செவ்வாய், ஜூன் 14, 2011

நாடுகாண் பயணம் - கனடா

நாட்டின் பெயர்:
கனடா (Canada)

அமைவிடம்:
வட அமெரிக்கா

எல்லைகள்:
கிழக்கு - அத்திலாந்திக் சமுத்திரம் 
மேற்கு - பசுபிக் சமுத்திரம் 
வடக்கு - ஆர்ட்டிக் சமுத்திரம் 
தெற்கு மற்றும் வடமேற்கு - அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்(USA)

தலைநகரம்:
ஒட்டாவா (Ottawa)


மிகப் பெரிய நகரம்:
டொரண்டோ (Toronto)

தேசிய கீதம்:
ஒ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ.(O Canada! Our home and native land)

இராச்சியப் பாடல்:
அரசியை ஆண்டவன் காப்பாராக(God Save the Queen)


இனங்கள்:
பிரித்தானிய வம்சாவளியினர் 28 %, பிரெஞ்சு வம்சாவளி 23 %, ஏனைய ஐரோப்பியர் 15 %, அமெர் இந்தியர்கள் 2 %, ஆசியர் + ஆபிரிக்கர் + அரபுக்கள் 6 % , கலப்பு இனங்கள் 26 %

சமயங்கள்:
ரோமன் கத்தோலிக்கம் 42.6 %, புரட்டஸ்தாந்துகள் 23.3%, ஏனைய கிறீஸ்தவர்கள் 4.4%, முஸ்லீமகள் 1.9%, ஏனையோர் மற்றும் குறிப்பிடப் படாதோர் 11.8%, சமயம் இல்லாதோர் 16%

அலுவலக மொழிகள்:
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு 

கல்வியறிவு:
99 %

ஆயுட்காலம்:
ஆண்கள் 78.8 வருடங்கள் 
பெண்கள் 84.1 வருடங்கள் 


ஆட்சிமுறை:
மாகாணங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மற்றும் அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியின் ஆட்சி.

பெயரளவில் நாட்டின் தலைவி:
மாட்சிமை தங்கிய இரண்டாவது எலிசபெத்(இங்கிலாந்து இராணி)

கௌரவ ஆளுநர்:
டேவிட் ஜோன்ஸ்டன்(David Johnston) *இது 14.06.2011 உள்ள நிலவரமாகும்.


பிரதமர்:
ஸ்டீபன் கார்பர் (Stephen Harper) *இது 14.06.2011 உள்ள நிலவரமாகும்.

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம்:
  • பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டப்படி - 01.07.1867
  • வெஸ்ட் மினிஸ்டர் தகுதிகளின்படி - 11.12.1982
  • பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கனடாத் தீர்மானத்தின்படி முழுச் சுதந்திரம் - 17.04.1982
பரப்பளவு:
9,984,670 சதுர கிலோமீட்டர்கள்.


சனத்தொகை:
34,482,000 (2011 மதிப்பீடு)

நாணயம்:
கனடியன் டாலர் (CAD)

இணையத்தளக் குறியீடு:
.ca

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-1


இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், எரிவாயு, கால்நடைகள், மரம், மீன், மின்சாரம், சிங், யுரேனியம், நிக்கல், ஈயம், அலுமினியம், தங்கம்.


விவசாய உற்பத்திகள்:
கோதுமை, பார்லி, எண்ணெய் வித்துக்கள், புகையிலை, பழங்கள், காய்கறிகள், காடு சம்பந்தமான உற்பத்திகள், பால் மற்றும் பாற்பொருட்கள், மீன்.


தொழிற்சாலை உற்பத்திகள்:
வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், இரசாயனப் பொருட்கள், சுத்திகரிக்கப் பட்ட தாதுப் பொருட்கள், உணவுகள், மரம், காகிதம், பெற்றோலியம், இயற்கை எரிவாயு.


ஏற்றுமதிப் பொருட்கள்:
வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள், விமானங்கள், தொலைத்தொடர்புக் கருவிகள், இரசாயனங்கள், பிளாஸ்டிக், உரங்கள், மரப்பசை, மரக்கூழ், மரம், மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், அலுமினியம்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • உலகின் இரண்டாவது பெரிய நாடு.
  • தனி நபர் வருமானம் அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் 7 ஆவது  இடத்தில் உள்ளது.
  • உலகில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ள நாடுகளில் ஒன்று.
  • உலகின் இரண்டாவது பெரிய நாடாக மிகப்பெரிய நிலப் பரப்பினைக் கொண்டிருப்பினும் சுமாராக மூன்றரைக் கோடி சனத்தொகையைக் கொண்டிருப்பதால் சனத்தொகை அடிப்படையில் 36 ஆவது இடத்தில் உள்ளது. 
  • உலகில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, பர்மா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கனடாவில் 300,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இவர்களில் 90% ஆனவர்கள் இலங்கைத் தமிழர்களும் அவர்தம் சந்ததியினரும் ஆவர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் கனடாவில் அகதிகளாக அடைக்கலம் தேடியபின்னர் 'கனேடியக் குடியுரிமை' பெற்றவர்கள் ஆவர்.

3 கருத்துகள்:

uthayan germany சொன்னது…

thanks a lot we are happy to anthimaalai

Selvan Norway சொன்னது…

thkval itko nanrai

kumar சொன்னது…

i am very happy to reading anothar countrys for story

கருத்துரையிடுக