நாட்டின் பெயர்:
நாட்டின் சர்வதேசத் தகுதி:
பிரித்தானிய அரசின் கடல்கடந்த ஆட்சிப் பகுதி.
அமைவிடம்:
மேற்குக் கரீபியன் கடல்
எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் கரீபியன் கடல், இருப்பினும் வடக்கில் கியூபாவும், வட கிழக்கில் ஜமைக்காவும் உள்ளன.
நாட்டின் மொத்த தீவுகளின் எண்ணிக்கை:
3
தீவுகளின் பெயர்கள்:
பெரிய கேமன்(Grand Cayman), சிறிய கேமன்(Little Cayman), கேமன் பிராக்(Cayman Brac)
ஏனைய மொழி:
ஸ்பானிஷ்
கல்வியறிவு:
98 %
சமயங்கள்:
கிறீஸ்தவம்/ரோமன் கத்தோலிக்கம்
ஜோர்ஜ் டவுன்(George Town)
ஆட்சிமுறை:
பிரித்தானிய அரசியின் ஆட்சிக்குட்பட்ட கடல் கடந்த பிரதேசம்.
அலுவலக மொழி:
ஆங்கிலம்
ஏனைய மொழி:
ஸ்பானிஷ்
கல்வியறிவு:
98 %
சமயங்கள்:
கிறீஸ்தவம்/ரோமன் கத்தோலிக்கம்
ஆண்கள் 78 வருடங்கள்
பெண்கள் 83.3 வருடங்கள்
நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து அரசி)
ஆளுநர்:
டுங்கான் டெயிலர் (Duncan Taylor) *இது 28.06.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
பிரதமர்:
மெக்கீவா புஷ் (McKeeva Bush) *இது 28.06.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
ஜமைக்காவிடமிருந்து பிரிந்தது மற்றும் பிரித்தானியாவின் கடல்கடந்த பிரதேசமாகிய ஆண்டு:
பரப்பளவு:
264 சதுர கிலோமீட்டர்கள்
சனத்தொகை:
54,878 (2010 மதிப்பீடு)
கேமன் தீவுகளின் டாலர்(Cayman Islands dollar / KYD)
இணையத் தளக் குறியீடு:
.ky
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
001-345
விவசாய உற்பத்திகள்:
காய்கறி, பழங்கள், மிருக வளர்ப்பு, ஆமை வளர்ப்பு.
தொழிற்துறைகள்:
சுற்றுலா, வங்கித்துறை, நிதித்துறை, கட்டுமானம், தளபாடம்.
ஏற்றுமதிகள்:
ஆமை, ஆமை ஓடு, ஆமையிலிருந்தும், ஆமை ஓட்டிலிருந்தும் தயாரிக்கப் பட்ட பொருட்கள், மற்றும் சில நாளாந்தப் பாவனைப் பொருட்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- கொலம்பஸ், மற்றும் ஆங்கிலேயக் கடலோடி சர் பிரான்சிஸ் டிரேக்(Sir Francis Drake) ஆகியோர் தமது கடற்பயணங்களின் போது இத்தீவுகளில் தரை இறங்கியது மட்டுமல்லாமல் இத்தீவுகளைப் பற்றியும் தமது பயணக் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர்.
- 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே இத்தீவுகளில் மக்கள் குடியேற ஆரம்பித்தனர். ஆரம்ப காலங்களில் இத்தீவுகளில் குடியேறியவர்களில் கணிசமானோர் கடற் கொள்ளையர்கள், அகதிகள்(ஸ்பானிய அகதிகள்), கப்பல் உடைந்து கடலில் மூழ்கியதால் கரை சேர்ந்தோர் ஆவர்.
- இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் ஆட்சிக் காலத்தில் இத்தீவுகளின் அருகில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தின் பத்து வியாபாரக் கப்பல்கள் புயல், மற்றும் இராட்சத அலைகளால் அலைக்கழிக்கப் பட்டு விபத்துக்கு உள்ளானபோது இத்தீவு வாசிகள் கப்பலையும், வணிகர்களையும் போராடிக் காப்பாற்றினர். அம்மாபெரும் தியாகத்திற்கு நன்றிக் கடனாக இத்தீவு வாசிகள் பிரித்தானியப் பேரரசிற்கு வரி ஏதும் செலுத்தத் தேவையில்லை என மன்னர் கட்டளையிட்டார். அந்த நடைமுறை இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
- இத்தீவில் வாழும் மக்கள் வருமான வரி, சொத்து வரி எதுவும் அரசிற்குச் செலுத்தத் தேவையில்லை. ஏற்றுமதி இறக்குமதியாளர்களிடமிருந்தும் மிகச் சிறிய அளவிலேயே வரி அறவிடப் படுகிறது.குழந்தைகளின் உணவு,பால்மா, மருத்துவ மற்றும் பாவனைப் பொருட்களுக்கும்,புத்தகம் போன்றவைகளுக்கும் இறக்குமதி வரி செலுத்தத் தேவையில்லை.
- சுற்றுலாப் பயணிகளிடமிருந்து சிறிய தொகை வரி அறவிடப் படுகிறது.(ஒரு நபரிடமிருந்து சுமாராக 25 அமெரிக்க டாலர்கள்)
- நாட்டில் நேரடி வருமான வரி இல்லை என்பதால் உலகின் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தமது கிளை நிறுவனங்களை இந்நாட்டில் திறந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்நாட்டில் 93,000 பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன.(நாட்டின் சனத்தொகை சுமார் 55,000 என்பதை நினைவிற் கொள்க) இவற்றில் 300 வங்கிகளும், 800 காப்புறுதி நிறுவனங்களும், 10,000 இற்கு மேற்பட்ட சீட்டுப் பிடிக்கும்(பங்குச் சந்தைக்குக் கடன் கொடுக்கும்) நிறுவனங்களும் அடங்கும்.
- மக்கள் வருமான வரி, சொத்து வரி எதுவும் செலுத்தாவிட்டாலும் இந்நாட்டு அரசினால் மக்களுக்கு உயர்வான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. உலகில் சுவிட்சர்லாந்து(சுவிஸ்) மக்கள் அனுபவித்து வரும் வாழ்க்கைத் தரத்தை 'கேமன் தீவுகளின் மக்கள்' அனுபவித்து வருகின்றனர்.
- இத்தீவு மக்களின் மருத்துவம், சுகாதாரம் போன்ற தேவைகளுக்குப் பொறுப்பாக இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இங்கிலாந்தில் பணியாற்றி வருபவருமாகிய தேவி பிரசாத் செட்டி(Devi Prasad Shetty) எனும் மருத்துவ நிபுணர் நியமிக்கப் பட்டுள்ளார்.
- மேற்படி மருத்துவ நிபுணரின் கண்காணிப்பு, வழிநடத்தலின்படி 2000 படுக்கை வசதிகள் கொண்ட 'நாராயணா மருத்துவமனை'(Narayana Cayman University Medical Centre) அந்நாட்டு அரசின் உதவியுடன் இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை மக்களுக்கு மருத்துவ சேவையையும், மருத்துவபீட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியையும் வழங்கி வருகிறது.(தகவலுக்கு நன்றி en.wikipedia.org)
- சிறிய தீவுக் கூட்டமாக இருப்பினும் இத்தீவுகளில் நூற்றுக்கு மேற்பட்ட இன மக்கள் வாழ்கின்றனர்.
- இந்நாட்டில் இரண்டு பத்திரிகைகள் வெளியாகின்றன(Cayman Compass, Cayman Net News), ஒரு தொலைக்காட்சிச் சேவையும், 16 வானொலிச் சேவைகளும் இயங்குகின்றன.
- நடுக்கடலில் இருக்கும் தீவுகள் என்பதால் இடையிடையே புயலின் தாக்கத்திற்கு உட்படுவது உண்டு.கடந்த எண்பத்தேழு ஆண்டுகளில் முதற் தடவையாக 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11, 12 ஆம் தேதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக பெரிய கேமன்(Grand Cayman) தீவிலுள்ள 95% மான கட்டிடங்கள் சேதமடைந்தன.
9 கருத்துகள்:
pajanula thakavalaith tharum anthimaalaiku mikkavum paradukal.
comihg interest to travel.. Thank you.
அறியவேண்டிய தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்கநன்றி
nalla thakavallitiku nanrai.
Super Super super.
பாராடுக்கள் .
அந்திமாலைக்கு பாராட்டுகள் .
இபடியும் பல நாடுகள் உலகத்தில் இருப்பது அதிசஜம் .
எ னக்கு மிகவும் பிடித்த பகுதி நாடுகாண் ப்ஜணம். அந்திமாலைஇல் .
கருத்துரையிடுக