சனி, ஜூன் 18, 2011

அந்திமாலையில் அறிமுகம்

திருமதி. சந்திரகௌரி சிவபாலன் அவர்கள் இலக்கியம், கவிதை, சிறுகதை, ஆன்மீக சிந்தனை, பாடல்கள் என பல்துறைகளிலும் ஈடுபாடு காட்டிவரும் ஒரு பெண் எழுத்தாளராவார்.

இவர் மட்டக்களப்பு ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.மட்டக்களப்பு ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்பு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் 'கல்வியியல்' டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். புலம்பெயர் மண்ணில் தனது கணவர் சிவபாலன், மகள் மெனூஷா ஆகியோருடன் ஜெர்மனியில் உள்ள 'சோலிங்கன்' நகரில் வசித்து வருகின்றார். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தொழில்ரீதியாக ஆசிரியையாகப் பணியாற்றிய இவர் பின்பு ஜேர்மனிக்குப் புலம்பெயரும் வரை நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகத் தனது பணியினைத் தொடர்ந்துள்ளார். தற்பொழுது சோலிங்கனிலுள்ள ஜேர்மனி மொழி ஆரம்பப் பாடசாலையில் (Open all day School) பணியாற்றுகின்றார்.தனது பெயரின் முதலெழுத்தான 'கௌ' வையும், தனது கணவர் சிவபாலனின் பெயரில் முதலெழுத்தான 'சி'யையும் இணைத்து 'கௌசி' எனும் புனைபெயரில் புலம்பெயர் நாட்டில் ஆக்கங்களைப் படைத்து வரும் 'சந்திரகௌரியின்' கன்னியாக்கம் 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், 'யானை உரியும் உமையாள் அச்சமும்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீக சிந்தனைகள், பாடல்கள் போன்ற ஆக்கங்களை இவர் இலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், மண், தமிழ்நாதம்| போன்ற சஞ்சிகைகளிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார்.
இலண்டன் தமிழ் வானொலியில் 'ஓடிவிளையாடுபாப்பா' என்னும் ஒரு நிகழ்ச்சியினை நடாத்தியவர். இத்துடன் இணையத்தளங்களில் சமுதாயச் சீர்திருத்தக் கட்டுரைகள், கவிதைகள், ஆக்கங்கள் போன்றவற்றை எழுதிவருவதுடன் தன்னுடைய 'வலைப்பூவிலும்' ஆக்கங்களை எழுதிவருகின்றார்.
இலக்கியத்திலும், அறிவியல் இலக்கியங்களிலும் பகுத்தறிவு வாதங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தெரிந்ததைப் பிறருக்குத் தெரியப்படுத்தலும், தெரியாததைத் தெரிந்து கொள்தலும், தனக்குப் பிடித்தமானது என்கிறார். கவிதை, கட்டுரை, வாழ்வியல் இலக்கியம், அறிந்ததும் புரிந்ததும், என்வாசகங்கள், பொறிக்கவிதை, தொடர்கதைகள் என விரிகிறது இவரது எண்ணங்கள். "என் மூளைப்புதையல் தருகின்ற படையல்களைப் பலரும் அருந்தி சுவை கொள்வார்களேயானால், நான் இன்பம் அடைவேன்" என்று தனது ஆக்கங்களைப் பற்றிக் கருத்துரைக்கிறார்.

இவரது ஆக்கங்களுள் ஒன்றாகிய "என்னையே நானறியேன்"எனும் தலைப்புக் கொண்ட சிந்தனைத் தொடர் ஒன்று பிரதி புதன்கிழமை தோறும் உங்கள் அந்திமாலையில் இடம்பெறவுள்ளது. அந்திமாலையின் தளத்திற்கு 'புது வரவாக' வருகை தந்திருக்கும் இவ் எழுத்தாளரை நல்வரவு கூறி வரவேற்பதில் பெருமை அடைகிறோம். 

ஆசிரியபீடம் 
அந்திமாலை 

7 கருத்துகள்:

Kavitha Denmark சொன்னது…

That is a good news.

Vasanthi Swiss சொன்னது…

Puthia akangal vatuvathu mikkavum nallathu.

Sumitha DK சொன்னது…

நல்ல விடயம்.

Sakthy, DK சொன்னது…

Good to know about her... Thank you, Anthimaalai

Palasingam UK சொன்னது…

வாழ்த்துக்கள்.

Thavapalan DK சொன்னது…

makelchiudan vatavatkerom vatuka vatuka.

kowsy சொன்னது…

நான் சிறிதாக என் அறிமுகத்தைச் சொல்ல அதைப் பெரிதாக அறிந்து பெற்று, அழகாக வெளிப்படுத்திய ஆசிரியருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இதுவே எழுத்தாளர் பண்பு என்பதை உணர்த்தியுள்ளீர்கள். உங்கள் தளத்தில் என் வரவு அவ்வப்போது கிடைக்கும்

கருத்துரையிடுக