வெள்ளி, அக்டோபர் 31, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
 
 
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. (1258)

பொருள்: பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய என் காதலனின் பணிவான மொழி என் பெண்மை என்னும் உறுதியான காவல் அரணை உடைக்கும் படையாய் உள்ளது.

இன்றைய பொன்மொழி

புத்தர்
2610375 

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே – அப்போதுதான் அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான்

வியாழன், அக்டோபர் 30, 2014

செல்வம் எனும் லட்சுமி தேவி நம் வீடு தேடி வர என்ன செய்ய வேண்டும்?

முக்கிய குறிப்பு:இந்த ஆக்கம் கடந்த 18.07.2014 அன்று வெளியிடப் பட்டபோது வாசகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரம் செய்யப் படுகிறது.
-ஆசிரியர்-
வாழ்வில் நல்ல நிலையை அடைய யார்தான் விரும்ப மாட்டார்கள்?
குடும்பத்தில், என்றும் மங்கலம் பொங்க, லக்ஷ்மி கடாட்சம் பெருக, கடன்,
வறுமை, தரித்திரம் முற்றிலும் நீங்கி - ஒரு நல்ல முன்னேற்றம் அடைய பின்வரும் நடைமுறைகளைக் கடைப் பிடித்தாலே போதும்.


• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உள்ள காலப்பகுதிக்கு 'பிரம்ம முகூர்த்தம்' என்று பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும். இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.
• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன்
பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .
• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன்
வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.

  • செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
• வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும்
வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.
• ஒவ்வொரு பௌர்ணமி  அன்றும் மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,
செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உண்ண வேண்டும்.
• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே
கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக (அன்பளிப்பாக/வெகுமதியாக) அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன்  காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..
தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்
நின்று கொடுக்க கூடாது .கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .
• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .


இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது .வெற்றிலை,  வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .
• சுண்ணாம்புடன் வெற்றிலையை சேர்த்து வைக்க கூடாது.
 

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்கக்கூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.
• வீட்டில் யாரையும் சனியனே! என்று திட்டக்கூடாது. 'எழவு' என்ற வார்த்தையையும்
கூறக்கூடாது
• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தானாகவே வந்துவிடும்.
• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின்
அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம்,
கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.  
பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கிக்  கொடுத்து போஷித்தால்?

பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்
வளர்க்கலாம்.
 
சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
 
"விளக்கை அமர்த்துதல்" அல்லது "மலையேற்றுதல்" என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.  
• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.
• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை
செய்யுங்கள்.
 
எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.
 
எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

• எந்தப் பொருளையும் "இல்லை", "இல்லை" எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
• சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
தயிர், அறுகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும்
கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை பசுவின் மாமிசத்துக்கு சமம்.
• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

 
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக
இருப்பது அவசியம்.
பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.
விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்
கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம்
இடுவது அவசியம். பிளாட்களில்வசிப்பவர்கள் தங்கள் மெயின்டோர் வாசலில் கோலம் வரையலாம்.
• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில்
வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

நகத்தைக் கிள்ளி(வெட்டி) வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.
• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில்
உபயோகிக்கவேண்டும்.
• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.

பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.
• தங்கம் எனப்படும் 'சொர்ணம்' மகாலக்ஷ்மியின்அம்சம்என்பதால்அதை
இடுப்புக்கு கீழே பெண்கள்அணியக்கூடாது.
• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி
படங்கள் மீது விழக்கூடாது
• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை
அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.

மேலே கூறப்பட்டவைகளை நீங்கள் செய்தால் உங்களிடம் இருக்கிற செல்வம் தங்கும். 'லட்சுமி தேவி' நம் வீடுதேடி ஓடி வருவாள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

லக்ஷ்மி கடாட்சம்பெருக சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

மந்திரம் 1

"சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்"


மந்திரம் 2

"அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்".


இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது, லட்சுமியை வெள்ளைத்
தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்து வந்தால், மிக உயர்ந்த பதவி / பதவி
உயர்வு கிடைக்கும்.

நன்றி:kaumarapayanam.blogspot.com

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

நாண் என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின் (1257)
 
பொருள்: நான் விரும்பிய காதலர் காமத்தால் எனக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்தாரானால், நாணத்தையும் அறியாமல் இருந்திருப்பேன்.

இன்றைய பழமொழி

மூத்தோர் சொல்

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி.

தினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”! ஆனால் நாட்டுக்கோழி முட்டை மட்டும்தான் ஏற்புடையது

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய் நொடி எதுவும் அண்டாது என்று கூறப்படுகிறது. தாய்பாலுக்கு அடுத்தபடியாக இயற்கையான முறையில் புரோட்டீன் கிடைக்கிறது என்றால் அது முட்டையில் தான். இதில் எக்கசக்க ஊட்டச்சத்துகள் உள்ளன. புரோட்டீன்
தவிர்த்து முட்டையில் வைட்டமின்கள், மினரல்களும் உள்ளன. ஒரு முட்டையில் 70 முதல் 100 கலோரி வரை உள்ளது. மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளது.

ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
இது மட்டுமா முட்டையின் வெள்ளைக்கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்ளிட்ட 11 மினரல்கள் உள்ளன.
மஞ்சள் கருவில் வைட்டமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 உள்ளது.
முட்டை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது. தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு கண்புரை வரும் வாய்ப்பு மிகக் குறைவே ஆகும். மூளை, நரம்பு மண்டலம் மற்றும் இதயத்திற்கு சிறந்தது முட்டை.
மார்பக புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கொண்டது முட்டை. வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு 44 சதவீதம் குறைவு என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முட்டையில் உள்ள சல்பர், வைட்டமின்கள், மினரல்கள் நகம் மற்றும் முடிக்கு நல்லது.
இத்தனை குணநலன்கள் உள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் கொழுப்புச் சத்துள்ளவர்கள் அதை தவிர்க்கவும்.
முட்டையின் முழு குணநலன்களையும் அடைய வேண்டுமானால் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஆகிய இரண்டையும் உண்ண வேண்டும்.
மேலும்
முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.
“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.
அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.
முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.
முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.
வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.
பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .
நன்றி: Haroon Health

செவ்வாய், அக்டோபர் 28, 2014

வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

girl-with-laptopபெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.

ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு. நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை...உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான்...
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட  நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை. செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில்  ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது. காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான். அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை  ரணமாக்குகிறது.. "வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு"… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை  எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி..வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிறுசுகளின்
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது…பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலைபேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை  அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது. இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில்
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்… 

இது கல்லூரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.
நன்றி:eegarai.net

காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . . .

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர் கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறை ந்து வருகிறது. 
அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன் னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. 
 
அப்போதுதான் பெண்கள், புகுந்த வீட்டில் சூழலுக்கு ஏற்ப வளை ந்து கொடுத்து வாழ்வார்கள் என் று சொல்லப்பட்டது. கணவரை விட மனைவி வயது குறைந்தவ ராக இருக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதி ல் ஒரு விஷயத்தை ஆழ்ந்து கவ னிக்கவேண்டும். 
 
பக்குவமான பருவத்திற்குமுன்பே செய்யப்படும் பால்ய விவாகமும் தவறானது. காலங்கடந்து செய் யப்படும் முதிர் திருமணமும் பிரச்சினைக்குரியது. `பருவத்தே பயிர் செய்’ என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல திருமணத்திற்கு ம் பொருந்தும். 
 
காலங்கடந்த நாற்று கழனிக்கு உதவாது என்பதுபோல், காலங் கடந்த திருமணமும் வாழ்க்கைக்கு உதவாது. இந்த காலத்தில் ஆண், பெண் இருவரும் படித்து வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிக்க ஆசைப்படுகி றார்கள். அது நல்ல விஷயம் தான். 
 
அதனால் திருமண வயதை தாண்டிய பின்னும் திருமணத்தை தள்ளிப் போட்டு க்கொண்டிருக்கிறார்கள். தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொள் ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார் ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீத முள்ள காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள அவசரம் காட்டு கிறார்கள். 
 
இருவரும் தங்களுடைய... மேலும் 

திங்கள், அக்டோபர் 27, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றுஎன்னை உற்ற துயர். (1256)
 
பொருள்: என்னிடமுள்ள காமநோய் அளவிட முடியாத பெருமை வாய்ந்தது. இல்லையேல் விட்டுச் சென்ற காதலரைத் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

உங்களுக்கு அடுத்தவர்மீது அன்பு இருந்தால் மட்டும் போதாது.
அது செயலிலும் வெளிப்பட வேண்டும்.

ஐரோப்பிய நேர மாற்றம் : இயற்கையை கட்டுப்படுத்தும் முதலாளித்துவம்

ஆக்கம்: கலையரசன், நெதர்லாந்து.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை/ஞாயிற்றுக்கிழமை (சரியாக ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு) அன்று, "கோடை கால நேரம்" மாற்றுவார்கள். அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும். இதனால், ஐரோப்பாவிற்கும், இந்தியா, இலங்கைக்குமான நேர வித்தியாசம் மூன்றரை மணித்தியாலமாகும். 

அதே மாதிரி ஒக்டோபர் மாதத்தில் வரும் கடைசி வார இறுதி நாளன்று, குளிர்கால நேரம் மாற்றப்படும். அன்று வரும் ஞாயிற்றுக்கிழமை 25 மணிநேரத்தைக் கொண்டிருக்கும். அதனால், இந்தியா, இலங்கைக்கான நேர வித்தியாசம் நான்கரை மணித்தியாலமாக அதிகரிக்கும். (மேற்கு)ஐரோப்பாவைத் தவிர, அமெரிக்கா, கனடாவிலும் நேர மாற்றம் அமுல் படுத்தப் படுகின்றது. இந்த நேர மாற்றத்தை Daylight Saving Time (DTS)  என்று குறிப்பிடுவார்கள்.

ஐரோப்பாவில் வாழும் மக்கள் பலருக்கு, எதற்காக இந்த நேர மாற்றம் என்ற காரணம் தெரியாது. பலரும் இதனை ஒரு பாரம்பரிய கலாச்சாரம் போன்று பின்பற்றி வருகின்றனர். "கோடை காலத்தில், அதிக சூரிய ஒளி கிடைப்பதால், எரிபொருள் மிச்சம் பிடிக்கலாம்" என்று இதற்குக் காரணம் சொல்லப் படுகின்றது. "கோடை காலத்தில் பறிக்கப் படும் ஒரு மணித்தியாலத்தை, குளிர்காலத்தில் திருப்பித் தருகிறார்கள்" என்று பொது மக்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

உண்மையில் இந்த நேர மாற்றம், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. அதுவும், "முதலாளித்துவ நாடுகள்" என்று அழைக்கப் படும், மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே அமுலுக்கு வந்தது. காலப்போக்கில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அந்த நடைமுறையை பின்பற்றத் தொடங்கின. எழுபதுகளில் ஏற்பட்ட, எண்ணைத் தட்டுப்பாடு காரணமாக, எல்லா மேற்கத்திய நாடுகளிலும் பின்பற்றப் பட்டது.
நேர மாற்றத்தை கொண்டு வருவதற்கு, இயற்கை, காலநிலை, எரிபொருள் சேமிப்பு என்று, பலரும் நம்பக் கூடிய காரணங்கள் சொல்லப் பட்டன. ஆனால், ஐரோப்பாவுடன் ஒரே பூகோள அமைவிடத்தை, ஒரே மாதிரியான காலநிலையை கொண்டுள்ள முன்னாள் சோவியத் யூனியனில் அந்தப் பழக்கம் இருக்கவில்லை. இன்றைக்கும் ரஷ்யா, அதனோடு சேர்ந்த நாடுகளில் வாழும் மக்களுக்கு, கோடை கால நேர மாற்றம் பற்றி எதுவும் தெரியாது.

இந்த நேர மாற்றம் குறித்து, பல ஐரோப்பிய மக்கள் மத்தியில் குழப்பமும், சந்தேகமும் காணப் படுகின்றது. பொதுவாக விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது. ஏனென்றால், மிருகங்களும், தாவரங்களும் தமக்கென்று ஒரு நேரத்தை வைத்திருக்கின்றன. மாடு தனது நேரத்திற்கு தான் பால் தரும். செடிகள் தனது நேரத்திற்கு தான் பூக்கும்.

குறிப்பாக, எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே, இந்த நேர மாற்றத்தால் நன்மை அடைந்து வருகின்றன. ஏனெனில், ஐரோப்பாவில் குளிர் காலம் என்பது, நீண்ட இரவுகளைக் கொண்டது. பெரும்பாலான நாடுகளில், மாலை நான்கு மணிக்கே இருண்டு விடும். மீண்டும் சூரிய வெளிச்சம் வருவதற்கு காலை எட்டு மணி ஆகும். அதே நேரம், குளிரும் அதிகமாக இருக்கும். ஆகையினால், மின் விளக்குகள் அதிக நேரம் எரிய விடப் படும். வெப்பமூட்டிகளும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும்.
கோடை காலம் அதற்கு நேர் மாறானது. அதி காலை ஐந்து மணிக்கே சூரிய வெளிச்சம் கண்ணைப் பறிக்கும். இருட்டு வருவதற்கு, சில நேரம் இரவு பத்து மணி ஆகும். அதே நேரம், வெக்கையாக இருப்பதால், வீட்டிற்கு செயற்கை வெப்பம் உண்டாக்க வேண்டிய அவசியம் இல்லை.

எரிவாயு, மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனங்களைப் பொறுத்த வரையில், குளிர்காலம் என்பது அதிகளவு இலாபம் ஈட்டக் கூடிய பொற்காலம் ஆகும். இதனால், குளிர்காலத்தில் ஒரு மணித்தியாலத்தை கூட்டுவதன் மூலம், இலாபத்தையும் பன்மடங்கு அதிகரிக்க முடியும். அநேகமாக, இது ஒரு பகற்கொள்ளை தான். அதனால் தான், இந்த நேர மாற்றம் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமே நடைமுறைப் படுத்தப் படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Daylight Svaing Time (DTS) 

ஞாயிறு, அக்டோபர் 26, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் 
உற்றார் அறிவதுஒன்று அன்று. (1255)
 
பொருள்: தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தன்மை காமநோய் கொண்ட காதலிகளுக்கு ஒரு நாளும் தெரியாது.  

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

தனது பாவங்களைப் பற்றி பிறரிடம் பெருமையாகப் பேசுபவன் இரண்டு பாவங்கள் செய்தவனாகிறான்.

உங்கள் அம்மாக்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசை இருக்கும்.

 ஆக்கம்:கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, திருவள்ளூர், தமிழ்நாடு.
இன்னும் ஒரு தோசை போதும்’ என்று குரல் கொடுத்தபின் வரும் தோசை, முந்தைய தோசைகளைவிட தடிமனாக இருக்கிறதென்றால், தோசை சுடுவது அம்மாவாகத்தான் இருக்கும். ‘டயட்ல இருக்கேன்னு எத்தன தடவ சொல்றது’ என்று அம்மாவை வைதாலும், அம்மா ஊட்டி விடுகையில் அளவுச் சாப்பாடென்பது நிராசைதான்.
‘சாதம் வடிச்சுருக்கேன்டா… சாப்பிட்டுட்டு போ’ என்றவளிடம், ‘நான் ஆபிஸ்ல போய் டேஸ்ட்டான சாப்பாடு சாப்பிடப் போறேனே’ என்று எப்போதும்போல் கிண்டலடித்துவிட்டு கிளம்பிப் போய் மாலை வீடு வந்தேன். அதன்பின் அம்மா கையால் ஒரு பருக்கைகூட சாப்பிடக் கொடுத்து வைக்கவில்லை. 'நெஞ்சு படபடன்னு அடிச்சுக்குதுடா. தொட்டுப் பாரேன்’ என்று அழத்தொடங்கினாள் அம்மா. வீட்டில் நான் மட்டும்தான் இருந்தேன். ‘அய்ய… இதுக்கேம்மா அழற. வா, ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வரலாம்’. போனோம். திரும்ப அவள் வரவில்லை. மூன்று மருத்துவமனைகளுக்குச் சென்று காத்திருந்து, 'மருத்துவர் இல்லை, அனுமதி இல்லை' என்று சொல்லி, நான்காவதாய் ஒரு மருத்துவமனைக்குள் நுழையும்போது என் கையை மிகமிக இறுக்கமாய் பிடித்தபடி படியேறினாள் அம்மா. அந்த இளஞ்சூடு என் கருவறை வெம்மை. அதன்பின் அம்மாவின் கையை நான் தொடுகையில், அது சில்லிட்டு போயிருந்தது. அன்று இரவு என்னோடு சிரித்து பேசிய, தோளில் கைப்போட்டு பைக்கில் வந்த, இறுகக் கைப்பற்றி நடந்த என் அம்மாவை, அடுத்த நாள் மதியம் அஸ்தியாக்கி அதே இளஞ்சூட்டோடு கையில் கொடுக்கையில் சத்தியமாய் செத்துதான் போனேன்.
Farrukh Jaffar அம்மா ஒரு குழந்தை. வார்த்தைக்காக அல்ல. நிஜமாய் அவள் ஒரு குழந்தை. வீட்டுக்கு நான் வாங்கி வரும் சாக்லேட்டுகளை தின்றுவிட்டு, ‘நான் சாப்ட்டேனே’ என்று என்னைப் பார்த்து சிரிக்கும் குழந்தை. ‘கொஞ்சம் வேர்க்கடலை வாங்கிக் கொடுடா’ என்று அத்தனை வாஞ்சையாய் கேட்கும் குழந்தை. ‘நேத்து கடைல வாங்குன அந்த மாவு என்னமாய் பொங்குச்சு தெரியுமா’ என்று கண்சிமிட்டி ஆச்சர்யப்படும் குழந்தை. அம்மாவுக்கென்று தனியாக கனவு ஏதும் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், எங்களுக்காக வாழ்வதை மட்டுமே தன் கடமையாய் ஏற்றுக்கொண்டவள் என்று உறுதியாக கூற முடியும். காலை 4 மணிக்கு அப்பாவுக்கு காபி போட்டுத் தருவதில் தொடங்கி இரவு 11.30 மணிக்கு அண்ணனுக்கு தோசை ஊற்றித் தருவதில் முடியும் அவளின் ஒரு நாள். நடுவில் சீரியல், சமையல் புத்தகம், போன் பேச்சுகள், பல ஏக்கங்கள், கொஞ்சம் கண்ணீர்... இவ்வளவுதான் அம்மா. இப்போது எப்போதாவது அப்பாவுக்கு காபி போட எழும்போதோ, அல்லது வீட்டு வேலைகள் நெருக்கும்போதோ வரும் சலிப்பு, அம்மாவை நினைத்தால் பறந்தோடி விடுகிறது. எப்படி அம்மாக்களால் மட்டும் சுயநலமில்லாமல் வாழ முடிகிறது?
Old indian woman. Brihadishwara Temple. Tanjore (Thanjavur), Tamil Nadu, India. The Greatest of Great Living Chola Temples - UNESCO World Heritage Site
அம்மா எங்களுக்கானவள் மட்டுமல்ல. எங்களை சேர்ந்தவர்களுக்குமானவள். எங்கள் வீட்டுக்கு ஒருமுறை நீங்கள் வந்துவிட்டால் சாப்பாடு சாப்பிடாமல், ஒரு கப் காபியாவது குடிக்காமல் உங்களால் வெளியே போக முடியாது. அம்மா அனுப்பவே மாட்டாள். பல நேரங்களில், எதிர்பாராமல் நண்பர்கள் யாராவது வந்துவிட, தனக்கு வைத்திருந்த உணவை அவர்களுக்கு அளித்து, நேற்றைய பழைய சாதத்தோடு தனது இரவை முடித்திருக்கிறாள் அம்மா. ஒரே ஒருமுறை அம்மாவை நீங்கள் பார்த்து பேசிவிட்டால், இன்னொரு முறை எங்கள் வீட்டிற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள். அம்மாவை உங்களுக்கு அவ்வளவு பிடித்துப்போகும். இதுவரை வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கவில்லை என்றால், அந்த தேவதைப் பெண்ணை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்.
அம்மாவுக்கென்று பெரிதாக என்ன ஆசைகள் இருந்துவிட்டது? ஒரு தங்க நகை வாங்கணும். ஒரேயொரு பட்டுப் புடவை வேணும். அதிகபட்சமாக சொந்த வீட்டுல வாழணும். இவ்வளவுதான். அவள் ஒரு தங்கச் செயின் வைத்திருந்தாள்தான். சென்ற வருடம், நான் குறும்படம் எடுக்க ஏற்பாடுகள் செய்து, பணமில்லாமல் நின்றபோது, அந்த செயினை அடகு வைத்து எனக்கு பணம் கொடுத்தாள். இறக்கும் அன்று காலையில், ‘முதல்ல காசு சேத்து வெச்சு உனக்கொரு ஆட்டோமேடிக் வாஷிங்மெஷின் வாங்கணும்மா’ என்றபோது, அம்மா தயக்கத்தோடு கேட்டது ‘அப்படியே அந்த செயினை திருப்ப முடியாதோடா?’. இன்னும் அதை நான் மீட்கவில்லை. நிச்சயம் மீட்டுவிடுவேன். யார் கழுத்தில் போட?

உங்கள் அம்மாக்களுக்கும் நிச்சயம் ஒரு ஆசை இருக்கும். அது நிச்சயம் உங்கள் சம்பாத்யத்துக்கு உள்ளேதான் இருக்கும். நாம் சம்பாதிப்பதைத் தாண்டி ஆசைப்பட அம்மாக்களுக்குத் தெரியாது. அது என்னவென்று கேளுங்கள். துருவித் துருவிக் கேளுங்கள். இல்லை என்று மறுத்தாலும் இறுதியில் தயங்கித் தயங்கிச் சொல்வாள் அந்த சிறு ஆசையை. உடனே நிறைவேற்றிவிடுங்கள். பணம் வெளியில் புரட்டியாவது நிறைவேற்றிவிடுங்கள். உங்களுக்கு பணம் வரும் வேளைகளில் ஆசைகளை நிறைவேற்றி அழகு பார்க்க அம்மா இல்லாமல் போகலாம். அந்த வலி கொடுமையாய் இருக்கிறது.
war child - tamil grandmother பணமின்மை வருந்தச் செய்வது இதுபோன்ற சூழல்களில்தான். குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கிறோம், எல்லாவற்றையும் செய்த அம்மாவுக்கு எதுவும் செய்யவில்லையே என்று. நாளை காட்சிகள் மாறும்போதும், கனவுகள் பலிக்கும்போதும், உடனிருந்து கண்ணீர் மறைத்து சிரிக்க அம்மா இல்லையே என்ற நினைப்புதான் முதலில் வரும். ‘சினிமால டைரக்டராகப் போறேன். அதுவரைக்கும் பெரிசா பணம் எதுவும் வராது’ என்றபோது, ஒரு சிறிய முகச்சுழிப்புக்கூட இல்லாமல் தலையாட்டிவிட்டு கடைசி வரை ‘எப்படா படம் எடுப்ப? இப்ப நீ வேலை செய்யுற படத்துல உன் பேர் வரும்லடா?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் அம்மா. இப்போது கத்த தோன்றுகிறது. ‘நான் உதவி இயக்குநராக பணியாற்றும் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். முதல் முறையாக தியேட்டர் ஸ்கீரினில் என் பேர் வரும். வா. வந்து பாரு. பாத்துட்டு அழு’.
 அம்மா அதை பார்ப்பாள். ஆம். அம்மாவின் கண்களை தானம் செய்திருக்கிறோம். எங்காவது இருந்து அந்த கண்கள் எங்கள் படத்தைப் பார்க்கும். என் பெயரை பார்க்கும். நாளை என் சினிமாவில் நான் ஜெயித்து, எனக்கான மேடைகளில் நிற்கும்போது, அத்தனை விருதுகளையும் அங்கீகாரங்களையும் மொத்தமாக அம்மாவுக்கு சமர்ப்பிக்கும்போது, உலகின் ஏதோவொரு மூலையில் இருந்துகொண்டு அந்த இரண்டு கண்களும் என்னைப் பார்க்கும்தானே? அப்படிப் பார்க்கும்போது, அந்த கண்கள் கலங்கும்தானே? 

சனி, அக்டோபர் 25, 2014

இன்று நேர மாற்றம்! மறக்க வேண்டாம்.!

இன்றைய தினம் அஃதாவது சனிக்கிழமை (25.10.2014)நள்ளிரவுக்குப் பின்னதாக வரும் பின்னிரவு 3.00 மணிக்கு(ஞாயிற்றுக் கிழமை அதிகாலை) ஐரோப்பியக்  கண்டத்திலுள்ள நாடுகள் அனைத்திலும் கடிகாரங்களில் 1 மணித்தியாலம் பின்நகர்த்தப்பட்டு(1மணித்தியாலம் குறைக்கப் பட்டு) நேரம் அதிகாலை 2.00(A.M)மணியாக மாற்றப்டும் என்பது எமது வாசகர்களில் பெரும்பாலானோர் அறிந்த விடயமாகும். இருப்பினும் ஒரு சிலரேனும் மறந்து போவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இவ்வறிவித்தலை விடுக்கவேண்டிய கடமை 'அந்திமாலைக்கு' உள்ளது.

ஆசிரிய பீடம் 
அந்திமாலை 
www.anthimaalai.dk

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

நிறைஉடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறைஇறந்து மன்று படும். (1254)
 
பொருள்: நான் இதுவரையில் அடக்கம் என்னும் நல்லொழுக்கத்துடன் இருப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால் என் காமம் எல்லையைக் கடந்து சபைக்கு வந்து நிற்கின்றது.

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

பிறர்மீது கருணைகாட்டும் தயாளகுணம் நல்லொழுக்கத்தின் இன்னொரு பக்கம்.

வெள்ளி, அக்டோபர் 24, 2014

செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்

நீங்கள் ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் செக்ஸ் என்பது உங்கள் மனதில் முதல் விஷயமாக தோன்றாது. ஆனால் நீண்ட காலத்திற்கு அந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து தொடர்ந்து வரும் போது, நீங்கள் அதனால் உங்கள் செக்ஸ் வாழ்கையில் உண்டாகும் விளைவுகள் குறித்து யோசித்தே ஆக வேண்டும். சில நோய்கள் நாள்பட்ட நிலையில் உங்கள் செக்ஸ் வாழ்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கவே செய்கிறது. அந்த விதமான பொதுவான சில நோய்களின் பட்டியல் இதோ!

மாதவிடாய்க்கு முன் மற்றும் பின்
உடலுறவு கொள்வதால் ஏற்படும் விளைவுகள்!!! இரத்தத்தில் உள்ள கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் சர்க்கரையின் அளவினால் நம் உடலில் பல சிக்கல்களும் பாலியல் சீர்கேடும் உண்டாகிறது. நீரிழிவு நோய் காணப்படுகிற 60-70% ஆண்கள் தங்கள் வாழ்ப்கையில் தங்கள் வாழ்கையில் விறைப்பு தன்மை குறித்த பிரச்சனைகளை சந்திப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆணுறுப்பிற்கு செல்கின்ற இரத்த ஓட்டம் பாதிப்படைவதாலேயே இது தோன்றுகிறது. கூடுதலாக நீரிழிவு நோய் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைகிறது. இதன் விளைவாக விறைப்பு தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் அதற்கான சமிக்ஞைகளை பெறுவதில்லை. நீங்கள் ஆரோக்கியமான செக்ஸுவல் வாழ்க்கையை வாழ, உங்களுக்கு அது குறித்து முதலில் ஆசை இருக்க வேண்டும். அனைத்து ஆசைகளும் மூளையிலே தோன்றுகின்றன. எனவே செக்ஸுவல் ஆசையை கட்டுப்படுத்தும் மூளை பகுதியின் சமிக்ஞை அமைப்பில் ஏதேனும் தவறு நேரிட்டால் அது உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்த பிரச்சனை நாள்பட்ட மன அழுத்தத்தை சந்திக்கும் மக்களில் காணப்படுகிறது. இதில் கவலை கொள்ள வேண்டிய விஷயம் யாதெனில் மன அழுத்தத்தை தடுப்பதற்காக பரிந்துரைக்கப்படும் மன அழுத்த தடுப்பு மருந்துகளுமே செக்ஸுவல் ஆசையை அழிக்கிறது மற்றும் அது குறித்த விழிப்புணர்வையும் குறைக்கிறது. பிறப்புறுப்பு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு சீர்குலைவு ஏற்படுத்தும் எந்த ஒரு விளைவும் பாலியல் பிறழ்ச்சிக்கு காரணமாக அமைந்து, ஆரோக்கியமான செக்ஸ் வாழ்கையில் குறுக்கீட்டை ஏற்படுத்துகிறது. இதனால் இரத்த நாளங்களுடன் தொடர்புடைய நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் தமனிகள் கடினப்படுதல் போன்றவை ஆண்களில் விறைப்பு தன்மை பிரச்சனையையும், பெண்களில் லுப்ரிகேஷன் பற்றாக்குறை பிரச்சனையையும் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. முதுகு வலி உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நேரடியாக பாதிப்பதில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி செக்ஸ் வாழ்கையில் பங்கெடுப்பதை குறைத்து மறைமுகமாக பாதிக்கிறது. முதுகு தண்டுடன் தொடர்புடைய பிரச்சனைகளான ஹெர்னியேட்டட் வட்டு மற்றும் முதுகுத்தண்டு சுருங்கல் போன்றவை உங்களுக்கு வலியை ஏற்படுத்தி, செக்ஸ் வாழ்கையில் ஈடுபடும் உங்கள் திறனை பெருமளவிற்கு பாதிக்கின்றன. ஒரு ஆய்வு சம்பந்தமான கணக்கெடுப்பிற்கு பதிலளித்தவர்களில் 61% முதுகு வலியின் காரணமாக தாங்கள் செக்ஸை தவிர்ப்பதாகவே கூறியுள்ளனர். எனவே உங்கள் முதுகானது வலியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் ஆழமான பிரச்சனைகள் ஏதும் இல்லையெனில் யோகா மற்றும் பல உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் முதுகினை செயல்திறனுடன் வைத்துக் கொள்ளுங்கள். இரத்த சோகை உங்கள் செக்ஸ் வாழ்வில் பெரிய அளவில் பாதிப்புகளை காட்டாமல் இருக்கலாம். ஆனால் இது உங்கள் செக்ஸ் உணர்வுகளை குறைத்து, உங்களை பலவீனமடைய செய்கிறது. ஆண்களில் செக்ஸ் ஆசையை குறைகிறது மற்றும் விறைப்பு தன்மை குறித்த பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. மற்ற பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் இதனை நம் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்கள் செய்து எளிதாக சரி செய்து விட முடியும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை பெண்களின் செக்ஸுவல் ஆசையை தக்க வைத்து கொள்ள அவசியம். ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பெண்களில் செக்ஸுவல் ஆசையை இழக்கவும், அடிகடி செக்ஸில் பங்கெடுப்பதை குறைக்கவும், செக்ஸின் போது வலியை உணரவும் காரணமாக அமைகின்றது. ஆனால் இந்த சிக்கலை சரியான ஆலோசனையையும், சிகிச்சையையும் வழங்குவதன் மூலம் சரி செய்து விட முடியும்.
நன்றி:senthilvayal.com