செவ்வாய், மார்ச் 18, 2014

சத்து நிறைந்த கொத்தமல்லி தோசை

தேவையான பொருட்கள்:

புளுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 3/4 கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
• கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 
• முதலில் புளுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை தனித்தனியாக 2 மணி நேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

• பின்பு ஊற வைத்துள்ள அரிசிகளை கிரைண்டரில் போட்டு, அத்துடன் ஊளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தையும் கழுவிப் போட்டு மென்மையாக அரைக்க வேண்டும்.

• அப்படி அரைக்கும் போது பாதியில் கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

• பின் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

• பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு, நல்லெண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்கவும்.
நன்றி: மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக