சனி, ஜூன் 11, 2011

யாமறிந்த மொழிகளிலே

ஆக்கம்: சுஜீதா கண்ணன்,
கனடா
தேமதுரத் தமிழோசை

தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் பலர் வேற்று மொழிக் காரர்களாக இருப்பது நீங்கள் அறிந்தது. இருப்பினும் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவுக்கேனும் தெளிவாக உச்சரிப்பதற்குக் காரணம் அவர்களது 'மொழி' தமிழ் மொழியுடன் தொடர்புள்ள ஒரு இந்திய மொழியாக இருப்பதுதான். ஆனால் ஐரோப்பியர்கள், அல்லது வேற்று நாட்டவர்கள் எமது மொழியில் பாடினால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்குமல்லாவா? இந்த வாரம் தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடும் நோர்வீஜியப் பெண்ணின் உச்சரிப்பைக் கேட்போம். இந்தப் பெண்ணை நோர்வீஜியப் பெண் என நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இப்பாடகியின் தந்தை ஒரு இலங்கைத் தமிழராக இருப்பினும் தாயார் ஒரு நோர்வீஜிய(நோர்வே) பெண்மணி ஆவார். நமது புலம்பெயர் தேசத்துத் தமிழ்ப் பெற்றோர்களில் பலர் தமது பிள்ளைகளுக்குத் தமிழ் பேச வராது, அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியாது என்றெல்லாம் பெருமையடிக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் தனது தந்தையின் மொழியில் சுருதி சுத்தமாகத் தமிழ்ப் பாடலைப் பாடும் சீதா திலீபனை பாராட்டுவோம். எம் இன்பத் தமிழில் தமது பிள்ளையைப் பாடுவதற்கு ஊக்குவிக்கும் அந்தப் பெற்றோர்களையும் வியந்து பாராட்டுவோம்.


காணொளி உதவிக்கு நன்றி: "ரவிராகம்" நோர்வே, மற்றும் Youtube.com
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நன்றாக இருக்கிறது...அவரது உச்சரிப்பு தெளிவாக உள்ளது..பெற்றவர்களுக்கும் அவருக்கும் பாராட்டுகள்.

Mayuran, Germany. சொன்னது…

Nice Voice, nice song.

suthan சொன்னது…

nice we have to say thanks a lot

siva germany சொன்னது…

i like so much to her voice

கருத்துரையிடுக