ஞாயிறு, நவம்பர் 20, 2011

நன்றி, நன்றி, நன்றி.

 அந்திமாலையில் வாசகர் வருகை
 25,000 தைத் தாண்டியது.


எமது பேரன்பிற்குப் பாத்திரமான வாசகப் பெருமக்களே!
எமது அந்திமாலையின் உதயம்பற்றி முறைப்படி மின்னஞ்சல் ஊடாகவும், 'முகப் புத்தகம்' (facebook) ஊடாகவும், ஒரு சில அன்பு உள்ளங்களுக்குக் கடிதமூலமாகவும் அறிவித்தல் கொடுக்க ஆரம்பித்த 20.09.2010 தேதி தொடக்கம் இன்றைய தினம் (20.11.2011) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 23.00 மணிவரை 'அந்திமாலை' இணையத்தளத்திற்கு வருகைதந்த வாசகர்களின் மொத்த எண்ணிக்கை 25,000 ஆகியது. இவ்விணையமானது ஒரு ஆத்ம திருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவுமே எம்மால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதன் காரணமாகவே நாம் 'தினசரிச் செய்திகளை' வெளியிடுவதில்லை. உலகில் தினசரிச் செய்திகளை வெளியிடுகின்ற சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இணையத் தளங்களும், தமிழ் கூறும் நல்லுலகத்தைச் சேர்ந்த தனி மனிதர்களால், நேரம் கிடைக்கும்போது பதிவேற்றம் செய்யப்படும் நாற்பதினாயிரத்திற்கு  மேற்பட்ட தமிழ் வலைப் பதிவுகளும் உள்ளன என்பதை உங்களில் சிலரேனும் அறிவீர்கள். மொத்தமாக நாற்பத்திரெண்டாயிரத்திற்கு  மேற்பட்ட இணையங்களோடு போட்டியிட்டு இணைய உலகில் கால் பதிக்க வேண்டிய ஒரு கடினமான சூழலில் 'அந்திமாலை' பிறப்பெடுத்தது. இருப்பினும் எமது அன்பு வாசகர்களாகிய உங்களது ஆதரவால் ஒரு வருடத்தைத்  தாண்டியும் அந்திமாலை ஒரு சிறிய இணையமாக உங்கள்முன் பவனி வருகிறது. ஏறத்தாழ பதினான்கு மாத காலத்திற்குள் வாசகர் வருகைப்பதிவேட்டைத் தமது வருகையால் நிரப்பி, வரவு எண்ணிக்கையை இருபத்தையாயிரத்திற்கு மேற்பட்டவர்கள்' என்ற சிறப்பான நிலைக்குக்  கொண்டுவந்திருக்கும் எமது அன்பு வாசகப் பெருமக்களை 'அந்திமாலை' இருகரம்கூப்பி வணங்குகிறது.
வளர்ச்சிப்பாதையில் ஒரு சிறுமியைப் போல் இருபத்தைந்தாவது அடியை எடுத்து வைத்திருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய இணையத் தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் பேராதரவிற்கு உளமார்ந்த நன்றிகள். உங்கள் பேராதரவு இன்றுபோல் என்றும் தொடரும் என்று உளமார நம்புகிறோம்.
இந்த மனம் மகிழும் இனிய தருணத்தில் எமக்கு ஆக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிய, வழங்கிவருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களையும் நன்றியோடு வணங்குகிறோம். அதேபோல் எங்கள் சோர்வை அகற்றி புத்துணர்ச்சியோடு எம்மைச் செயற்படத் தூண்டும் உங்கள் அனைவரது வருகைக்கும் எமது சிரம்தாழ்ந்த நன்றிகள். தொடர்ந்து எமது தளத்திற்கு வருகை தருவதோடு, கருத்துரைகள் இட்டு எம்மையும், எமது படைப்பாளிகளையும் ஊக்குவிக்கின்ற வாசகர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகுக. அதேபோல் எம்மை தொடர்ந்தும் உற்சாகப்படுத்திய, ஊக்குவிக்கின்ற அத்தனை நல் இதயங்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக.   என்றும் வேண்டும் இந்த இனிய உறவு.
வாருங்கள்! ஒன்றுபட்டு உயர்வோம்.


நன்றியுணர்வுடன் 
அந்திமாலையின் சார்பாக,
இ.சொ. லிங்கதாசன்

20 கருத்துகள்:

Thavam ,germany சொன்னது…

new world as thias a wery imbortent,!!!!!

Anu, USA சொன்னது…

Well done...

ramanan denmark சொன்னது…

jeg er meget glad.

sri france சொன்னது…

i am verry happy.

Amuthan, France சொன்னது…

Félicitations (Congratulations)

MANMATHAN DENMARK. சொன்னது…

TILLYKKE MED ANTHIMAALAI.

துளசிதுவாரகன் சொன்னது…

தைத்திருநாளில்!
என்றும் மங்காத ஒளியோடு வியாபித்து
தமிழர் நெஞ்சங்களில் வாழவேண்டுமென்று
அந்திமாலையை மனதார வாழ்த்துகின்றேன்.

துளசிதுவாரகன்
சுவீஸ்.

jenutha Danmark சொன்னது…

tillykke med anthimaalai

jenoth Danmark சொன்னது…

tillykke med anthimaalai

Web-Master, www.anthimaalai.dk சொன்னது…

Thanks for your comments and encouraging words.

Web-Master
www.anthimaalai.dk

ஆசிரியர், அந்திமாலை சொன்னது…

உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

-ஆசிரியர்-
அந்திமாலை

Kunnam Denmark சொன்னது…

Tillykke med Anthimaalai.

Kanthan Norway சொன்னது…

I am verry happy

Arunan Germany சொன்னது…

Verryvell

Amutha Norway சொன்னது…

Congratulations

Vetha. சொன்னது…

vaalthukal.

vinothiny pathmanathan dk சொன்னது…

இணையத் தளங்கள் பல இருந்தாலும் மக்களைக் கவரும் வகையில் திறம்பட தகவல்களை தொகுத்து வெளியிடும் எந்த ஊடகமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதற்கு அந்திமாலை நல்ல உதாரணம் . அந்த வகையில் அந்திமாலை மென்மேலும் வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் சென்றடைய இந்த வேளையில் உங்களை மனதார வாழ்த்துகின்றேன் .

பரஞ்சோதிநாதன், சந்திரவதனா, டென்மார்க் சொன்னது…

அந்திமாலை இணையத்திற்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்

Maha Denmark சொன்னது…

Tillykke.

ஆசிரியர், அந்திமாலை. சொன்னது…

வாழ்த்திய, பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றிகள்.

கருத்துரையிடுக