ஞாயிறு, ஜூன் 19, 2011

என் சிந்தனை மொழிகள்

க்கம் வேதா. இலங்காதிலகம்

ற்குணம், நற்செயல்களால் நல்ல புள்ளிகள் அதிகரிக்க, அதிகரிக்க உலக வாழ்வு எனும் தேர்தலில் வாக்குப் புள்ளிகள் அதிகரித்து வெற்றிக் கொடி ஏந்தலாம். அக அறிவின் உந்துதலும் இங்கு கூட்டு முயற்சி ஆகிறது.
ரு விடயத்தை நாம் பெரிதாக எடுப்பதும் அதைச் சிறிதாக எடுப்பதும் எமது மனதைப் பொறுத்தே உள்ளது. நிம்மதியில்லை நிம்மதியில்லை என்கிறோம். நிம்மதி எங்கும் போவதில்லை. அது எப்போதும் உரிய இடத்தில் தான் உள்ளது. எமது மனம் தான் அதை உருட்டுவதும், நிமிர்த்துவதுமாக உள்ளது.
மூன்று பிரபல குரங்குப் பொம்மைகளாக தீயதைப் பார்க்காதே! தீயதைப் பேசாதே! தீயதைக் கேட்காதே! என்று உள்ளதை நாமறிவோம். தீயதைப் பேசினால் என்ன வெந்தா போவோம் என்று கூறும் இடக்கு முடக்கு வாதிகளும் உள்ளனர். தீயதைப் பார்த்தாலும் கேட்டாலும் மனத்திடவாதிகளாக நாம் இருக்க வேண்டும்.
யற்கையாக இயங்கும் இவ்வுலக வாழ்க்கை முறை, சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்க முடியாமை, இவைகளை ஏற்றுக் கொள்ள முடியாமையின் காரணம் மனித மனப் பலவீனம் தான். நிதானம், திடமற்ற மனமே உணர்வு மோதல்களில் சிக்குண்டு தவிக்கிறது. தவறைத் தவறென்று ஏற்கும் மனதிடம் இல்லாதவரை நம்புதல் உலகில் சாத்தியமாகுமா என்பது சிந்தனைக்குரியது.
பொது வாழ்வில் ஈடுபடுவோர் மனதில் மகிழ்வும் அமைதியும் தேவை. அவற்றை இழந்தவர்கள் பொது வாழ்வில் ஈடுபடும் போது பிறருக்கு அமைதியை, மகிழ்வைக் கொடுக்க முடிந்தால் ஈடுபடலாம். பிறர் வாழ்வைக் குளப்பி, அமைதியிழக்க வைப்பது பொது வாழ்க்கையல்ல.
ண்கள் எதைப் பார்க்கின்றனவோ அவை மனதில் பதிகின்றன. மனதினதும், கண்களினதும் தொடர்பு மிகப் பலமானது, தாக்கமானது. அதனால் தான் முன்னோர், பெரியவர்கள், அறிஞர்கள் ‘ நல்லதைப் பேசு! நல்லதைச் செய்! நல்லதைப் பார்!’ இவைகளால்  நல்லதைச் செய்து உயர்வாய் என்றனர் போலும்.
விழிப்புணர் வென்பது நீ என்ன செய்தாய், அவன் என்ன செய்தான், அடுத்த வீட்டுக்காரன் – எதிர்வீட்டுக்காரன் என்ன செய்தான் என்று உன் புலனைச் செலுத்தி, உரப்புதலில் உன் சக்தியை விரயமாக்குதலில் அல்ல. உன் பாதையில் கவனம் செலுத்தி மக்களின் சிந்தனையை  விழிக்க வைத்தலே விழிப்புணர்வாகும்.
டன் கொடுப்பதும், கடன் வாங்கி ஒருவருக்குக் கடன் படுவதிலும் பார்க்க, திடமுடன் உழைத்துத் திருப்திகரமாக வாழ்வது மிக தித்திப்பானது. இதுவும் ஒரு வகை சுயகட்டுப்பாடு. இந்த வாழ்க்கை மிக சிரமமானது.
சிந்தனை தாறுமாறானால் பேச்சும், செயலும் தாறுமாறாகும் என்பது தானே வழமை. சிந்தனை ஏன் தாறுமாறாகிறது. மனிதன் பெறும் தாறுமாறான அனுபவங்கள் என்று தானே கொள்ள வேண்டும். ஆக நல்லதும் கெட்டதும் நம்மைச் சேர்ந்ததே. நாமே ஆக்குவதும் தேடுவதுமாகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற சொல் வழக்கும் உலகில் உள்ளதே!
வானம் போன்ற மனதால் வளம் பொங்கும் எண்ணங்களை எண்ணலாம். இதயம் சிரிக்க மேம்பாடான எண்ணங்களை எண்ணலாம். இவை புனிதமான நல்ல வாழ்வைப்பாட நல்ல இசையாகும். மரம்கொத்தி போல மனம் கொத்தினால் வாழ்வும் கொத்தப்படும்.
ல்லது எண்ணி, நல்லது பேசி நல்லது செய்யும் மனிதர்கள், தீயது எண்ணி தீயது பேசி தீயது செய்யும் மக்களோடு இணங்கமாட்டார்கள், ஒதுங்கிப் போவார்கள்.

12 கருத்துகள்:

Mohan, Denmark சொன்னது…

Very good

K. Kokulan, Trincomalee (Sri Lanka) சொன்னது…

நல்ல சிந்தனை மொழிகள்

Uthayan, Germany சொன்னது…

Well done, Vetha

kovaikkavi-DK சொன்னது…

எனக்கே ஆச்சரியமாக உள்ளது நானா இதை எழுதினேன் என்று. மிக்க நன்றி அந்திமாலை. இப்போது மாலையில் வீடு வந்து தான் பார்த்தேன் (5.23 பின்மாலை.) good photoes You uploaded. Thank you.

kumar சொன்னது…

excelent

vinothiny pathmanathan dk சொன்னது…

அருமையான சிந்தனை மொழிகள் .நன்றி

ilango France சொன்னது…

cinthika ykrathu. thodarthum aluthavaum.

Vadivell DK சொன்னது…

nalla katuthu.

Velautham Denmark சொன்னது…

centhanaikal manathitku thanpai allikintrathu.

Kumaran DK சொன்னது…

மனித பண்பும் மனித நல்ல உணர்வும் அளிவதிலை .

Kathir DK சொன்னது…

நல்ல அறிவான தொடர்.

Manivannan DK சொன்னது…

நல்ல விடஜங்களை தரும் அந்திமாலை க்கு மிகவும் நன்றி .

கருத்துரையிடுக