ஆக்கம்: சுஜீதா கண்ணன்,
கனடா
தேமதுரத் தமிழோசை
தமிழ்த் திரைப்படப் பாடகர்களில் பலர் வேற்று மொழிக் காரர்களாக இருப்பது நீங்கள் அறிந்தது. இருப்பினும் அவர்கள் தமிழ் மொழியை ஓரளவுக்கேனும் தெளிவாக உச்சரிப்பதற்குக் காரணம் அவர்களது 'மொழி' தமிழ் மொழியுடன் தொடர்புள்ள ஒரு இந்திய மொழியாக இருப்பதுதான். ஆனால் இந்தியர்கள் தவிர்ந்த வேற்று நாட்டவர்கள் எமது மொழியில் பாடினால் நமக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்குமல்லாவா? இந்த வாரம் தமிழ் மொழியைப் பேசத் தெரியாத, சீன மொழியையும் ஆங்கில மொழியையும் மட்டுமே பேசத் தெரிந்த உடல் ஊனமுற்ற 'சீன மங்கை' ஒருவர் தமிழ்ப் பாடல் ஒன்றைப் பாடுவதைக் கேட்போம். சீனர்களின் காதுகளில் விழுந்து, அவர்களின் இதயங்களில் நுழைந்த எம் தமிழை, தமிழிசையைப் போற்றுவோம்.
காணொளி உதவிக்கு நன்றி: arrahmanworld.com
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
2 கருத்துகள்:
Good.
Super.
கருத்துரையிடுக