ஞாயிறு, மார்ச் 09, 2014

ஆவிகளோடு என் முதல் சந்திப்பு !விகளை பார்ப்பதற்கு கருவிகள் எதாவது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா அல்லது அதற்கான முயற்சிகளை இதுவரை யாரவது செய்திருக்கிறார்களா?
-நீலகண்ட குருக்கள், பத்மநாபபுரம்-

விகளை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பலரிடம் இருக்கிறது ஆவி பூதம் பிசாசு இவைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அவைகளை பார்க்க வேண்டுமென்று ஆவல் படுவது இயற்கையானது ஏனென்றால் ஆவி என்பது கண்ணுக்கு தெரியாதது மறைபொருளாக இருப்பது புரிந்துகொள்ள முடியாத ரகசியங்கள் நிரம்பியது என்பதனால் அனைவருக்கும் இந்த ஆர்வம் இருக்கிறது 


நான் மிகவும் சிறியவனாக இருந்த போது பேய் பிசாசுகளில் மீது அதிகப்படியான பயம் எனக்கு உண்டு இருட்டான அறையிலோ தனிமையான பகுதியிலோ இருப்பதற்கு மிகவும் அச்சப்படுவேன் சுவாமி பெயரை சொன்னால் பேய்கள் அண்டாது என்று எனக்கு போதிக்கப்பட்டு இருந்தாலும் கூட பேயை பார்த்த அதிர்ச்சியில் கடவுள் பெயரை சொல்ல மறந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணியும் நடுக்கம் வரும் இத்தகைய மனோபாவம் எனக்கு மட்டும் அல்ல என் வயதை ஒத்த சிறியவர்கள் அனைவருக்குமே வரும் என்ற உண்மை இப்போது தெரிகிறது

இந்த நிலையில் என் பிள்ளைபிராய காதனாயகனாக இருந்த அந்தோணி ராஜ் அண்ணன் ஒரு முறை நான் ஆவியோடு பேசப்போகிறேன் நீயும் வருகிறாயா என்று என்னை கேட்டார் பயமும் அச்சமும் உள்ளுக்குள் இருந்தாலும் ஆர்வம் என்பது அதிகமாக இருந்ததினால் அவரோடு போக சம்மதித்தேன்

அந்தோணி ராஜ் அண்ணன் என்னை தங்கமணி என்பவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனார் எங்கள் ஊரில் தங்கமணி என்பவர் மிகவும் புகழ்பெற்றவர் என்னை போன்ற சிறுவர்களுக்கு அவர் ஒரு அதிசய பேழை விபூதி குங்குமம் பன்னீர் சந்தனம் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்வது அவர் தொழில் என்றாலும் கெளதாரி பிடித்தல் முயல் வளர்த்தல் நாய்குட்டிக்கு பந்து விளையாட கற்று கொடுத்தல் என்பவைகள் தான் அவரது நித்திய பொழுது இதனால் தான் சிறுவர்கள் மத்தியில் அவருக்கு பேரும் புகழும்


அவர் வீட்டின் நடுக்கூடத்தில்... மேலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக