வெள்ளி, மார்ச் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 104 உழவு

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து 
இல்லாளின் ஊடி விடும். (1039)
 
பொருள்: நிலத்துக்கு உரியவன் நிலத்தைக் கவனிக்காமல் சோம்பி இருந்தால், அந்த விளைநிலமானது அவனுடைய மனைவி அவனை வெறுக்கும்போது எவ்வாறு பிணங்கிச் சண்டயிடுவாளோ அதேபோல் அவனோடு பிணங்கி அவனை வெறுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக