வியாழன், ஜூன் 09, 2011

நினைவில் நின்ற பொன்மொழிகள்

தொகுப்பு: ச.அருணன் ,
சிட்னி, அவுஸ்திரேலியா.
 • நாளை என்பது நம் கையில் இல்லை, நல்லதை நினைத்தால் அந்தக் கணமே செய்து விடவேண்டும்.

 • முதலில் கடவுளை நம்புகிறவன் வெற்றி காண்கிறான்.

 • பிறரை ஏமாற்ற நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.

 • மலருக்கு மதிப்புத் தருவது மணம், மனிதனுக்கு மதிப்புத் தருவது குணம்.

 • இனிய சொற்களே இதயக் கதவைத் திறக்கும் சாவி.

 • உங்களுடைய நியாயமான சரியான வழிகாட்டி உங்கள் மனச்சாட்சிதான்.

 • சாத்திரம் பல கற்றாலும் ஆத்திரம் அடக்குவதே "அறிவு"

 • தடுமாறும் கால் சமாளித்துக் கொள்ளும், தடுமாறும் நாக்கு மீளாது.

 • நல்ல நினைவுகளே நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள்.

 • அடுத்தவனைக் குறை சொல்வது தன் குறைகளை மறைப்பதற்காகவே.

 • அன்பில்லா வார்த்தை அம்பை விடக் கொடியது.

 • நினைப்பது நீயாக இருக்கலாம், ஆனால் அதை செயலாக்குவது இறைவன்தான்.

1 கருத்து:

Ramesh, DK சொன்னது…

Very good

கருத்துரையிடுக