செவ்வாய், ஜூன் 07, 2011

நாடுகாண் பயணம் - கமரூன்




நாட்டின் பெயர்:
கமரூன் (Cameroon)

வேறு பெயர்கள்:
கமரூன் குடியரசு 

அமைவிடம்:
மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா.

எல்லைகள்:
மேற்கு - நைஜீரியா 
வடகிழக்கு - சாட்  
கிழக்கு - மத்திய ஆபிரிக்கக் குடியரசு 
தெற்கு - ஈக்குவட்டேரியல் கினியா, கபூன், மற்றும் கொங்கோ குடியரசு.
தென்கிழக்கு - கினியா குடாக்கடல்(அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஒரு பகுதி)

தலைநகரம்:
யாவொண்டே (Yaounde')

அலுவலக மொழி:
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு 


சமயங்கள்:
கிறீஸ்தவம் 40 %
இஸ்லாம் 20 %
இயற்கை மரபுவழிச் சமயம் 40 %


கல்வியறிவு:
67.9 %


ஆயுட்காலம்:
ஆண்கள் 53.5 வருடங்கள் 
பெண்கள் 55.2 வருடங்கள் 

ஆட்சிமுறை:
குடியரசு 

ஜனாதிபதி:
போல் பையா (Paul Biya) 
*இது 7.06.2011 நிலவரம் ஆகும்.

பிரதமர்:
பிலமொன் யாங் (Phile'mon Yang) 
*இது 7.06.2011 நிலவரம் ஆகும்.


பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுதந்திரம்:
01.01.1960

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம்:
01.10.1961 

பரப்பளவு:
475,442 சதுர கிலோமீட்டர்கள்.

சனத்தொகை:
19,100,000 (2009 மதிப்பீடு)

நாணயம்:
மத்திய ஆபிரிக்க பிராங் (CFA / XAF )

இணையத் தளக் குறியீடு:
.cm

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-237

பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
பண்ணைகள், விவசாயம், மீன்படி(இறால்)

இயற்கை வளங்கள்:
பெற்றோலியம், மரம், நீர் மின்சாரம், எரிவாயு, கோபால்ட், நிக்கல், ஈயம், யூரேனியம்.

விவசாய உற்பத்திகள்:
வாழை, கொக்கோ, தேயிலை, காபி, சீனி, எண்ணெய் வித்துக்களைத் தரும் மரங்கள், புகையிலை, பருத்தி, தானியங்கள், கிழங்குகள், அன்னாசிப்பழம், இறைச்சி, மரங்கள்.

தொழிற்சாலை உற்பத்திகள்:
பெற்றோலிய உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, அலுமினியம் உற்பத்தி, உணவுப் பொருட்கள் பதனிடல், நாளாந்தப் பாவனைப் பொருட்கள் தயாரிப்பு, துணிகள், கப்பல் பழுதுபார்த்தல், மரப்பலகை மற்றும் தளபாடங்கள் தயாரிப்பு.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • ஏனைய ஆபிரிக்க நாடுகளோடு ஒப்பிடுகையில் பொருளாதாரத்தில் ஏற்றமுள்ள நாடாகத் திகழ்கிறது. இதன் காரணமாகவே உலகில் வறிய நாடுகளின் வரிசையில் இந்நாடு 51 ஆவது இடத்தில் உள்ளது(வருடாந்த தனி நபர் வருமானம் 2400 அமெரிக்க டாலர்கள்)
  • பொருளாதாரத்தில் ஏற்றமுள்ள நாடாக இருப்பினும் எயிட்ஸ்(HIV) நோயாளிகளை அதிகம் கொண்டுள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளில் முதலாவது இடத்தில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்நாட்டின் வயது வந்தவர்களில் 15.9 % பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இருந்தனர், 82,000 பேர் எயிட்ஸ் நோயினால் இறந்தனர்.(தகவலுக்கு நன்றி: en.wikipedia.org)
  • எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட கடும் முயற்சியால் நாட்டின் வயது வந்தோரில் எயிட்ஸ் நோயாளிகளின் வீதம் 5.1 % ஆகக் குறைந்தது. இருப்பினும் 2007 ஆம் ஆண்டில் இந்நாட்டில் 39,000 பேர் எயிட்ஸ் நோயினால் இறந்தனர்.(தகவலுக்கு நன்றி: hivinsite.ucsf.edu)
  • லஞ்சம்,ஊழல் மிகுந்த நாடுகளின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.
  • அண்டை நாடுகளில் ஏற்பட்ட போர்கள் காரணமாக மத்திய ஆபிரிக்கா, சாட், நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அகதிகள் இந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • சுகாதாரக் குறைவு, குழந்தைத் திருமணம் போன்ற சமூக அவலங்களும் நிலவுகின்றன.
  • கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டு வன்முறைகள், வேலை நிறுத்தங்கள் போன்றவற்றை இந்நாடு எதிர்கொண்டுள்ளது.
  • 1884 ஆம் ஆண்டு தொடக்கம் முதலாம் உலகப் போர்வரை ஜேர்மனியின் குடியேற்ற நாடாக விளங்கியது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் இந்நாட்டை இரு துண்டுகளாக்கி பிரான்ஸ் நாடும், பிரித்தானியாவும் ஆண்டன. முறையே 1960, 1961 ஆம் ஆண்டுகளில் இந்நாடுகளிடமிருந்து சுதந்திரமடைந்த 'கமரூன்' முழுச் சுதந்திர நாடாகியது.

2 கருத்துகள்:

Ramesh, DK சொன்னது…

Thanks anthimaalai. I like the "Nadukan Payanam". Keep it up

Arumugam Denmark சொன்னது…

நல்ல தகவல் .

கருத்துரையிடுக