமை

Abirami Ganesh, Chennai சொன்னது…

I have no interest for kural (since it is a little difficult to interpret), but your kural is very easy to understand and fit to the present. Although I do not write comments, I read them with great interest Vetha aunt. Your daughter is too clever. Anyone can easily see where her talents come from :-)

Suthan frans சொன்னது…

Very very nice All the best to Vetha

Maran சொன்னது…

Excellent and graet, Thanks Vetha

vetha (kovaikkavi) சொன்னது…

Abiramy Ganesh Chennai thank you very much.God bless you. Vetha.Elangathilakam.

கருத்துரையிடுக