தொகுப்பு: ச.அருணன் ,
சிட்னி, அவுஸ்திரேலியா.
- நாளை என்பது நம் கையில் இல்லை, நல்லதை நினைத்தால் அந்தக் கணமே செய்து விடவேண்டும்.
- முதலில் கடவுளை நம்புகிறவன் வெற்றி காண்கிறான்.
- பிறரை ஏமாற்ற நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்.
- மலருக்கு மதிப்புத் தருவது மணம், மனிதனுக்கு மதிப்புத் தருவது குணம்.
- இனிய சொற்களே இதயக் கதவைத் திறக்கும் சாவி.
- உங்களுடைய நியாயமான சரியான வழிகாட்டி உங்கள் மனச்சாட்சிதான்.
- சாத்திரம் பல கற்றாலும் ஆத்திரம் அடக்குவதே "அறிவு"
- தடுமாறும் கால் சமாளித்துக் கொள்ளும், தடுமாறும் நாக்கு மீளாது.
- நல்ல நினைவுகளே நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள்.
- அடுத்தவனைக் குறை சொல்வது தன் குறைகளை மறைப்பதற்காகவே.
- அன்பில்லா வார்த்தை அம்பை விடக் கொடியது.
- நினைப்பது நீயாக இருக்கலாம், ஆனால் அதை செயலாக்குவது இறைவன்தான்.
1 கருத்து:
Very good
கருத்துரையிடுக