ஆக்கம்: திருமதி.வேதா இலங்காதிலகம், டென்மார்க்.
பட்டுனாம்(Pratunam) செல்ல பேருந்திற்கு ஒருவருக்கு 150 பாத்.
தாய்லாந்துப் பணம் baht ஐ ஆரம்பத்தில் 8ஆல் பிரித்து குரோனர் பெறுமதி பார்த்தோம். பின் இரண்டு நாள் போனதும் பணப் பெறுமதியில் வித்தியாசம் வந்து 6ஆல் பிரித்துப் பெறுமதி பார்த்தோம். எமது வாடி வீடான best bangkok house க்கு வாடகைக் காரில், அதாவது ராக்சியில் போகும் கட்டணம் 500 பாத். இதை முதலே கணனியில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருந்தோம். எமது பேருந்துப் பயணத்தால் வாடி வீட்டிற்குச் செல்ல ஒரு மணித்தியாலம் எடுக்கும்.
அது வரை, பட்டுனாம் போக முதல் நாம் இந்த நாடு தாய்லாந்தைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.
சீயம், சியாம் என்று அழைக்கப்பட்ட நாடு இது. 1939 ஆனி 24ன் பின் அரச ஆட்சி, பாராளுமன்றத்துடன் கூடிய மக்களாட்சியான போது இந்த நாடு தாய்லாந்து என்ற பெயரைப் பெற்றது. தாய்லாந்து மொழியில் free land சுதந்திர நாடு என்ற கருத்தைக் கொண்டது.
சீயம், சியாம் என்று அழைக்கப்பட்ட நாடு இது. 1939 ஆனி 24ன் பின் அரச ஆட்சி, பாராளுமன்றத்துடன் கூடிய மக்களாட்சியான போது இந்த நாடு தாய்லாந்து என்ற பெயரைப் பெற்றது. தாய்லாந்து மொழியில் free land சுதந்திர நாடு என்ற கருத்தைக் கொண்டது.
19ம் நூற்றாண்டில் ” வெனிஸ் of ஈஸ்ற் ‘ ’….. கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்பட்டது. நாடு நிறைய கால்வாய்கள் கொண்டதாக இருந்ததால் இப் பெயர் பெற்றதாம். மிதக்கும் சந்தைகள் floting markets இன்றும் சுற்றுலாக் கவர்ச்சியாக உள்ளது. The land of the smiling / புன்னகைக்கும் நாடு, சிரிப்பின் நாடு என்று எப்படியாவது நீங்களே சரியாக மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள். The land of robes மஞ்சள் அங்கிகளின் நாடு – அல்லது மஞ்சள் அலங்கார அங்கிகளின் நாடு என்றும் ஆதி காலத்தில் கூறப்பட்டதாம். The land of the Angels / தேவதைகளின் நாடு என்றும் பெருமையாகக் கூறுகிறார்கள்.
513,000 ஆயிரம் ச.கிலோ மீட்டர், 198,000ச.மைல் கொண்ட நாடு. 62 மில்லியன் மக்கள் தொகையுடையது. இதில் பாங்கொக் தலைநகரில் மட்டும் 10 மில்லியன் மக்கள் வாழ்கிறார்களாம்.
80 விகிதம் புத்த மதத்தினர், 10 விகிதம் சீன மக்கள், 4 விகிதம் மலாய் மக்கள் மிகுதியானவர்கள் பல்லினமாக, இந்தியர்கள் உட்பட வாழ்கின்றனர். 96 விகிதமாக நாட்டில் புத்த மதமே நிறைந்துள்ளது.
என்றுமே இந்த நாடு காலனி ஆதிக்கத்தின் கீழோ, அன்றி ஐரோப்பிய சக்தியின் கீழோ இருக்கவில்லையென்ற பெருமையுடைய நாடு. காலம் காலமாக ஆட்சிகள் மாறி மாறிச் சுழலும் போது அயோத்தியா நகரம், தோண்புரி நகரம் என்று ஆட்சியிலிருந்து,
1762 ல் ஜெனரல் சக்கிரி என்பவர், சக்ரி வம்ச முதல் அரசன் ராம் – ஒன்று என்ற பெயரில் பாங்கொக் நகரைத் தலைநகரமாக்கினார். அயோத்தியா நகரத்து அரச மாளிகைகளின் மாதிரியில் பாங்கொக்கில் அரச மாளிகைகளைப் புதிதாகக் கட்டினார்.
அரசர்களுக்கு ராம் ஒன்று, ராம் இரண்டு, மூன்று என்று பெயர்கள் தொடருகிறது. இப்போது ராம் ஒன்பது அந்த நாட்டை அரசாளுகிறார்.
சரி, வாருங்கள் நாம் பயணத்தைத் தொடருவோம்.
பேருந்தில் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்து விசாலமான பெரும் தெருவை ரசித்தபடி வந்தோம். 5வரிசை, சில இடத்தில் 7வரிசையாகவும் தெரு இருந்தது. ஒரு இடத்தில் ஆம்சரடாம்(Amsterdam) தெரு போலவும், இன்னொரு இடத்தில் கனடா போலவும் பரந்து விசாலமாக அழகாக இருந்ததை வாய்விட்டுக் கூறி ரசித்தேன்.
‘ ’ இப்படி யாழ் – கொழும்பு வீதியை ஆக்காது போருக்குப் பணத்தை கொட்டி அழிக்கிறார்களே!”…. என்றார் என் கணவர்.(இந்தக் கட்டுரை எழுதிய போது போர் நடந்து கொண்டிருந்தது.)
ஏனோ எமக்கு தாய்லாந்தில் எமது நாட்டு நினைவு தான் அதிகமாக வந்தது. ஒரு வேளை அதே காலநிலை தான் அப்படி ஒரு உணர்வைத் தந்ததோ தெரியவில்லை.
—பயணம் தொடரும்—-
13 கருத்துகள்:
Vetha, I love reading your poems and travel history ..
Many thanks to 'Anthimaalai.dk', for publishing these great works .
அருமை...அருமை...அருமை
Your story is very interesting.
அருமையாகத் தொடர்கிறீர்கள். பாராட்டுக்கள்.
great.............vetha
இப்படி ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்த அந்திமாலைக்கு மிக்க நன்றிகள்.
செவ்வாய் மாலை இரவு 10.26க்குத்தான் இக்கட்டுரை பார்த்தேன். நிக்கூபிங் ஃபல்ஸ்ரருக்குச் சென்று வந்தேன். மிக்க மகிழ்ச்சி. மக்களுடைய கருத்துகளும் பார்த்தேன் ஓரிரு நாட்களின் பின் மறு இடுகை போடுவேன் அனைவருக்கும் நன்றியும் மகிழ்வும் அந்திமாலைக்கு... நன்றி..நன்றி.
கதையை மிகவும் ரசிக்கும் படி எழுதும் எழுத்தாளர் வேதாவுக்கு பாராட்டுக்கள்.
நல்ல ரசனையாக எழுதுறீங்க. எனக்கும் என்னுடைய மனைவிக்கும் ரொம்ப பிடிக்கும்
You've written very well. I love your telling way. I look forward to next Monday. your poems are very beautiful. Keep it up:-)
பயணத்தின் அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .பாராடுக்கள்
Super
கருத்திட்ட எல்லா அன்புள்ளங்களுக்கும், இனி கருத்து தருபவர்களுக்கும் மகிழ்வான வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக. அனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.
கருத்துரையிடுக